மீனம் மார்ச் மாத ராசி பலன் 2022 | March Month Rasi Palan 2022 Meenam

மீனம் மார்ச் மாத ராசி பலன் 2022 பொதுப்பலன்கள்:
மீன ராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்ப சூழ்நிலை அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடமும் நல்லுறவு இருக்கும். என்றாலும் மூத்த உடன்பிறப்புகளுடன் பேசும் போது கவனம் தேவை. தேவையற்ற பேச்சுகள் மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். இந்த மாதம் புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்து இடுவதற்கு ஏற்ற மாதம் ஆகும். கூட்டுத் தொழிலில் செய்பவர்கள் தொழிலில் நல்ல தன லாபத்தை எதிர்பார்க்கலாம். மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பயில்வார்கள். இந்த மாதம் காய்ச்சல் மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட உடல் உபாதை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் நலனில் அக்கறை தேவை. மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
மீன ராசி இளம் காதலர்களுக்கு இது இனிமையான மாதமாக இருக்கும். இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். திருமணமான தம்பதிகள் இடையிய ஒற்றுமை இருக்கும். மூத்த சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள உறவில் கவனம் தேவை. அவர்களிடம் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
குடும்ப உறவில் மகிழ்ச்சி அதிகரிக்க செவ்வாய் பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் உங்கள் நிதிநிலையில் ஏற்றம் காணலாம். உத்தியோகம் மற்றும் தொழில் மூலம் வருமானம் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் பொருளாதார ஏற்றத்திற்கு காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த மாதம் நிலம் மற்றும் வீடு வாங்குவது லாபம் மிகுந்ததாக இருக்கும். வீடு மராமத்து பணிக்காக செலவுகள் ஏற்படும். கடன் வாங்கும் சூழ்நிலையும் உள்ளது. கணக்குகளை பராமரிப்பதில் கவனம் தேவை.
நிதி நிலையில் ஏற்றம் காண கேது பூஜை
வேலை:
உத்தியோகத்தில் இந்த மாதம் நீங்கள் சிறந்த பலன்களைக் காண இயலும். நீங்கள்; சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். பணியிடத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். நீங்கள் அரசுத் துறையில் இருப்பவர் என்றால் இந்த மாதம் நீங்கள் ஊதிய உயர்வு காணலாம். சுற்றுலா சம்மந்தப்பட்ட துறையில் பணிபுரிபவர்களுக்கு பணியில் நல்ல ஆதாயம் உண்டு.
தொழில்:
இந்த மாதம் சுய தொழில் அல்லது வியாபாரம் சிறப்பாக இருக்கும். குறிப்பாக நிதி அல்லது பணம் சார்ந்த துறையில் தொழில் புரிபவர்கள் அதிக தன லாபங்கள் எதிர்பார்க்கலாம். ஆயத்த ஆடை ஏற்றுமதி சார்ந்த தொழில் செய்பவர்களின் தன நிலை உயரும். பங்கு வர்த்தகம் மற்றும் பொருள் வர்த்தகத்தில் நல்ல ஏற்றத்தையும் தன லாபத்தையும் காணலாம்.
தொழில் வல்லுனர்கள்:
மீன ராசி தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் ஏற்றம் தரும் மாதமாக இருக்கும். அதிலும் குறிப்பாக மிண்ணனுவியல் மற்றும் பொறியியல் துறையைச் சார்ந்தவர்களுக்கு இது பொருந்தும். கல்வித் துறையில் இருப்பவர்களுக்கு வருமான உயர்வு இருக்கும். மைக்ரோ பயாலஜி துறையை சார்ந்த தொழிற் வல்லுனர்களுக்கு வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் உயர்வு கிடைக்க சனி பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் ஒரளவு சீராக இருக்கும். என்றாலும். உங்களுக்கு பெரிய அளவிலான உடல் உபாதைகள் ஏதும் இருக்காது. வயிறு சம்பந்தமான உபாதைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதால் உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் உடல் ஆரோக்கியத்தை சிறந்த முறையில் காத்துக் கொள்ள நடைபயிற்சி மற்றும் தியானம் உதவிகரமாக இருக்கும்.
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு முருகன் பூஜை
மாணவர்கள்:
பள்ளிக்கல்வி படிக்கும் மாணவர்கள் இந்த மாதம் சிறந்த முறையில் கல்வி பயில்வார்கள். தங்கள் இலக்கில் வெற்றி காண்பார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் செயல்பட்டு தங்களின் முயற்சிகளின் மூலம் கல்வியில் முதன்மை பெறுவார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு படித்து முடித்தவுடன் வெளிநாட்டில் வேலையும் கிடைக்கும். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்களின் ஆராய்ச்சியில் வெற்றி கிடைக்கும்.
மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூட கணேஷா பூஜை
சுப நாட்கள்:
15, 16, 18, 20, 23, 24, 27, 28, 29, 30,
அசுப நாட்கள்:
1, 2, 3, 21, 22, 25, 26, 31.
