Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Search

காரிய சித்தி மாலை | Kariya Siddhi Maalai Lyrics in Tamil

November 22, 2021 | Total Views : 5,656
Zoom In Zoom Out Print

நாம் எந்தவொரு காரியத்தைத் துவக்குவதற்கு முன்னும் முழுமுதற் கடவுளான கணபதியை வணங்குவது வழக்கம் ஆகும். ஆணை முகத்தவனை வணங்கிச் செய்யும் எந்தவொரு காரியமும் தடையின்றி நடைபெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. காரிய சித்தி மாலை அல்லது  காரிய சித்தி மந்திரம் காஷ்யப மஹரிஷி  என்னும் ரிஷியால் வட மொழியில் இயற்றப்பட்ட பாடல் ஆகும். இதன் தமிழாக்கத்தை  கச்சியப்ப முனிவர் என்பவர் நமக்கு வழங்கி உள்ளார்கள். இந்தப் பாடல் எட்டு பத்திகளைக் கொண்டது. இதனை அஷ்டகம் என்றும் கூறலாம். அஷ்ட என்ற வட மொழிச் சொல்லுக்கு எட்டு என்று பொருள்.  எட்டு பத்திகளைக் கொண்ட இந்தகாரிய சித்தி மந்திரம், காரிய சித்தி அஷ்டகம் என்றும் கூறப்படும். 

தனித் தனியாகப் பூக்களைத் தொடுத்து மாலை கோர்ப்பது போல வார்த்தைகளைக் கோர்த்து  அதனைப் பல பத்திகளில் அமைத்து இறைவனை வேண்டிப் பாடும் போது அது மாலை ஆகின்றது. பூக்களைக் கோர்த்து பூமாலை போடுவது போல வார்த்தைகளைக் கோர்த்து பாடல்கள் வடிவில் பாமாலை சூட்டும் போதும் இறைவன் மகிழ்ந்து நமக்கு வரங்களை அளிக்கிறான்.

வாழ்வில் ஏற்படும் தடைகளை நீக்க கணபதி ஹோமம் செய்யுங்கள் 

நாம் மேற்கொள்ளும் எந்தவொரு காரியமாக இருந்தாலும் அது எந்தவித தடையுமின்றி நடைபெற இந்தக் காரிய சித்தி மாலை பாடி வணங்கலாம். இது முழுமுதற் கடவுளான கணபதிக்கு உரிய பாடல் ஆகும். 

காரிய சித்தி மாலை

பாடல் 1 :

பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.

பொருள் :  இந்தப் பூவுலகில் இருக்கும் அனைத்து விதமான பற்றுகளை அறுக்கும் குணம் அளிப்பவனும், சத்குணங்களின் உற்பத்தியிடமாகவும், இந்தப் பிரபஞ்சத்தை ஆக்கியும், காத்தும், மறைத்தும், லீலைகள் செய்பவனும், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் அறுபத்துநான்கு கலைகளுக்கும் தலைவனாக இருக்கும் முழு முதற்கடவுளாம் விநாயகப்பெருமானை மனம் நிறைந்த அன்புடன் தொழுகின்றோம்.

பாடல் 2 :

உலகம் முழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள் எவன் அவ்
உலகிற் பிறக்கும் விகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலகு முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.

பொருள் : இல்லாத இடமே இல்லை என்னும் வகையில்  எல்லா உலகங்களிலும் நீக்கமற ஒருவனாய் நின்று காப்பவர். உலகில் நிகழும் மாற்றங்களுக்கு அப்பாற்பட்டவர். அறியாமை இருளை அகற்றும் ஒளியாகத் திகழ்பவர்; உலக உயிர்களின் வினைப் பயனைக் களைபவர். அவரே பெருந்தெய்வம் கணபதி ஆவார். அப் பெருந்தெய்வத்தின் திருவடிகளை மனமுவந்து  சரணடைவோம்.

பாடல் 3 :

இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க் கூறின்றிக் கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதியை பொன் சரணம் சரணம் அடைகின்றோம்.

பொருள்: தீயில் விழுந்த பஞ்சு எவ்வாறு பொசுங்கிப் போகிறதோ அது போல  நம் அனைத்துத் துன்பங்களையும் பொசுக்குபவரும், உலக உயிர்களை மீண்டும் பிறவா நிலை காணும் வகையில் அமரர் உலகில் சேர்பிப்பவரும், நமது பாவங்கள் தொலைய அருள் புரிபவரும், நீண்ட தந்தங்களையுடையவருமான  கணபதியின் பொன்னான திருவடிகளை சரணடைகின்றோம்.

பாடல் 4 :

மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

பொருள் : எல்லா மூர்த்தங்களுக்கும் மூல மூர்த்தமாக இருப்பவரும், அனைத்து இடங்களிலும்  எழுந்தருளி  கருணை புரிபவரும், கங்கை முதலான எல்லா நதிகளிலும் நிறைந்திருப்பவரும், எல்லாவற்றையும் அறிந்தும் ஏதும் அறியாதவர் போல் இருப்பவரும், எல்லா உயிர்களுக்கும் நாளும் நலம் புரிபவரும், அறியாமையை அகற்றி நல்லறிவைத் தருபவருமாகிய கணபதிப் பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து நாம் சரணடைவோம்.

பாடல் 5 :

செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன்
அந்தப் பொய்யில் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.

பொருள் : செயல்களாகவும், செய்யப்படும் பொருள்களாகவும் இருப்பவர் கணபதி. எங்கும் எதிலும் வியாபித்து  நீக்கமற நிறைந்திருப்பவர் கணபதி . நாம் செய்யும் வினைப்பயனாக இருப்பவர் கணபதி . அவ்வினைப் பயன்களில் இருந்து நம்மை விடுவிப்பவர் கணபதி . முழுமுதற் கடவுள் கணபதி ஆவார். அந்த மெய்யான தெய்வத்தை நாம் சரணடைவோம்.

பாடல் 6 :

வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன் எவன் எண்குணன் எவன் அப்
போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

பொருள் : வேதங்களுக்கு எல்லாம் தலைவராக இருப்பவரும், யாவராலும் அறிந்து கொள்வதற்கு அரிய மேலானவனாக இருப்பவரும், வேதத்தின் முடிவாக இருப்பவரும், குற்றமற்றவரும், வெட்ட வெளியில் எழும் ஓங்காரத்தின் ஒலி வடிவாக இருப்பவரும் கணபதியே. எட்டு குணங்களை கொண்டவனுமான முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானின் திருவடிகளை சரணடைகின்றோம்.

பாடல் 7:

மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன்
வளியின் எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.

பொருள் : குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என மண்ணில் ஐவகை குணமுள்ளவராகவும், ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர், கடல் நீர் என நீரில் நான்கு வகையாக இருப்பவரும்.  வேள்வித் தீ, சூரியன், சந்திரன் என நெருப்பில் மூன்று வகையாக  இருப்பவரும், காற்றில் புயற் காற்றாக இருப்பவரும், எங்கும் ஒன்றாய் இருக்கும் வான் வெளியாய் இருப்பவருமாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளை அன்புடன் சரணடைகின்றோம்.

பாடல் 8 :

பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.

பொருள் : எந்தப் பந்தமும் அற்றவன். பசுவாகிய ஆன்மாவும், பதியாகிய இறைவனும் அவனே! அறிவினால் அவனை அறிய முடியாது. அவன் பந்தமே இல்லாதவன். எல்லா உயிர்களையும் பந்தப் படுத்துபவன். அவன் மேலானவன். அறிவுடையவன். அத்தகைய கணபதியை நாம் சரணடைவோம். 

நூற்பயன்

இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும்.

திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச் செப்பி மறைந்தார்.

பொருள் : இந்தப் பாடலை காலை மாலை இரவு என மூன்று வேளையும் பாடுவதன் மூலம் எல்லாச் செயல்களிலும் வெற்றி காண இயலும்.  தினமும் பாட பந்தங்களில் இருந்து விடுபடலாம். சதுர்த்தி நாளில் படிக்க சித்தி கிட்டும்.  தினமும் 21 முறை பாடினால் அரசு வசி

banner

Leave a Reply

Submit Comment