AstroVed Menu
AstroVed
search
search

விருச்சிகம் டிசம்பர் மாத ராசி பலன் 2021 | December Matha Viruchigam Rasi Palan 2021

dateNovember 11, 2021

விருச்சிகம் டிசம்பர் 2021 பொதுப்பலன்கள்:

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் குடும்ப ஒற்றுமை ஓங்கும். கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். இந்த மாத கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. எனவே நீங்கள் இந்த மாதம் பெரும்பாலும் உங்களுக்கு சாதகமான பலன்களையே காண்பீர்கள்.  உங்கள் நிதிநிலையும் முன்னேற்றம் காணும். முதலீடுகள் மூலம் லாபம் கிட்டும். உத்தியோகத்தில் முன்னேற்றமும் வளர்ச்சியும் இருக்கும். உங்கள் மனதில் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.  

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்

காதல் / குடும்பம்:

விருச்சிக ராசி காதலர்கள் கவனமாக இருக்க வேண்டிய மாதம் இது. கருத்து வேறுபாடுகள் காரணமாக உறவில் சலசலப்பு ஏற்படலாம். எனவே உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. கணவன் மனைவி  உறவில் ஒற்றுமை காணப்படும். குடும்ப உறவுகள், குறிப்பாக உடன் பிறந்தவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு திருமண முயற்சிகள் கை கூடும். 

திருமண முயற்சி கைகூட செவ்வாய் பூஜை

நிதி நிலை:

இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். குறிப்பாக வங்கித் துறை, ஊடகத் துறை மற்றும் பொழுதுபோக்குத் துறையைச் சார்ந்து பணி  செய்யும் அன்பர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். தொழில் செய்யும் அன்பர்கள் தங்கள் தொழில் மூலம் அதிக வருமானம் கிடைக்கப் பெறுவார்கள்  நிலுவையில் இருக்கும் கடன்களை அடைத்து முடிப்பீர்கள். புதிய வங்கிக்கடன் எதுவும் இந்த மாதம் வாங்கும் எண்ணம் இருந்தால் அதனை தவிரப்பது நல்லது.   

பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை

வேலை:

உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணியிடத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் பெற அவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். தனியார் உத்தியோகத்தில் உள்ளவர்கள்  கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க அனாவசிய பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும். அரசுத் துறை பணியாளர்கள் தங்கள் பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கக் காண்பார்கள். பணியிலும் சிறப்பாகச் செயலாற்றி பெயரும் புகழும் அடைவார்கள். உங்களில் சிலர் அலுவலகப் பணி நிமித்தமாக வெளியூருக்குச் செல்வீர்கள். 

தொழில்:

விருச்சிக ராசி அன்பர்களின் தொழில் சிறப்பாக இருக்கும். தொழில் நிமித்தமான பயணங்கள் மூலம் நீங்கள் லாபமும் ஆதாயமும் பெறுவீர்கள். இந்த மாதம் நீங்கள் கடமை உணர்வுடனும் பொறுப்புடனும் செயல்படுவீர்கள். திறமையுடன் செயலாற்றி வெற்றியும் லாபமும் பெறுவீர்கள். புதிய தொழில் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். தொழில் முதலீடுகள் உங்களுக்கு லாபம்  அளிக்கும். 

தொழில் வல்லுனர்கள்:

தொழில் வல்லுனர்களுக்கு இது வரவேற்கத்தக்க மாதமாக இருக்கும். நீங்கள் சிறப்பான முறையில் செயலாற்றி பாராட்டும் அங்கீகாரமும் பெறுவீர்கள். உங்கள் நிர்வாகத் திறன் மேம்படும்.  நீங்கள் அரசுத் துறையில்  இருப்பவர் என்றால் கவனமாகச் செயல்பட வேண்டும். உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் உங்கள் பேச்சில் கவனம் தேவை. 

உத்தியோகம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட லக்ஷ்மி பூஜை

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் ஓரளவு சீராக இருக்கும் என்றாலும் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வயிறு அல்லது குடல் சம்மந்தப்பட்ட உபாதைகளை நீங்கள் சந்திக்க நேரலாம். நல்ல உணவு உடற்பயிற்சி மற்றும் ஒய்வு அவசியம்.

ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை

மாணவர்கள்:

பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதல் மூலம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள்.  தேர்விலும் சிறந்த முறையில் வெற்றி காண்பார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு இது அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். சிறிது முயற்சி எடுத்து படிப்பதன் மூலம் உயர்கல்வி மாணவர்கள் கல்வியில் வெற்றி உண்டாகும். 

மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற சரஸ்வதி பூஜை

சுப நாட்கள்: 

2, 8, 9, 13, 27, 29, 31.

அசுப நாட்கள்:

19, 20, 21, 22, 23.


banner

Leave a Reply