கன்னி டிசம்பர் மாத ராசி பலன் 2021 | December Matha Kanni Rasi Palan 2021
கன்னி டிசம்பர் 2021 பொதுப்பலன்கள்:
கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். தங்களின் வேலை மற்றும் நிதி நிலையில் ஏற்றம் காணப்படும். சுய தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும். தனியார் துறையில் உத்தியோகத்தில் உள்ள தங்களின் எதிர் கால திட்டம் குறித்து உங்கள் மேலதிகாரிகளுடன் கலந்து ஆலோசிப்பது நன்மை பயக்கும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
காதல் உறவில் இருப்பவர்களுக்கு தனது துணையுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன. உங்கள் துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நன்மை பயக்கும். திருமணமான தம்பதிகளுக்கு தாம்பத்தியத்தில் நல்லிணக்கம் கூடும். நண்பர்களிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள்.
கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவ துர்கா பூஜை
நிதி நிலை:
உங்கள் கடந்த கால முதலீடுகளின் மூலம் நீங்கள் லாபம் பெறுவீர்கள். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்காக செலவுகள் செய்வீர்கள். பங்கு மற்றும் பொருள் வர்த்தகத்தில் ஏற்றம் காணலாம். பிட் காயின் வர்த்தகத்தில் முக்கியமான முடிவுகள் எதையும் இந்த மாதம் எடுக்காதீர்கள். ஏனெனில் அதில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தன நிலையில் ஏற்றம் உண்டாக சுக்கிரன் பூஜை
வேலை:
தனியார் துறையில் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். அதனால் வருமானமும் உயரும். அரசு உத்தியோகத்தில் நீங்கள் தன்னம்பிக்கையுடன் பணியாற்றி தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்துவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு நல்ல பெயரும் புகழும் கிடைக்கும்.
தொழில்:
புதிய தொழில் வாய்ப்புகள் மூலம் நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள். இறக்குமதி தொழில் மூலம் சிறந்த ஆதாயம் காண்பீர்கள். சுய தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத் தொழிலில் போட்டியாளர்கள் அதிகம் இருந்தாலும் அவர்களை எல்லாம் எதிர் கொண்டு நீங்கள் வெற்றி காண்பீர்கள்.
தொழில் வல்லுனர்கள்:
தகவல் தொடர்புத் துறையில் வேலை தேடும் தொழில் வல்லுனர்களுக்கு பெரிய நிறுவனங்களிள் வேலை கிடைக்கும். தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நீங்கள் தயாராக இருங்கள். உங்களுக்கு வெளி நாடு சென்று பணிபுரியும் வாய்ப்பு ஏற்படலாம்.
உத்தியோகம் மற்றும் தொழில் உயர்விற்கு லக்ஷ்மி பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் உடல்நலனில் அக்கறை தேவை. ஒவ்வாமை அல்லது ஆஸ்துமா போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மூச்சு பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்வதன் மூலம் உங்கள் உடல் நலத்தில் மேன்மை உண்டாகும். துரித உணவுகளை தவிப்பது நன்மை பயக்கும்.
அரோக்கியம் மேம்பட சிவன் பூஜை
மாணவர்கள்:
பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் கவனச்சிதறல்கள் ஏற்படலாம். தினமும் படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் படித்து படிப்பில் வெற்றி பெறுவார்கள். வெளிநாடு சென்று உயர்கல்வி படிக்க நினைக்கும் மாணவர்கள் தங்கள் விருப்பம் நிறைவேறக் காண்பார்கள்.
கல்வியில் வெற்றி கிடைக்க புதன் பூஜை
சுப நாட்கள்:
2, 8, 9, 10, 13, 19, 22, 27, 29, 31.
அசுப நாட்கள்:
3, 4, 14, 15, 16, 22, 23.











