கர்பரக்ஷாம்பிகை 108 போற்றி | Garbarakshambigai 108 Potri in Tamil

Vaikasi Visakam Ceremonies to Gain Courage & Overcome Negativity Join Now
x
x
x
cart-added The item has been added to your cart.

கர்பரக்ஷாம்பிகை 108 போற்றி | Garbarakshambigai 108 Potri in Tamil

November 22, 2021 | Total Views : 140
Zoom In Zoom Out Print

ஒவ்வொரு பெண்ணிற்கும் பெண்மை என்பது தாய்மையில் தான் முழுமை பெறுகிறது. குழந்தைப் பேறு இன்றி இல்லறமாவது நல்லறமாவது இல்லை. ஒரு சிலருக்கு திருமனமானாவுடனேயே குழந்தை பிறந்து விடுகிறது சிலருக்கு கால தாமதம் ஆகிறது. சில சமயங்களில் அவள் தனது உற்றார் உறவினர் மற்றும் சுற்றத்தாரின் மலடி என்ற பேச்சுக்கு ஆளாகும் நிலை இன்றும் இருக்கிறது. இது உளவியல் ரீதியாகவும் அவளை பாதிக்கிறது கருவை உருவாக்கித் தருபவள் கர்ப்பரட்சாம்பிகை. அவளை வணங்குவதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றுள் எளிதான ஒன்றாக கர்ப்பரட்சாம்பிகையைப் போற்றிப் பாடும் பாடலான 108 போற்றி விளங்குகிறது. 

குழந்தை வரம் பெறுவதற்கான பரிகாரங்களை அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள் 

கருவைக் காக்கும் தாயாக, தாய்மையை காக்கும் தாயாக விளங்குபவள் அன்னை கர்ப்பரட்சாம்பிகை. குழந்தைப் பேறு வேண்டும் தாய்மார்கள் வெள்ளிக்கிழமைகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் பூஜையறையில் நெய்தீபங்கள் ஏற்றி, கர்ப்பரட்சாம்பிகையை மனதில் தியானித்து இந்த 108 போற்றி துதிகளை கூறி வந்தால் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படாது. பிரசவ கால வேதனைகள் வருத்தாது. அறுவை சிகிச்சை பிரசவம் நேராது, சுகப்பிரசவம் ஏற்படும். குழந்தையும் முழு வளர்ச்சி பெற்றதாக எந்த விதக் குறைபாடும் இன்றிப் பிறக்கும். மேலும் திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்களும் இந்தப் பாடலை பக்தி சிரத்தையுடன் படிப்பதன் மூலம் திருமணம் விரைவில் நடைபெறும் குழந்தைப் பேறும் எளிதாக கிட்டும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. 

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை 108 போற்றி

1.ஓம் கருகாக்கும் நாயகியே போற்றி 
2.ஓம் கர்ப்ப ரக்ஷாம்பிகையே போற்றி 
3.ஓம் கருகாவூர் தேவியே போற்றி 
4.ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி 
5.ஓம் ஈஸ்வரனின் இதயக்கனியே போற்றி
6.ஓம் கருகாவூர் எந்தையின் கண்மணியே  போற்றி
7.ஓம் முல்லைவனநாதரின் சுந்தரியே போற்றி 
8.ஓம் மூவுலகும் காக்கும் அன்னையே போற்றி
9.ஓம் மைந்தன் வேண்ட வரம் தருவாய் போற்றி 
10.ஓம் மாதர் மனம் மகிழ்ச் செய்வாய் போற்றி 
11.ஓம் எங்கும் தீராத குறை தீர்ப்பவளே போற்றி 
12.ஓம் எங்களை என்றும் காப்பவளே போற்றி 
13.ஓம் பிள்ளைக் கலி தீர்க்கும்பேரொளியே போற்றி 
14.ஓம் பிறவிப் பயன் தந்து அருள்வாய் போற்றி 
15.ஓம் பிண்டமாய் இருக்கும் கருவளர்ப்பாய் போற்றி 
16.ஓம் பிரம்மனின் படைப்புக்கு உயிர் தருவாய் போற்றி
17.ஓம் முல்லைவனத்தில் அரசாள்வாய் போற்றி 
18.ஓம் நித்திருவர் தொழுத நித்திலமே போற்றி 
19.ஓம் நற்றவத்திற்கு அருளும் நாயகியே போற்றி 
20.ஓம் நாடிவரும் பக்தர் துயர்களைவாய் போற்றி 
21.ஓம் சர்வ வல்லமை பெற்ற ஈஸ்வரியே போற்றி 
22.ஓம் சர்வேஸ்வரனின் சரிபாதியே போற்றி 
23.ஓம் சங்கடங்கள் தீர்க்கும் சங்கரியே போற்றி
24.ஓம் சார்ந்து நிற்போரை ரஷிப்பாய் போற்றி 
25.ஓம் பெண்கள் கருவறையை காப்பவளே போற்றி 
26.ஓம் பிரியமுடன் எங்களை வாழ்த்துவாய் போற்றி
27.ஓம் பாதியில் கலையாத கரு தந்தாய் போற்றி 
28.ஓம் பாரினில் மகிழ்வான் வாழ்வளிப்பாய் போற்றி
29.ஓம் நெய்யாலே படிமெழுக நீ மகிழ்வாய் போற்றி 
30.ஓம் மெய்யான பக்திக்கு உருகிடுவாய் போற்றி 
31.ஓம் தூய்மையுடன் வணங்குவோர் துயர்துடைப்பாய் போற்றி 
32.ஓம் வாய்மையுடன் வரம் தந்து வளம் தருவாய் போற்றி 
33.ஓம் வேதிகைக்கு அருள் சுரந்த அன்னையே போற்றி
34.ஓம் வேண்டுபவர் அருகினில் வந்திடுவாய் போற்றி 
35.ஓம் வனிதையரின் வாழ்விற்கு வரமாளாய் போற்றி 
36.ஓம் வாழ்நாளில் வழிகாட்டும் வடிவழகே போற்றி 
37.ஓம் கலைந்த கர்ப்பம் உருவாக்கி உயிர் கொடுத்தாய் போற்றி 
38.ஓம் காமதேனு அழைத்து தாய்ப்பால் தந்தாய் போற்றி 
39.ஓம் தம்பதியாய் வருவோர்க்கு தஞ்சமளிப்பாய் போற்றி 
40.ஓம் தாயே உன் அருள் என்றும் தர வேண்டும் போற்றி 
41.ஓம் வலக்கரத்தால் அபயமளிக்கும் வனிதாமணியே போற்றி 
42.ஓம் இடக்கரத்தால் கர்ப்பத்தைக் காத்து நிற்ப்பாய் போற்றி
43.ஓம் பத்ம பீடத்தில் அமர்ந்திருக்கும் பார்வதியே போற்றி 
44.ஓம் பிரசவத்தில் துணையிருக்கும் பெரிய நாயகியே போற்றி 
45.ஓம் கருகாமல் கருகாக்கும் கண்மணியே போற்றி 
46.ஓம் கர்ப்புரியில் வசிக்கும் கற்பகமே போற்றி 
47.ஓம் அகில உலகம் காக்கும் லோகநாயகியே போற்றி 
48.ஓம் அன்னை என்ற அருள் தந்து துயர்தீர்ப்பாய் போற்றி 
49.ஓம் மாதவிவநேச்வரரின் மாதரசியே போற்றி 
50.ஓம் முல்லைக் கொடி இடையே வந்த மெல்லியனே போற்றி 
51.ஓம் ஈஸ்வரனின் இதயத்தில் வீற்றிருப்பாய் போற்றி 
52.ஓம் ஈரேழு லோகத்தையும் என்றும் காப்பாய் போற்றி 
53.ஓம் கடம்பவன சுந்தரியே கற்புக்கரசியே போற்றி 
54.ஓம் காலம் பூராவும் கர்ப்பை காப்பவளே போற்றி 
55.ஓம் கல்லாக நின்று கருணைபொழிவாய் போற்றி 
56.ஓம் கதிரொளியே கனகமே கண்மணியே போற்றி 
57.ஓம் மலடி என்ற பெயர் நீக்கும் மங்களமே போற்றி 
58.ஓம் மங்கையர்க்கு அருகிலிருக்கும் மந்திரமே போற்றி 
59.ஓம் மருத்துவர்க்கும் சக்தி தரும் மாதவியே போற்றி 
60.ஓம் மறுமையிலும் உடனிருந்தும் மகிழ்விப்பாய் போற்றி 
61.ஓம் அசையும் கருவை அலுங்காமல் காப்பாய் போற்றி 
62.ஓம் அகிலத்தின் இயக்கத்தில் ஆனந்திப்பாய் போற்றி 
63.ஓம் அம்மா என்றுன்னை ஆராதிப்பேன் போற்றி 
64.ஓம் அம்மாவாய் என்னை ஆக்கினாய் போற்றி
65.ஓம் மகேஸ்வரி உலகையே ஆள்கிறாய் போற்றி 
66.ஓம் மங்கலங்கள் பல தரும் மாதாவே போற்றி 
67.ஓம் ஸ்ரீ சக்ர வாசினி ஸ்திரீ தனமே போற்றி 
68.ஓம் சத்ரு பயம் நீங்க சரண்டைந்தேன் போற்றி 
69.ஓம் பிள்ளையில்லா தவிப்புக்கு பிரசாதமளிப்பாய் போற்றி 
70.ஓம் பிரபஞ்சத்தில் பெண்களை காப்பவளே போற்றி
71.ஓம் பகவானின் ப்ரீதியே பரதேவதையே போற்றி 
72.ஓம் லிரத்யனாமாய் என்னுடன் இருப்பவளே போற்றி 
73.ஓம் உற்சாகமாய் தோன்றும் கர்ப்பம் காப்பாய் போற்றி 
74.ஓம் ஓழுங்காய் என் பிள்ளை பிறக்கச் செய்வாய் போற்றி 
75.ஓம் உன்னையன்றி யாருமில்லை சரணடைந்தேன் போற்றி 
76.ஓம் ஊரார் மெச்ச நான் வாழ வாழ்த்துவாய் போற்றி 
77.ஓம் காந்த கண்ணழகி முத்துப்போல் பல்லழகியே போற்றி 
78.ஓம் மின்னும் மூக்கழகி புன் முறுவற் சிரிப்பழகி போற்றி 
79.ஓம் சொர்ணமும், வைரமும் மின்ன ஜொலிக்கும் அழகியே போற்றி 
80.ஓம் ஒய்யார வடிவழகி அருள் மணக்கும் பேரழகியே போற்றி 
81.ஓம் துக்கங்கள் தீர்க்கும் துணையே போற்றி 
82.ஓம் துன்பமில்லாத வாழ்வருளும் தேவியே போற்றி 
83.ஓம் சங்கடம் தீர்க்கும் சங்கரியே போற்றி 
84.ஓம் சலனமில்லா வாழ்வருளும் சாம்பவியே போற்றி 
85.ஓம் மழலைச் செல்வம் தர மனமிரங்குவாய் போற்றி 
86.ஓம் மாதர்க்கு நீ என்றும் அரணாவாய் போற்றி 
87.ஓம் கதியென்று நம்பினவருக்கு கருணைசெய்வாய் போற்றி 
88.ஓம் கண்டவுடன் கஷ்டம் தீர்க்கும் கெளரியே போற்றி 
89.ஓம் நெஞ்சிற் கவலைகள் நீக்குவாய் போற்றி 
90.ஓம் செஞ்சுடர் குங்குமம் தரித்தாய் போற்றி 
91.ஓம் அஞ்சுமென் மனத்துக்கு ஆறுதலே போற்றி 
92.ஓம் தஞ்சம் நீயே தாமரையே போற்றி 
93.ஓம் சக்தியின் வடிவமே போற்றி 
94.ஓம் பக்தியுடன் தொழுவோரின் பரதேவி போற்றி 
95.ஓம் நித்தமுன் அருள்வேண்டி நமஸ்கரித்தேன் போற்றி 
96.ஓம் நீயிருக்க பூவுலகில் பயமில்லை போற்றி 
97.ஓம் மனமெல்லாம் நீ நிறைந்தாய் மகேஸ்வரி போற்றி 
98.ஓம் மங்கள வாழ்வுதந்து மகிழ்விப்பாய் போற்றி 
99.ஓம் மங்கையரின் கர்ப்பை காக்கின்றாய் போற்றி 
100.ஓம் கருகாவூர் அரசியே கருணாரசமே போற்றி 
101.ஓம் தலைமுறை தழைக்கச் செய்யும் தாயே போற்றி 
102.ஓம் குலம் வாழ மகருளும் மாதே போற்றி 
103.ஓம் சகலரும் உன் சக்தி சார்ந்தோம் போற்றி 
104.ஓம் சோர்வு நீங்க உன் பாதம் சரணடைந்தோம் போற்றி 
105.ஓம் ஜயம் வேண்டும் ஜயம் வேண்டும் போற்றி 
106.ஓம் ஜகத்தினில் எங்கள் சக்தி ஓங்க வேண்டும் போற்றி 
107.ஓம் ஜீவனை ஜனிக்க வைக்கும் ஜகன்மாதா போற்றி 
108.ஓம் ஜயமங்களம் ஜயமங்களம் ஜனனியே போற்றி 

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos