Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW
Search

கரு காக்கும் கர்ப்பரட்சாம்பிகை மந்திரம் | Karparatchambigai Slokam for Safe Pregnancy in Tamil

November 22, 2021 | Total Views : 4,469
Zoom In Zoom Out Print

குழல் இனிது யாழ் இனிது என்பர் கொஞ்சும் மழலை சொல் கேளாதார்  பெண்மை என்பது தாய்மையில் தான் முழுமை அடைகிறது. இல்லறம் என்பதும் குழந்தைப் பேறு கிடைத்த பின்தான் அதிக அளவில் இனிமையைக் கொண்டு சேர்க்கிறது. தாய்மை என்பதும் கருவுருவதும் ஒரு பெண்ணிற்கு அதிக மகிழ்ச்சியை அளிக்கும். அந்தக் குழந்தையை ஈன்றெடுக்கும் தருணம் என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் மறுபிறப்பு என்றும் கூறலாம். 

கர்ப்ரட்சாம்பிகை என்ற சொல்லுக்கு கருவிலிருக்கும் குழந்தையை காக்கும் அன்னை என்பது பொருளாகும். தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் திருக்கருகாவூர் தாலுக்காவில் கர்ப ரட்சாம்பிகை கோயில் இருக்கிறது. அன்னை பார்வதியும், இறைவன் சிவனும் இந்த கோயிலில் கர்பரட்சாம்பிகை மற்றும் முல்லை வன நாதர் என்ற பெயரில் குடி கொண்டுள்ளனர்.  பெண்ணிற்கு கருவைக் கொடுத்து அதனைக் காத்து ரட்சித்து நல்ல முறையில் ஈன்றெடுக்க உறு துணையாக நிற்கும் அன்னை கர்ப்பரட்சாம்பிகை அன்னை ஆவாள். கர்ப்பிணிகளுக்கும் கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கும் எவ்விதமான கெடுதலும் ஏற்படாமல் காத்து, ஸுகப்ரஸவத்தின் மூலம் சிறந்த குணமுள்ள குழந்தை பிறக்க அருள் புரிந்து வரும் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகையை கீழ்கண்ட  ஸ்லோகம் கூறி வழிபடுவதன் மூலம் பெண்களுக்கு கீழ்க்கண்ட நற்பலன்கள் கிட்டும். 

குழந்தை வரம் பெறுவதற்கான பரிகாரங்களை அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள் 

கர்ப்பப்பை சார்ந்த கோளாறுகள் நீங்கும். 
மலட்டுத் தன்மை நீங்கும். 
கர்ப்ப ஸ்ராவம் (அபார்ஷன்) ஏற்பDடாது
குறைப் பிரசவம் ஏற்படாது
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கை கூடும். 
சகல சௌபாக்கியங்களும் கட்டும். 

கர்ப்பரடாசாம்பிகை மந்திரம்

ஸ்ரீ மாதவீகானனஸ்தே ரக்ஷாம்பிகே
பாஹி மாம் பக்தம் ஸ்துவந்தம் /
வாபீதடே வாமபாகே வாம
தேவஸ்யதேவ்ஸ்ய தேவீஸ்திதாத்வம் /
மாந்யா வரேண்யாவதான்யா-பாஹி
கர்ப்பஸ்த்த ததா பக்த லோகான் ( ஸ்ரீ)

ஸ்ரீகர்ப்பரக்ஷாபுரயோ திவ்ய
சௌந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய காத்ரி
தாத்ரீ ஜனத்ரீ ஜனானாம் திவ்ய
ரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம் பஜேதாம் ( ஸ்ரீ)

ஆஷாடமாஸே ஸுபுண்யே -சுக்ர
வாரே ஸுகந்தேன கந்தேன லிப்தா
திவ்யாம்பராகல்ப வேஷா வாஜ
பேயாதி யாகஸ்த பக்தைஸ்ஸுத்ருஷ்டா (ஸ்ரீ)

கல்யாண தாத்ரீம் நம்ஸ்யே – வேதி
காட்யஸ்த்ரியாகர்ப்பரக்ஷாகரீம் த்வாம்
பா லைஸ்ஸதாஸேவிதாங்க்ரிம் – கர்ப்ப
ரக்ஷார்த்தமாராதுபேதைருபேதாம் ( ஸ்ரீ)

ப்ரம்ஹோத்ஸவே விப்ரவித்யாம் – வாத்ய
கோஷேண துஷ்டாம் ரதே ஸந்நிவிஷ்டாம்
ஸர்வார்த்த தாத்ரீம் பஜேஹம் – தேவ
ப்ருந்தைரபீட்யாம் ஜகன்மாதரம்- த்வாம் (ஸ்ரீ)

தத்க்ருதம் ஸ்தோத்ரரத்னம் – தீக்ஷி
தானந்தராமேண தேவ்யாஸ்ஸுதுஷ்ட்யை
நித்யம் படேத்யஸ்து பக்த்யா – புத்ர
பௌத்ராதி பாக்யம் பவேத்தஸ்ய நித்யம் (ஸ்ரீ)

banner

Leave a Reply

Submit Comment