மகரம் மார்ச் மாத ராசி பலன் 2022 | March Month Rasi Palan 2022 Magaram

மகரம் மார்ச் மாத ராசி பலன் 2022 பொதுப்பலன்கள்
மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு கருத்தொருமித்து வாழ்வீர்கள். வீட்டில் விருந்து விசேஷங்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இந்த மாதம் உங்களுக்கு கலைகளில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். உங்கள் உத்தியோகத்தில் சிறந்த முன்னேற்றம் இருக்கும். குறிப்பாக அரசுத் துறை சார்ந்து தொழில் செய்பவர்கள் இந்த மாதம் சிறந்த முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் வெற்றி வாய்ப்பு உங்களை நாடி வரும். புகழ் உங்களை தேடி வரும். உங்கள் தொழிலும் இந்த மாதம் சிறப்பாக நடக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் அதில் வெற்றி காண்பார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
இளம் வயது மகர ராசி காதலர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதமாக இருக்கும். துணையின் மீதான கவர்ச்சி கூடும். கணவன் மனைவி கருத்தொருமித்து வாழ்வீர்கள். இருவரும் பரஸ்பரம் நல்ல புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வ்வீர்கள். அன்னியோன்யம் கூடும். உறவினர்களிடம் நல்ல சுமுகமான உறவு நிலை காணப்படும். நண்பர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தேவையற்ற பேச்சு மற்றும் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும்.
காதலில் வெற்றி உண்டாக லக்ஷ்மி பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் உங்கள் நிதிநிலை ஒரளவு சீராக இருக்கும். என்றாலும் தொழில் மூலம் வருமானம் குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது. பங்கு மற்றும் பொருள் வர்தக நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கும் லாபங்களை ஈட்டுவதற்கும் இந்த மாதம் ஏற்றதாக உள்ளது. பிட் காயின் முதலீடுகள் மூலமும் அதிக லாபங்களை எதிர்பார்க்கலாம்.
நிதிநிலையில் உயர்வு பெற ராகு பூஜை
வேலை:
உத்தியோகத்தைப் பொறுத்தவரை உங்கள் பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்கும். சக பணியாளர்கள் நட்புறவுடன் ஆதரவு அளிப்பார்கள். நல்ல ஒத்துழைப்பை அளிப்பார்கள். பணியிடத்தில் நீங்கள் நல்ல பெயர் பெறுவீர்கள்.அலுவலக நிமித்தமாக நீங்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதன் மூலம் ஆதாயம் காண்பீர்கள். அரசு உத்தியோகத்தில் பணிபுரியவர்கள் இந்த மாதம் வெற்றி வாய்ப்பை காண்பீர்கள்.
தொழில்:
இந்த மாதம் தொழில் சிறப்பாக இருக்கும். குறிப்பாக கூட்டுத் தொழில், உணவு மற்றும் கேளிக்கை விடுதி சம்பந்தப்பட்ட தொழில் புரிபவர்களுக்கு நல்ல லாபங்கள் கிட்டும். இந்த மாதம் புதிய முதலீடுகள் எதையும் மேற்கொள்ளாதீர்கள் பூ மற்றும் காய்கறி வியாபாத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த வங்கிக் கடன்கள் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
தொழில் வல்லுனர்கள்:
இந்த மாதம் உங்களுக்கு அதிக பொறுப்புகள் காணப்படும். உங்களுக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்படும். வாடிக்கையாளர்களின் நன்மைதிப்பப் பெறுவீர்கள். நீங்கள் சிறந்த முறையில் பணியாற்றினாலும் உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்கள் அதிகம் போராட வேண்டியிருக்கும். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் சில சிரமங்களை உணர்வீர்கள். தொழிலில் போட்டிகளை சந்திப்பீர்கள்.
தொழில் மற்றும் உத்தியோக உயர்வுக்கு முருகன் பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் அதனைக் தக்க வைத்துக் கொள்ள நீங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொள்வது நன்மை பயக்கும். தாயாருக்கு தலை சாந்த உபாதைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தந்தைக்கு கால் மூட்டு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வைத்தியநாத பூஜை
மாணவர்கள்:
பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்றாலும் விடா முயற்சி கடைபிடிக்க வேண்டும். பொறுமையுடன் கடினமாக உழைத்துப் படித்தால் வெற்றி நிச்சயம். உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூடும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
கல்வியில் வெற்றி கிடைக்க கனேஷா பூஜை
சுப நாட்கள்:
13, 14, 15, 20, 21, 22, 23, 24, 27, 28, 29, 30.
அசுப நாட்கள்:
16, 17, 18, 19, 25, 26, 31.
