மகரம் டிசம்பர் மாத ராசி பலன் 2021 | December Matha Magaram Rasi Palan 2021
மகரம் டிசம்பர் 2021 பொதுப்பலன்கள்:
மகர ராசி அன்பர்களே! குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். உறவினர்களுடனும் நல்ல சுமுகமான உறவு நிலை காணப்படும். இந்த மாதம் குடும்பத்தில் உங்களுக்கு அதிக பொறுப்புகள் காணப்படும். உங்கள் மனதில் ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மீகத்திற்காக பயணம் மேற்கொள்வீர்கள். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் பணப்புழக்கம் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும். நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். வியாபாரத்தில் தன வரவு அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் சிறந்த பலன்களைக் காணக் கடுமையாக உழைக்க வேண்டும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
இந்த மாதம் உங்களுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அனாவசிய பேச்சு வார்த்தை மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். மகர ராசி இளம் காதலர்கள் மனதில் அதிருப்தி நிலவும். சுமுகமான உறவு நிலை இன்மை காரணமாக மகிழ்ச்சியின்மை இருக்கும். கணவன் மனைவி தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான உறவு மேற்கொள்வார்கள். இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு அதிகரிக்கும்.
காதலர்களுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க சுக்கிரன் பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் பொருளாதார நிலை நீங்கள் வரவேற்கத்தக்க வகையில் இருக்கும். இது உங்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதம் என்றும் கூறலாம். தொழில் மூலம் வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் பணம் வரும். உங்கள் பண வரவு மற்றும் அந்தஸ்து உயரும். வீட்டு மராமத்து மற்றும் புதுப்பித்தல் போன்ற வகையில் செலவுகளை சந்திப்பீர்கள்.
பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை
வேலை:
உத்தியோகத்தில் இருக்கும் மகர ராசி அன்பர்கள் தங்கள் பணியிடச் சூழல் சாதகமாக இருக்கக் காண்பார்கள். அதிக பணிகள் இருக்கும். பணிகள் மலை போலக் குவிந்த போதிலும் நீங்கள் திட்டமிட்டு சிறப்பாகப் பணியாற்றி வெற்றி காண்பீர்கள். உங்களின் சிறந்த பணிக்கான பாராட்டு மற்றும் அங்கீகாரத்தை மேலதிகாரிகளிடம் இருந்து பெறுவீர்கள். பணியிடத்தில் புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் நட்பு வட்டம் விரியும். சக பணியாளர்கள் உங்களுக்கு சிறந்த ஒத்துழைப்பு அளிப்பார்கள்.
தொழில்:
மகர ராசி அன்பர்களின் தொழில் சிறப்பாக நடக்கும். குறிப்பாக ஏற்றுமதி தொடர்புடைய தொழில் செய்பவர்கள் இந்த மாதம் தங்கள் தொழில் மூலம் கணிசமான லாபம் சம்பாதிப்பார்கள். மற்றும் உணவு சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் இந்த மாதம் அதிக பண வரவைக் காண்பார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பிற்கு ஆளாவார்கள். தொழிலுக்காக நீங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இது ஏற்ற நேரமாக உள்ளது.
தொழில் வல்லுனர்கள்:
இந்த மாதம் உங்களில் சிலர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள நேரும். அதன் மூலம் நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள். மேலும் தொழில் சார்ந்த பயிற்சியை நீங்கள் மேற்கொள்வீர்கள். அதன் மூலம் நீங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் உண்டாக அஷ்ட லக்ஷ்மி பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். என்ற போதிலும் உங்கள் சிறந்த ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள உடற் பயிற்சி மேற்கொள்வதும் உணவில் கவனமாக இருப்பதும் நன்மை அளிக்கும். தாயாருக்கு ஒற்றை தலைவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் தாயாரின் உடல் நலனில் அக்கறை தேவை.
உடல் ஆரோக்கியம் பெற சந்திரன் பூஜை
மாணவர்கள்:
மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பயில கடின உழைப்பு அவசியம். வெளிநாடு சென்று பயில விரும்பும் மாணவர்கள் இந்த மாதம் தங்கள் எண்ணங்கள் ஈடேறக் காண்பார்கள். ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றி காண்பார்கள்.
மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற சரஸ்வதி பூஜை
சுப நாட்கள்:
2, 8, 9, 13, 19, 27, 29, 31.
அசுப நாட்கள்:
3, 4, 22, 24, 25, 26.











