சிம்மம் டிசம்பர் மாத ராசி பலன் 2021 | December Matha Simmam Rasi Palan 2021
சிம்மம் டிசம்பர் 2021 பொதுப்பலன்கள்:
சிம்ம ராசி அன்பர்களே! குடும்பத்தில் குதூகலம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகள் சிறப்பாக இருக்கும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் தக்க துணை கிடைக்கப் பெற்று திருமணம் நிச்சயமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் திறமையைப் பயன்படுத்தி மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறிய உடல் உபாதை என்றாலும் மருத்துவ ஆலோசனை மேற்கொள்வது நல்லது. மாணவர்கள் இந்த மாதம் கல்வியில் பிரகாசிப்பார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
சிம்ம ராசி இளம் வயது காதலர்கள் தங்கள் துணை மூலம் பணமும் பரிசும், ஆதாயமும் பெறும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. வெளியூர்ப் பயணங்கள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் மனைவி உறவில் நெருக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை நீங்கி புரிந்துணர்வு அதிகரிக்கும். குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும்.
குடும்ப உறவு சிறக்க சந்திரன் பூஜை
நிதி நிலை:
சிம்ம ராசி அன்பர்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஊக வணிகங்கள் லாபங்களை பெற்றுத் தரும். போரெக்ஸ் டிரேடிங் மற்றும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வது அதிக லாபத்தை கொடுக்கும். கருவூலம் மற்றும் பணம் சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு தன நிலை உயரும். நண்பர்கள் மூலம் பண உதவி அல்லது கடன் கிடைக்கும். புதிய முதலீடுகளை மேற்கொள்ளும் போது கவனம் தேவை.
கடன் பிரச்சனைகள் தீர துர்கா பூஜை
வேலை:
உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் செயல் திறன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பணிகள் அதிகம் காணப்படும். மலை போல பணிகள் வந்து குவியும் என்றாலும் நீங்கள் சூழ்நிலையை சமாளித்து பணிகளை முடிப்பீர்கள். தனியார் துறையில் பணிபுரியும் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வெளி நாடு சென்று பயிற்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உங்கள் நிறுவனம் மூலம் கிடைக்கும்.
தொழில்:
சொந்த தொழில் சிறப்பாகவும் லாபகரமாகவும் நடக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். அதன் மூலம் லாபமும் பெறுவீர்கள். நீங்கள் கூட்டுத்தொழிலில் ஈடுபட்டிருந்தால் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. கூட்டுத்தொழில் சம்மந்தப்பட்ட ஒப்பந்தங்களை கையொப்பம் இடும் முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்துச் செயல்பட வேண்டும்.
தொழில் வல்லுனர்கள்:
தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சிறப்பாகச் செயல்பட்டு நல்ல வருமானம் ஈட்டுவார்கள். உங்கள் அந்தஸ்து உயரும். நிதித் துறையில் பணியில் உள்ள தொழில் வல்லுனர்கள் அதிக வாடிக்கையாளர்களைப் பெறுவார்கள். மின் பொறியியல் துறையில் உத்தியோகத்தில் உள்ள தொழில் வல்லுனர்கள் தங்கள் தொழிலில் கொடி கட்டிப் பறப்பார்கள்
உத்தியோகம் மற்றும் தொழிலில் சிறந்து விளங்க சூரியன் பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்தவேண்டும். கால் மூட்டு அல்லது இடுப்பு பகுதியில் வலி போன்ற உபாதைகளுக்கு நீங்கள் ஆளாக நேரலாம். சிறிய உபாதைகள் என்றாலும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. தாயாருக்கு சுவாசம் சம்மந்தப்பட்ட உடல் நல குறைவு ஏற்படலாம். தாயார் உடல் நலனில் அக்கறை தேவை.
உடல் ஆரோக்கியம் மேன்மை அடைய செவ்வாய் பூஜை
மாணவர்கள்:
பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பில் பிரகாசிப்பார்கள். சிறப்பாகப் படித்து முதலிடம் பெறுவார்கள். இளங்கலை பட்டம் படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் படித்து படிப்பில் வெற்றி காண்பார்கள். வெளிநாட்டில் அறிவியல் துறையில் முதுகலை பட்டம் படிக்கும் மாணவர்கள் பகுதி நேர வேலை பெறுவார்கள்.
சுப நாட்கள்:
2, 8, 9, 19, 27, 29, 31.
அசுப நாட்கள்:
3, 4, 11, 12, 13, 14, 22, 23.











