கும்பம் மார்ச் மாத ராசி பலன் 2022 | March Month Rasi Palan 2022 Kumbam

கும்பம் மார்ச் மாத ராசி பலன் 2022 பொதுப்பலன்கள்:
இந்த மாதம் குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் குதூகலம் இருக்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் காணப்படும். அன்னியோன்யம் கூடும். காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை நிலவும். உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் நல்ல சுமுகமான உறவு நிலை காணப்படும். உத்தியோகத்தில் அனுகூலமான நிலை இருக்கும். பணிகள் சற்று கூடுதலாக இருக்கும். தொழில் சிறப்பாக நடக்கும். தொழில் மூலம் லாபங்கள் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சளி தொந்தரவு மற்றும் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
இளம் வயது கும்ப ராசி அன்பர்கள் மனதில் இந்த மாதம் காதல் அரும்பு மலரும். காதலர்கள் இன்பச்சுற்றுலா செல்வதற்கு ஏற்ற மாதம் ஆகும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இடையே நல்லுறவு நீடிக்கும். குடும்பத்தில் அன்பும் அமைதியும் காணப்படும். உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும். மூத்த சகோதரத்தின் மூலமாக தன உதவிகள் கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும். கணவன் மனைவிக்கு இடையே நல்லிணக்கம் கூடும்.
கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவ துர்கா பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் உங்கள் நிதிநிலையில் ஏற்றமான நிலை இருக்கும். தொழில் மூலம் வருமானம் அதிகரிக்கும். குறிப்பாக கூட்டுத் தொழில் மூலம் அதிக லாபங்களும் ஆதாயங்களும் கிட்டும். பங்கு வர்த்தகம் செய்பவர்கள் அதிக லாபம் காண்பார்கள். குடும்பத் தொழிலை விரிவு படுத்த பணத்தை முதலீடு செய்வீர்கள். உபரி வருமானத்தைக் கொண்டு உங்கள் பழைய கடன்களை அடைப்பீர்கள். வீட்டு உபயோக பொருட்களை வாங்க செலவு செய்வீர்கள்.
தன நிலையில் ஏற்றம் உண்டாக சுக்கிரன் பூஜை
வேலை:
உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு சிறந்த பலன்கள் கிட்டும். நீங்கள் அரசுத் துறையில் பணி புரிபவர் என்றால் உங்களுக்கு வருமான உயர்வு இருக்கும். நீங்கள் தனியார் துறையைச் சார்ந்தவர் என்றால் பணிகள் அதிகமாக இருக்கும். உங்களுக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்படும். வேலை செய்யும் இடத்தில் புதிய யுக்திகளை கையாண்டு உயரதிகாரிகளின் பாராட்டுதலைப் பெறுவீர்கள். சக பணியாளர்களிடம் நீங்கள் நல்லுறவு மேற்கொள்வீர்கள். அவர்களின் ஆதரவு உங்களுக்கு கிட்டும்.
தொழில்:
இந்த மாதம் உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். குறிப்பாக கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். அதிக வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் வருமானம் உயரும். அதிக லாபங்களை சம்பாதிக்கலாம். தொழில் விருத்தி அடையும். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்த வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் குறிப்பாக வெளிநாட்டு ஏற்றுமதி தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் இந்த மாதம் கிடைக்கும். பயணம் சார்ந்த தொழில் செய்பவர்கள் தொழிலில் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம்.
தொழில் வல்லுனர்கள்:
இந்த மாதம் நீங்கள் திறமையுடன் பணி புரிவீர்கள். மேலும் நவீன யுக்திகளைப் பயன்படுத்தி அதில் வெற்றியும் காண்பீர்கள். இதனால் நீங்கள் வாடிக்கையாளர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் மேலதிகாரியின் பாராட்டையும் பெறுவீர்கள். வெளிநாட்டில் தொழில் வாய்ப்பை எதிர் பார்த்து காத்திருந்த உங்கள் கனவுகள் இந்த மாதம் நனவாகும். வெளிநாட்டில் தொழில் வாய்ப்பு கிட்டும்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் உயர்வு கிடைக்க ராகு பூஜை
ஆரோக்கியம்:
ஒய்வு ஒழிச்சல் இன்றி தொடர்ந்து நீங்கள் பணிகளை மேற்கொள்வதன் காரணமாக உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். அதன் காரணமாக தலை வலி மற்றும் தோள்பட்டை வலி போன்ற உபாதைகளை நீங்கள் சந்திக்க நேரும். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எளிய உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். உங்கள் தாயாரின் உடல் நலனில் அக்கறை தேவை.
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வைத்தியநாத பூஜை
மாணவர்கள்:
மாணவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதமாக இருக்கும் என்றாலும் சில தடைகளை சந்திக்க நேரும். இந்த மாத இறுதியில் மாணவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள். உயர்கல்வி மாணவர்களுக்கு இது சிறந்த மாதமாக இருக்கும். ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவர்கள் விடாமுயற்சியுடன் கல்வி பயின்று வெற்றி காண்பார்கள்.தொலை தூரக் கல்வி மூலம் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பில் அதிக கவன செலுத்தி படிப்பார்கள்
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க புதன் பூஜை
சுப நாட்கள்:
4, 5, 7, 8, 9, 13, 14, 15, 16, 22, 23, 24.
அசுப நாட்கள்:
1, 2, 3, 6, 10, 11, 12, 17, 18, 19, 20.
