AstroVed Menu
AstroVed
search
search

சிம்ம ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023 (Simmam Rasi Guru Peyarchi Palangal Tamil 2022 to 2023)

dateFebruary 25, 2022

சிம்ம ராசி குரு பெயர்ச்சி 2022 பொதுப்பலன்கள்

சிம்ம ராசி அன்பர்களே! உங்கள் வேலை, தொழில், நிதி ஆகியவற்றுக்கு, 2022 மார்ச் வரையிலான காலகட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையக்கூடும். அதிர்ஷ்டம் உங்களுக்குக் கைகொடுக்க, உங்கள் ஆசைகளும், லட்சியங்களும் நிறைவேறக்கூடும். ஆனால், ஏப்ரல் 12 க்குப் பின், உங்கள் 8 ஆவது வீட்டில் குரு பெயர்ச்சி நடைபெறுவதன் காரணமாக, வேலை, தினசரி வாழ்க்கை ஆகியவற்றில் சில பிரச்சனைகள் உருவாகலாம். உங்களது திருப்தியும், சந்தோஷமும் கூட குறைந்து போகலாம். குடும்ப வாழ்க்கையில் பதட்டமும், புரிதல் இல்லாத நிலையும் ஏற்படலாம். பெற்றோர், உடன்பிறந்தோர், மற்றும் நண்பர்களுடன் உறவும் பாதிக்கப்படலாம். எனினும், உங்கள் இல்லத்தில் சில மகிழ்ச்சியான தருணங்களும், கொண்டாட்டங்களும் நடைபெறலாம். சிலர் விடுமுறையை அனுபவிக்க வெளியிடங்களுக்குச் செல்லலாம். ஆனால், ஏப்ரல் 12 க்குப் பின்னர் உங்கள் அதிர்ஷ்டத்தில், ஏற்றத்தாழ்வுகள் உண்டாகலாம். இந்த குரு பெயர்ச்சி 2022 ஆம் ஆண்டில், ஒரு முக்கியத் தருணத்தில், நண்பர், உடன் பணிசெய்பவர், அல்லது உங்களுக்கு நெருக்கமானவர் எவராவது உங்களுக்கு துரோகம் இழைத்து விடும் வாய்ப்புள்ளது.

குரு பகவானின் ஆசிகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்

வேலை, தொழில்

சிம்ம ராசிக்கு 5 மற்றும் 8 ஆம் வீடுகளுக்கு அதிபதியாக விளங்கும் குரு பகவான் (வியாழன் கிரகம்) உங்கள் 8 ஆம் வீட்டிற்குப் பெயர்ச்சி ஆவது, வேலை, தொழில் நடைமுறை ஆகியவற்றில் சில பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். பணியிடத்தில் சிலருக்குப் பதவியும், அதிகாரமும் பறிபோகும் வாய்ப்புள்ளது. சிலர் இந்த 2022 இல் தங்கள் வேலையையும் இழக்கக்கூடும். வேலை தேடிக் கொண்டிருக்கும் சிலருக்கு வேலை கிடைக்கும் என்றாலும், அதனால் அவர்களுக்கு வளர்ச்சியோ, திருப்தியோ கிடைக்க வாய்ப்பில்லை. மேலும், வேலை உங்களுக்குச் சலிப்பளிக்கக்கூடும். அதே நேரம், சிலர், அலுவலக அரசியல், அபாண்டப் பழி ஆகியவற்றுக்கு பலியும் ஆகலாம். தவிர, கூட்டுத் தொழிலில் தெளிவற்ற நிலையும், நஷ்டமும் ஏற்படக்கூடும். எனினும், கலைத்துறை, ஊடகம் ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கு, இந்த ஆண்டு லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். 

காதல், உறவுகள்  

பொதுவாக இந்த 2022 ஆம் ஆண்டு, சிம்ம ராசி அன்பர்களின் காதலுக்கு சாதகமாக இல்லை எனலாம். சிலர் ஆழ்ந்த மனவேதனைக்கும், பிரிவுகளுக்கும் ஆளாகக்கூடும். மேலும், காதல் உறவுகளில் சிலர் ஏமாற்றப்படலாம். எனினும், வேறு சிலரது காதல் வெற்றிகரமான திருமணமாக முற்றுப் பெறலாம். திருமண வயதில் உள்ள சிலர், யார் மீதாவது தீவிரக் காதல் வயப்படலாம், ஆனால் அவர்களது இந்த உறவு நீண்ட நாள் நீடிக்க வாய்ப்பில்லை. உங்கள் காதல் துணையின் எதிர்பார்ப்புக்களை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போகலாம்; அவரிடமிருந்து ஆதரவும், பரிவும் கூட உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். காதல் விஷயங்களில், சிலர் தனிமைப்படுத்தப்பட்டது போலவும், சோகமாகவும், நம்பிக்கையிழந்தது போலவும் உணரலாம். 

திருமண வாழ்க்கை

உங்கள் மணவாழ்க்கையில் இந்த ஆண்டு, சில விரும்பத்தகாதவை நிகழலாம். சிலர் மணமுறிவு, விவாகரத்து போன்ற சோகங்களைச் சந்திக்கலாம். சில தம்பதிகளுக்கு இடையே, பேச்சு வார்த்தை, பரஸ்பர நம்பிக்கை, புரிதல் ஆகியவை இல்லாமல் போகலாம். ஆனால், இவற்றுக்கு பதிலாக, வாதப் பிரதிவாதங்களும், குழப்பங்களும் நிலவலாம். உங்கள் கணவர் அல்லது மனைவியின் எதிர்பார்ப்புக்களை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போகலாம்; குடும்பத்திற்காக உரிய நேரத்தை உங்களால் செலவிட இயலாமலும் போகலாம். புதுமணத் தம்பதிகளுக்கிடையே, தொடக்கத்தில், புரிந்து கொள்வது, விட்டுக் கொடுப்பது போன்றவை தொடர்பாக சில பிரச்சனைகள் எழலாம். தான் என்ற என்ணம், தானே பெரியவன் என்ற உணர்வு போன்றவையும் அவர்களுக்கிடையே பதட்டத்தை தூண்டக்கூடும். 
 

நிதி  

சிம்ம ராசி அன்பர்களுக்கு, இந்த ஆண்டு முழுவதும், ஏற்றுமதி-இறக்குமதித் தொழிலில் ஆதாயம் கிடைக்கலாம். சுய தொழில் செய்பவர்களும் நல்ல வருமானம் ஈட்டக்கூடும். 2022 தொடக்கம் மற்றும் இறுதியில், ஜோதிடம், கலை போன்ற துறைகளில் உள்ளவர்கள் புகழும், ஆதாயம் பெறுவது மற்றும் செல்வம் ஈட்டுவது போன்றவற்றுக்கான வாய்ப்பும் பெறுவார்கள். சிலர் ஹோட்டல், உணவுத் தொழில்களில் வெற்றியும், லாபமும் ஈட்டுவார்கள். மேலும், பருத்தி, ஜவுளி, நிலக்கரி, மரம், பெட்ரோலியப் பொருட்கள், போக்குவரத்து, மருத்துவம், மருந்தகம், போன்ற தொழில்களும் வாபகரமாக அமையக் கூடும். எனினும், பயணம், அழகு சாதனப் பொருட்கள், சினிமா தியேட்டர், வணிக வளாகத்தில் கடைகள் தொடர்பான வணிகங்கள் நஷ்டம் தரக்கூடும். 
 

கல்வி

சிம்ம ராசி மாணவர்கள், தங்கள் மனதை ஒருமுகப்படுத்தி, பாடங்களின் மீதும், குறிக்கோள்களின் மீதும் கவனம் செலுத்துவதைக் கடினமாக உணரக்கூடும். இந்த ஆண்டு, சிலருக்கு, பரிட்சை, நேர்முகத் தேர்வு போன்றவற்றில், எதிர்பார்த்த பலன் கிடைக்கமல் போகலாம். ஆனால், சிலர், பொறியியல் அல்லது மருத்துவம் தொடர்பான போட்டி அல்லது நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெறலாம். இருப்பினும், பலர், தாங்கள் விரும்பிய கல்வி நிறுவனங்களில் இடம் கிடைப்பதற்கும், தங்கள் கல்லூரி, பலகலைக்கழகம் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் போராட வேண்டியிருக்கலாம். சிலர் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறாமல் போகலாம்; சில பள்ளி மாணவர்கள் தன்னம்பிக்கை இழந்தும் போகலாம். இது போலவே, அரசாங்க வேலைகளுக்காக போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற விரும்பும் மாணவர்கள், இதற்காக, பொறுமையுடன், கடுமையாக, பலமுறை முயற்சிக்க வேண்டியிருக்கும். 
       

ஆரோக்கியம்

2022 இல் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கக்கூடும். உங்கள் உடல் நலனை நீங்கள் நன்றாகவே கவனித்துக் கொள்வீர்கள். இருப்பினும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும், அதிகப் பணி காரணமாகவும் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படலாம். மேலும், சிலர் சோம்பேறித்தனமாக உணரக்கூடும்; வேறு சிலருக்கு இயந்திரத்தனமான வாழ்க்கை, வேலைப் பளு காரணமாக, மனச்சோர்வு ஏற்படலாம். தவிர, சிலருக்குச் சிறிய காயங்கள் ஏற்படலாம். ஆயினும், நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த ஆண்டு விரைவில் குணமடையும் வாய்ப்புள்ளது. ஆனால், குடும்பத்தில் ஏற்படும் நோய்நொடிகள் காரணமாக, கடும் மருத்துவச் செலவு ஏற்படும் வாய்ப்புள்ளது.   
 

பரிகாரங்கள்

  • ஞாயிறு தோறும் சூரிய மந்திரத்தை ஜபிக்கவும்
  • உதயமாகும் சூரிய பகவானுக்கு தினமும் தண்ணீர் அர்ப்பணம் செய்து வழிபடவும் 
  • வியாழக்கிழமைகளில் விஷ்ணு ஆலயத்துக்குச் சென்று ஆரத்தி வழிபாடு செய்யவும்
  • ஞாயிறு அன்று, இனிப்பு உண்ணவும்; இனிப்பை தானமும் செய்யவும் 
  • ஞாயிறு அன்று மாமிச உணவையும், மதுவையும், தவிர்க்கவும்.    
  • ஜோதிடரைக் கலந்தாலோசித்து, மாணிக்கக் கல் அணியவும்

banner

Leave a Reply