தனுசு டிசம்பர் மாத ராசி பலன் 2021 | December Matha Dhanusu Rasi Palan 2021
தனுசு டிசம்பர் 2021 பொதுப்பலன்கள்:
தனுசு ராசி அன்பர்களே! குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உறவு நிலை சிறப்பாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் குடும்பத்தில் அதிக பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். பண வரவு கணிசமாக உயரும். உங்கள் வசதிகளை அதிகரித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருக்கும் தனுசு ராசி அன்பர்கள் தாங்கள் நீண்ட நாட்களாக எதிர் பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கப் பெறுவார்கள். சொந்தத் தொழில் மற்றும் கூட்டுத் தொழில் சிறப்பாக நடக்கும். உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்றாலும் கவனம் அவசியம். மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
கணவன் மனைவி உறவு சீராக இருக்கும் என்றாலும் பரஸ்பரம் மனம் விட்டு கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ள முடியும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கலந்துறவாட நேரம் ஒதுக்குவதன் மூலம் உறவு வலுப்படும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். காதலர்கள் கவனமாகச் செயல்பட வேண்டும். தவறான புரிந்துணர்வு காரணமாக உறவில் சிக்கல்கள் எழலாம் எனவே உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை.
கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவ துர்கா பூஜை
நிதி நிலை:
உங்கள் பொருளாதார நிலை இந்த மாதம் வரவேற்கத் தக்கதாக இருக்கும். வருமானம் கணிசமாக உயரும். பணப் புழக்கம் சரளமாக இருக்கும். செய் தொழில் மூலம் தான லாபம் கிட்டும். நிலுவையில் இருக்கும் கடனை அடைத்து முடிப்பீர்கள். இந்த மாதம் வீட்டு உபயோக பொருட்களை வாங்க செலவுகளை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் குடும்பத்தின் வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். உபரி பணத்தை சேமிப்பது உங்கள் எதிர் கால நலனுக்கு வழி வகுக்கும்.
வேலை:
உத்தியோகத்தில் இருக்கும் தனுசு ராசி அன்பர்கள் தாங்கள் நீண்ட நாட்களாக எதிர் பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கப் பெறுவார்கள். சக பணியாளர்கள் உங்களை போட்டியாளராகக் கருத வாய்ப்புள்ளது. அவர்கள் உங்களுடன் போட்டி போட வாய்ப்புள்ளது. இந்தச் சூழ்நிலையை நீங்கள் சமாளித்து வெற்றி காண்பீர்கள். நீங்கள் தகவல் தொடர்புத் துறை மற்றும் அச்சுத் துறையில் பணிபுரிபவர் என்றால் இந்த மாதம் உங்கள் உத்தியோகத்தில் உங்களுக்கு வெற்றியை பரிசாக அளிக்கும்.
தொழில்:
சொந்தத் தொழில் செய்பவர்கள் சிறப்பாக செயல்பட இந்த மாதம் அனுகூலமாக இருக்கும். தொழில் மூலம் நல்ல வருமானம் மற்றும் லாபம் காண இயலும். கூட்டுத்தொழில் சிறப்பாக இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்பும் தேவைப்படும். ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களும் கணிசமான வருமானம் ஈட்டுவார்கள்.
தொழில் வல்லுனர்கள்:
தனுசு ராசியைச் சேர்ந்த தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சிறப்பாகச் செயல்படுவார்கள். என்றாலும் கடின உழைப்பு தேவைப்படும். உங்கள் தொழிலில் நீங்கள் பாராட்டும் அங்கீகாரமும் பெற கடின உழைப்பு மிகவும் அவசியம். தொழில் மூலம் சிறந்த லாபம் கிட்டும். வெளி நாட்டு வாய்ப்பிற்காக காத்திருப்பவர்கள் இந்த மாதம் தங்கள் கனவு நனவாகக் காண்பார்கள்.
ஆரோக்கியம்:
உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்றாலும் சிறு சிறு உபாதைகள் வந்து போகும் என்பதால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பெரிய அளவிலான ஆரோக்கிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. வயிறு சம்பந்தமான உபாதைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதால் உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோரின் உடல் நலனில் அக்கறை தேவை.
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வைத்தியநாத பூஜை
மாணவர்கள்:
பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். சில தடைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் விடா முயற்சி உங்களுக்கு கை கொடுக்கும். உயர்கல்வி மாணவர்களுக்கு பேராசிரியர்களின் ஆலோசனை மற்றும் அறிவுரைகள் நல்ல வழிகாட்டுதலாக இருக்கும். வெற்றிக்கு வழி வகுக்கும். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் வெற்றி காண்பார்கள்.
மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற சரஸ்வதி பூஜை
சுப நாட்கள்:
2, 8, 9, 13, 19, 27, 29, 31.
அசுப நாட்கள்:
3, 4, 21, 22, 23, 24.











