Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

மீனம் பிப்ரவரி மாத ராசி பலன் 2023 | February Matha Meenam Rasi Palan 2023

January 19, 2023 | Total Views : 428
Zoom In Zoom Out Print

மீனம் பிப்ரவரி  மாத பொதுப்பலன்கள் 2023 

மீன ராசி அன்பர்கள், இந்த மாதம், தங்கள் வாழ்க்கைத் துணைவர்களுக்காக தரமான நேரத்தை ஒதுக்கி, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி, அவர்களின் நன்மதிப்பைப் பெறுவார்கள். இருப்பினும், காதல் உறவுகளில் உள்ளவர்கள் தங்கள் கூட்டாளிகளுடன் சில தவறான புரிதல்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன; எனவே அவர்களுடன் எந்த வாக்குவாதத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் நன்றாக பிரகாசிக்கலாம், ஆனால் இப்போது உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

காதல் / குடும்பம்: 

நீங்கள் உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகளை வளர்த்துக் கொள்ளலாம். எனவே உங்கள் வெளிப்பாடுகள் மற்றும் தொடர்புகளில் கவனமாக இருக்க வேண்டும். புதிதாக திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் நேரத்தை செலவழித்து அவர்களை மகிழ்விக்கலாம். இது அவர்களின் திருமண பந்தத்தை பலப்படுத்தலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள், விழாக்கள் மற்றும் விருந்துகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

காதலர்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்பட சுக்கிரன் பூஜை

நிதி நிலை:

வீட்டில் பெயின்டிங், வாகனம் பழுதுபார்ப்பதில் செலவுகள் ஏற்படலாம். பண விஷயங்களில் அல்லது உங்கள் நிதியை பெருக்குவதில் எந்த முடிவும் எடுக்கும்போது, ​​நேரம் ஒதுக்கி, கவனமாக சிந்தித்து, பிறகு மட்டுமே முடிவெடுப்பது நல்லது. உங்கள் வருமானத்தில் கணிசமான  அதிகரிப்பு இருக்கலாம். அதே நேரத்தில் உங்கள் கடனை நீங்கள் திருப்பிச் செலுத்த முடியும்.

நிதி நிலையில் ஏற்றம் உண்டாக கோ பூஜை

வேலை:

அலுவலகத்தில் உங்கள் பணிச்சுமை அதிகரிக்கலாம். ஆனால் திறமை மற்றும் சாதுர்யத்துடன் உங்கள் பொறுப்புகளை நிர்வகிக்கலாம். தனியார் துறை ஊழியர்கள் வேலையில் பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். வெளிநாடுகளில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் துறையில் வேலை தேடுபவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கலாம். அரசு வேலைகள் அல்லது பொதுத்துறையில் பணிபுரிபவர்கள் பணியிடத்தில் சில போட்டிகளை எதிர்கொள்ளலாம். இருப்பினும், நீங்கள் இவற்றைக் கடந்து உங்கள் இலக்குகளை அடையலாம்.

தொழில்: 

வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் இந்த மாதம் கணிசமான லாபத்தை தரும். தொழிலதிபர்கள் தங்கள் வாய்ப்புகளை மேம்படுத்தவும் திடமான நிதி ஆதாயங்களைப் பெறவும் அயராத முயற்சிகளை மேற்கொள்வார்கள். கூட்டாக தொழில் நடத்துபவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை கணிசமாக விரிவுபடுத்தி கணிசமான லாபத்தைப் பெறலாம்.

தொழில் வல்லுனர்கள்:.

தனியார் உத்தியோகத்தில் பணியில் உள்ள தொழில் வல்லுனர்கள் மேலதிகாரிகளுடன் நல்லுறவை வளர்த்து நல்ல பெயரைப் பெறலாம். உங்கள் வருமானமும் இப்போது உயரலாம். அரசுத் துறைகள் அல்லது ஆராய்ச்சிப் பிரிவுகளில் பணிபுரிபவர்களுக்கும் இந்த மாதம் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டம் வேலை உயர்வு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உறுதியளிக்கிறது.

உத்தியோகம் மற்றும் தொழிலில் சிறந்து விளங்க சூரியன் பூஜை

ஆரோக்கியம்:

இந்த மாதத்தில் நீங்கள் சிறிய உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம்.  எந்தவொரு சிறு அறிகுறிகளையும் புறக்கணிக்காதீர்கள். உடனடியாக மருத்துவ ஆலோசனைகள் மற்றும் தேவையான மருத்துவ பரிசோதனைகளுக்குச் சென்று ஆலோசனையின்படி சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். சிலருக்கு மூட்டு மற்றும் இடுப்பில் வலி ஏற்படலாம். சத்தான உணவு மற்றும் தாராளமாக தண்ணீர் உட்கொள்வது உங்கள் ஒட்டுமொத்த உடற்தகுதியை மேம்படுத்தும்.

ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை

மாணவர்கள்:

பள்ளி மாணவர்கள் தங்கள் கல்வி இலக்குகளை அடைய கடினமாகவும் அர்ப்பணிப்புடனும் உழைக்க வேண்டியிருக்கும். கல்லூரி மாணவர்கள் கவனச்சிதறல்கள் போன்ற தடைகளை சமாளித்து படிப்பில் முன்னேறலாம். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். ஆராய்ச்சி செய்பவர்கள் கவனச்சிதறல்களைத் தவிர்த்து, தங்கள் ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடிக்க முழு கவனத்துடன் செயல்பட வேண்டும்.

கல்வியில் ஏற்றம் உண்டாக துர்கா பூஜை

சுப நாட்கள்:

1, 2, 3, 5, 7, 8, 16, 17, 18, 22, 24, 25, 26.

அசுப நாட்கள்:

11, 12, 13, 14, 15, 19, 20, 21, 23, 27, 28.

banner

Leave a Reply

Submit Comment