மனித வாழ்வு நீர்க்குமிழி போன்றது. மற்றும் பிறப்பு இறப்பு என்னும் இரு சக்கரத்திற்குள் அடைபட்டு சிக்கித் தவிக்கும் நிலையை கடக்க வேண்டி உள்ளது. இந்த உலகில் எத்தனையோ மகான்கள் தோன்றி இறைவனை அடைய எத்தனித்து தங்கள் முயற்சிகளில் வெற்றியும் கண்டு இருக்கிறார்கள்.
அவ்வாறு கடவுளை அடைய அவர்கள் பல வழிகளை நமக்கு உணர்த்திச் சென்று இருக்கிறார்கள். ஒரு சில ஞானிகளுக்கும் மகான்களுக்கும் கடவுளே அந்த வழியை உணர்த்தி இருக்கிறார்கள்.அந்த வகையில் சும்மா இருசெயலற என்று அருணகிரி நாதருக்கு “கடை விரித்தான் கந்தன்.”
கடவுளை அடைய பல படிகள் உள்ளன .
முதல் படியாக கடவுளை அடைய நமது மனதில் பக்தி வேண்டும். சிரத்தை வேண்டும். பூஜை, வழிபாடு மற்றும் மந்திரங்கள் மூலம் நமது மனதில் நாம் இறை உணர்வை கொண்டு வர வேண்டும்.
இரண்டாவது படியாக சொல், செயல், எண்ணம் என மூன்றிலும் உண்மை இருக்க வேண்டும். நமது கர்ம வினைகள் காரணமாகத் தான் நாம் பிறவிகளை எடுக்கிறோம். மேலும் பாவ புண்ணியங்களை சேர்த்துக் கொள்கிறோம். இவற்றில் இருந்து விடுபட நமது மனதை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மூன்றாவது படியாக தியானம் அல்லது தவம் மூலம் உலகின் பிரம்மாண்டத்தை அந்த பரமாத்வை நாம் உணர முடியும்.
கடைசிப் படியை மிக எளிமையாக கந்தன் அருணகிரிநாதருக்கு உபதேசித்தார்
தொழுநோயின் கொடுமை தாங்க முடியாமல் கோபுர உச்சியில் இருந்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார் அருணகிரி நாதர்.
ஆனால் கருணைக் கடலான கந்தன் அவரைத் தாங்கி சும்மா இரு என்று உபதேசித்து மறைந்தார்.
கடைசிபடியான சும்மா இரு செயலற என்பதே கந்தன் உரைத்த – கடை விரித்தான் கந்தன்
தியானத்தின் இறுதிப் படி அதாவது கடைசிப் படி எண்ணங்கள் ஏதுமின்றி, சலனமின்றி மனதை வைத்திருத்தல். இந்த நிலையில் கர்ம வினைகள் ஏற்படுவதில்லை.நான் என்னும் எண்ணம் அழிந்து கடவுளை அடையும் மெய்ஞான நிலையை பெற முடியும்.

Leave a Reply