மிதுனம் பிப்ரவரி மாத பொதுப்பலன்கள் 2023
மிதுன ராசியைச் சார்ந்த காதலர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் சிறந்த புரிதலையும் ஒற்றுமையையும் எதிர்பார்க்கலாம். தங்கள் துணையுடன் தரமான நேரத்தை ஒதுக்கி அவர்களின் தேவைகளை நிறைவேற்றலாம். இது இருவரையும் மகிழ்ச்சியடையச் செய்யலாம். பள்ளி இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், படிப்பில் சிறந்து விளங்க பெற்றோரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது நல்லது. போட்டித் தேர்வுகளில் பங்கு கொள்ள முயற்சிப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
காதல் / குடும்பம்:
புதிதாக திருமணமானவர்கள் தங்கள் பந்தத்தில் நல்லிணக்கத்தை அனுபவிக்க முடியும். உங்கள் வாழ்க்கைத் துணையை சில அழகிய இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கும் மகிழ்ச்சியான நேரத்தைக் கழிப்பதற்கும் இந்த மாதம் உங்களுக்குச் சரியானதாகத் தெரிகிறது. அவ்வாறு செல்வதன் மூலம் வாழ்க்கைத் துணைவர்களிடையே நெருக்கமும் பாசமும் அதிகரிக்கும். நீங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுடன் நெருங்கி பழகலாம் மற்றும் குழந்தைகளுடன் நல்ல உறவைப் பேணலாம்.
குடும்ப உறவுகள் மேம்பட குரு பூஜை
நிதி நிலை:
உங்களின் பொருளாதார நிலை இந்த மாதம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்களில் சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் சம்பந்தமாக செலவுகள் ஏற்படலாம். இருப்பினும், தயவுசெய்து பண விஷயங்களில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம், மேலும், இப்போது எந்த புதிய கடன்களுக்கும் செல்ல வேண்டாம். திருப்பிச் செலுத்தும் திறனைத் தாண்டிய கடன்களை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன, இதனால் நீங்கள் சிக்கல்களில் சிக்குவீர்கள். எனவே கவனமாக இருங்கள்!
கடன் பிரச்சனை தீர ருண விமோச்சன பூஜை
வேலை:
அரசு ஊழியர்கள் கடினமாக உழைத்து, அதிக முயற்சியை மேற்கொள்வார்கள். இது அவர்களின் வேலைகளில் சிறந்து விளங்கவும் அவர்களின் இலக்குகளை அடையவும் உதவும். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கும் இந்த மாதம் சாதகமாக இருக்கும். நீங்கள் ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் இப்போது சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடமிருந்து நல்ல ஆதரவைப் பெறலாம்.
தொழில்:
காய்கறிகள் மற்றும் பழங்களை சிறிய அளவில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு இந்த மாதம் அதிக லாபம் கிடைக்கும். வணிகர்கள் தங்கள் பரிவர்த்தனைகள் மூலம் அதிக நன்மதிப்பையும் புகழையும் பெறுவார்கள் என்று நம்பலாம். வணிகம் தொடர்பான பயணங்கள் நல்ல பலனைத் தரக்கூடும், அதேசமயம் கூட்டு முயற்சிகள் உங்களுக்கு குறிப்பிடத்தக்க வெற்றியைத் தரும்.
தொழில் வல்லுனர்கள்:
பணிபுரியும் மிதுன ராசி தொழில் வல்லுநர்கள் பணியிடத்தில் சில தடைகளை சந்திக்க நேரிடும்; இருப்பினும், அவர்கள் அந்தத் தடைகளை சமாளித்து, நம்பகத்தன்மையுடன் செயல்பட முடியும் மற்றும் தங்கள் பணிகளை சிறப்பாக முடிக்க முடியும். மருத்துவ நிபுணர்கள் நல்ல வருமானம் பெறலாம்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் வெற்றி கிடைக்க அஷ்ட லக்ஷ்மி பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கலாம். இருப்பினும், இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்யும் வாய்ப்புகள் இருப்பதால், உங்கள் உணவு மற்றும் நீர் உட்கொள்ளலில் மிகவும் கவனமாக இருக்கவும். ஆரோக்கியமான உணவு மற்றும் சுத்தமான தண்ணீரை உட்கொள்வதன் மூலம் நீங்கள் இப்போது ஆரோக்கியமாக இருக்க முடியும்.
உடல் ஆரோக்கியம் பெற சந்திரன் பூஜை
மாணவர்கள்:
பள்ளி மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கி நல்ல முன்னேற்றம் பெறலாம். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் தங்கள் கல்வி முயற்சிகளில் வெற்றிபெற அதிக நேரத்தை ஒதுக்கி முழு கவனத்துடன் உழைக்க வேண்டும். வெளிநாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உயர்கல்வியைத் தொடர்பவர்கள் தங்கள் படிப்பைத் தொடரும்போதே கூட பகுதிநேர வேலைகளைப் பெறலாம்.
கல்வியில் வெற்றி கிடைக்க கணபதி பூஜை
சுப நாட்கள்:
1, 2, 3, 5, 7, 8, 11, 12, 13, 16, 17, 18.
அசுப நாட்கள்:
18, 19, 20, 21, 23, 27, 28.

Leave a Reply