துலாம் டிசம்பர் மாத ராசி பலன் 2021 | December Matha Thulam Rasi Palan 2021
துலாம் டிசம்பர் 2021 பொதுப்பலன்கள்:
இந்த மாதம் குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். இளைய சகோதர சகோதரிகளுடனான உறவுகள் பலப்படும். வீட்டில் திருமணம், குழந்தை பிறப்பு போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளது. காதலர்களுக்கு இடையே இணக்கம் அதிகரிக்கும். திருமணத் தம்பதிகளுக்கு இடையே நல்லுறவு காணப்படும். தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
காதலில் வெற்றி கிடைக்கும். காதல் துணையுடன் வெளி நாடுகளுக்கு இன்பச்சுற்றுலா சென்றுவருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணை அமையும். திருமணமான தம்பதிகளுக்கு இடையே நல்லுறவு காணப்படும்.
காதல் உறவு மேம்பட சுக்கிரன் பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் யூக வணிகமான போரெக்ஸ் டிரேடிங் முதலீடுகள் மூலம் நல்ல லாபங்களை எதிர்பார்க்கலாம். பங்கு வர்த்தகத்தில் சிறிது கவனமுடன் செயல்பட வேண்டும். பொருள் வர்த்தகத்தில் அதிக லாபத்தை எதிர்பார்க்க முடியாது. கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை
வேலை:
நீங்கள் தனியார் துறையில் வேலை பார்ப்பவர் என்றால் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தை பொருத்தவரை விளம்பரத்துறை மற்றும் நீதித்துறையில் பணி புரிபவர்களுக்கு இது சிறந்த மாதமாக இருக்கும். சகப்பணியாளர்களின் ஆதரவுடன் பணிகளை விரைவாக முடிப்பீர்கள்.
தொழில்:
சுயதொழிலில் லாபம் ஏற்றம் மிகுந்து காணப்படும். கூட்டுத்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் கூட்டாளிகள் உங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு அளிப்பார்கள். பட்டு ஜவுளி தொழிலில் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். பளைய வாகனம் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் சிரிது மந்த நிலை காணப்படும்.
தொழில் வல்லுனர்கள்:
அரசு உத்தியோகத்தில் பணியில் உள்ள தொழில் வல்லுனர்களின் சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரியும் தொழில் வல்லுனர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். சுயதொழில் செய்யும் தொழில் வல்லுனர்கள் பெரிய அளவிலான வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண சனி பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் அதிக பணிச்சுமை கராணமாக மன பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தினமும் நடைபயிற்சி மற்றும் தியானம் செய்வதன் மூலம் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும். தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை.
உடல் ஆரோக்கியத்திற்கு புதன் பூஜை
மாணவர்கள்:
பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் கவனச் சிதறலுக்கு ஆளாவார்கள். மனதை ஒருநிலை படுத்தி கவனமுடன் படித்தால் படிப்பில் நல்ல மதிப்பெண்களுடன் எளிதில் வெற்றி பெறலாம். கல்வித் துறை சம்மந்தப்பட்ட படிப்பு பயிலும் மாணவ மாணவியர்கள் இந்தமாதம் சிறப்புற செயலாற்றுவார்கள். தேர்வில் சிறந்த முறையில் வெற்றி பெறுவார்கள்.
கல்வியில் வெற்றி கிடைக்க கனேஷா பூஜை
சுப நாட்கள்:
2, 8, 9, 13, 27, 29, 31.
அசுப நாட்கள்:
3, 4, 16, 17, 18, 19, 22, 23.











