AstroVed Menu
AstroVed
search
search

மகர ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2023-2026 | Magaram Rasi Sani Peyarchi Palangal 2023-2026

dateMarch 16, 2022

மகர ராசி சனி பெயர்ச்சி 2023 பொதுப் பலன்கள்

மகர ராசிக்காரர்கள் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் ஒழுக்கமானவர்கள், நடைமுறை அறிந்து நடப்பவர்கள் மற்றும் கவனமுடன் செயல்படுபவர்கள். ஏழரை சனியின் பிடியில் இருப்பதால்  மனச்சோர்வு, பற்றின்மை, தடைகள் மற்றும் தாமதங்களை சந்தித்து வருகிறீர்கள். ஏழரை சனி காலம் முடியாத போதிலும் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில்  சனியின் சஞ்சாரம் நடைபெறுவதால் இந்தக் காலக் கட்டத்தில் உங்களுக்கு சற்று ஆறுதல் கிட்டும். இது உங்கள் ராசியைக் கடப்பது நன்மைக்கான ஆதாரமாக இருக்கும். தினமும்  சிறிது நேரம் பிரார்த்தனைக்காக செலவிடுங்கள், அது சோதனை நேரங்களில் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

 சனிப்பெயர்ச்சி 2023-2026 - சனி பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் பூஜையில் பங்கு கொள்ளுங்கள்


உத்தியோகம்:

அக்டோபர் 2023 வரை, உங்கள் தொழில் ஸ்தானத்தில்  கேது இருப்பதால், உங்கள் தொழில் வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் நீங்கள் ஒதுங்கியிருக்கலாம். பணிச்சுமை அதிகரிக்கும், எனவே உங்கள் வேலையை முடிக்க தெளிவான திட்டத்துடன் முயற்சி செய்யுங்கள். குறிப்பிட்டுள்ளபடி, ஏழரை சனியின் நிலை இன்னும் தொடர்கிறது, எனவே உங்கள் சூழலில் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். அக்டோபர் 2023க்குப் பிறகு, விஷயங்கள் சீராகும், உங்கள் கடின உழைப்பின் முடிவுகள் கவர்ச்சிகரமான வருமானத்தைத் தரக்கூடும்.

காதல்/ குடும்ப உறவு

குழந்தைகள் உங்கள் கருத்துக்களுக்கு எதிராக இருக்கலாம் மற்றும் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம், இருப்பினும் நீங்கள் அத்தகைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம். இங்கே நீங்கள் ஒரு சமரச மனப்பான்மை மற்றும் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்க வேண்டும். பேச்சைக் கையாளும் வீட்டில் சனி இருப்பதால், பொது இடங்களில் பேசும்போது  நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உடன்பிறந்த உறவுகள் உதவாமல்  போகலாம். தனிமையில் இருப்பவர்கள் கசப்பான அனுபவத்தை சந்திக்க நேரிடும் என்பதால், உறவைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலர் தங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக உங்களை அணுகலாம், எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

திருமண வாழ்க்கை 

திருமணம் செய்து கொள்ள காத்திருப்பவர்கள் தங்களின் சிறந்த  துணையை காணலாம். கருத்து வேறுபாடுகள் உள்ள தம்பதிகள் தங்கள் ஈகோவை விட்டுவிடலாம், எனவே, பிணைப்பு அதிகரிக்கும். குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை அதிக  உணர்ச்சிவசப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது  என்பதால்  அவர்களிடம் அதிக புரிதல் இருப்பது உங்கள் உறவுக்கு நல்லது.

நிதிநிலை

எதிர்பார்த்த பணப்புழக்கம் இருக்கும்.  மேலும் உங்கள் சேமிப்பை அதிகரிக்க சரியாக திட்டமிட வேண்டும். ஆடம்பர வசதிகளை குறிக்கும் ராசியில் ராகு சஞ்சரிப்பதால்  ஆடம்பரங்களுக்கு அதிக செலவு செய்வீர்கள். இது உங்கள் சேமிப்பைக் குறைக்கும். சிலருக்கு சில முதலீடுகளைச் செய்வது பற்றிய யோசனைகள் இருக்கலாம், அது பின்னர் லாபத்தைத் தரும். சாத்தியமான அனைத்து ஆராய்ச்சிகளையும் செய்து, விதிமுறைகளில் திருப்தி அடைந்தவுடன், தொடரவும். வணிக ஒப்பந்தங்கள் நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது, மேலும் சிலர் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கு கடன்களைப் பெறலாம் அல்லது சில நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய தங்கள் சொத்துக்களை விற்கலாம்.  

மாணவர்கள்:

நல்ல மதிப்பெண்கள் பெற மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். சில கவனச் சிதறல்களால் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெறலாம். வெளிநாட்டில் உயர்கல்வி கற்க இடம்பெயர விரும்புபவர்கள் தங்கள் கனவுகள் நனவாகக் காண்பார்கள்.  ஆனால் சில கூடுதல் முயற்சி மற்றும் ஊக்கம் தேவை. குருவின் நிலை வலுவாக இருப்பதால், உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும், இருப்பினும் சில தடைகளை சந்திக்க நேரும். எனவே நீங்கள் உங்கள் இலக்கில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆரோக்கியம்:

ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணலாம். நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயைக் கட்டுப்படுத்த உதவும் முறையான உணவைப் பின்பற்ற வேண்டும். விறுவிறுப்பான நடைபயிற்சி, யோகா மற்றும் தியானம் உள்ளிட்ட செயல்பாடுகளும் உங்கள் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும்.  வாகனம் ஓட்டும்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் வேக அளவைக் கண்காணிக்க வேண்டும். ஒரு சிலருக்கு  முதுகெலும்பு மற்றும் முழங்கால் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். எனவே அன்றாட நடவடிக்கைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆற்றலை வழங்கும் கீரைகள், புதிய காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடுங்கள்.

பரிகாரங்கள் :-

  • சனிக்கிழமை உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் மேற்கொள்ளுங்கள்
  • ஒவ்வொரு சனிக்கிழமையும் கணபதி, ஆஞ்சநேயர் மற்றும் விநாயகரை வழிபடுங்கள். ஹனுமார் சாலீஸாவை பாராயணம் செய்யுங்கள்.
  • சனிக்கிழமை ஏழை எளியவர்களுக்கு போர்வை மற்றும் ஆடை  தானம் செய்யுங்கள்
  • அசைவம் மற்றும் மது இவற்றை சனிக்கிழமை தவிருங்கள்
  • சனிக்கிழமை நாய், காகம் மற்றும் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் அளியுங்கள்
  • மருத்துவமனைக்கு முடிந்த அளவு தொண்டு செய்யுங்கள் 

banner

Leave a Reply