AstroVed Menu
AstroVed
search
search

கும்பம் டிசம்பர் மாத ராசி பலன் 2021 | December Matha Kumbam Rasi Palan 2021

dateNovember 11, 2021

கும்பம் டிசம்பர் 2021 பொதுப்பலன்கள்:

கும்ப ராசி அன்பர்களே!  இந்த மாதம் குடும்ப உறவினர்கள் உறவில் குறிப்பாக தந்தை வழி உணவினர்கள் உறவில் கவனம் தேவை. கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கணவன் மனைவி  உறவு சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் மந்த நிலை காரணமாக உங்கள் முன்னேற்றத்தில் தடைகளும் தாமதங்களும் இருக்கும்.  போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி காண கடுமையாக உழைக்க வேண்டும். இந்த மாதம் சிறிய உடல் உபாதை என்றாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வது நன்மையை கொடுக்கும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள். 

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்

காதல் / குடும்பம்:

உறவு நிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் சிறிது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வார்ததைகளில் கவனம் தேவை. தேவையற்ற பேச்சுகள் காரணமாக கருத்து வேறுபாடு ஏற்படலாம். உங்கள் தந்தை வழி உறவினர்களுடன் மோதல்கள் ஏற்படலாம் என்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை ஓங்கும். கருத்து வேறுபாடுகள் நீங்கும்.  நல்ல புரிந்துணர்வு இருக்கும். அன்னியோன்யம் பெருகும்.

திருமணமான தம்பதிகளுகிடையே வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்பட சுக்கிரன் பூஜை

நிதி நிலை:

இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலையில் ஏற்றம் இருக்கும். தொழில் மூலம் கணிசமான பண வரவு இருக்கும். குறிப்பாக உணவு தொடர்பான தொழில் நடத்துபவர்கள் சிறந்த பண வரவைக் காண்பார்கள். வெளி நாடுகளில் வேலை செய்பவர்கள் நல்ல வருமானம் ஈட்டுவார்கள். பங்கு வர்த்தகம் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். 

நிதி நிலையில் ஏற்றம் உண்டாக கோ பூஜை

வேலை:

கும்ப ராசி அன்பர்களுக்கு பணியில் மந்த நிலை காணப்படும். அதனால் உங்கள் முன்னேற்றங்களில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். அதிக பணிகள் காணப்படும்.  நீங்கள் கடின உழைப்பு மேற்கொள்ள வேண்டியிருக்கும். சக பணியாளர்கள் உங்களுக்கு சிறந்த ஒத்துழைப்பை அளிப்பார்கள். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த பதவி உயர்வு கிட்டும். 

தொழில்:

தொழில் செய்பவர்கள் இந்த மாதம் தொழில் சிறப்பாக இருக்கக் காண்பார்கள். தொழில் மூலம் வருமானம் கணிசமாக உயரும். என்றாலும் அதிக அளவில் போட்டியாளர்களை சந்திக்க நேரும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாகச் செயல்பட வேண்டும். தொழில் குறித்த முக்கிய முடிவுகள் எதையும் இன்று எடுக்கக் கூடாது.  

தொழில் வல்லுனர்கள்:

தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சிறப்பாகச்  செயல்படுவார்கள். தொழிலில் படிப்படியான முன்னேற்றம் காண்பார்கள். உங்கள் வளர்ச்சி காரணமாக நீங்கள் போட்டியாளர்களையும் அதிக அளவில் சந்திக்க நேரும். முதலீடுகள் குறித்த முடிவுகளை எடுக்கும் போது ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்துச் செயல்பட வேண்டும். 

உத்தியோகம் மற்றும் தொழிலில் உயர்வு கிடைக்க சூரியன் பூஜை

ஆரோக்கியம்:

உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருந்தாலும் நீங்கள் சிறுசிறு உடல் உபாதைகளை சந்திப்பீர்கள். அஜீரணக் கோளாறு மற்றும் குடல் சம்மந்தப்பட்ட பிரச்கனைகள் வரலாம். உண்ணும் உணவில் கவனம் தேவை. பெற்றோரின் உடல் நலனில் அக்கறை தேவை. 

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு முருகன் பூஜை

மாணவர்கள்:

பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் மனதை ஒருமுகப் படுத்துவதில் சில பிரச்சினைகளை சந்திப்பார்கள். படிப்பில் கவனச்சிதறல் ஏற்படலாம். அதிக முயற்சியுடன் கவனமும் அவசியம் தேவை. ஞாபகத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்கள் இந்த மாத ஆரம்பத்தில் சில பிரச்சினைகளை சந்திப்பார்கள். என்றாலும்  படிப்படியாக முன்னேற்றம் கிடைக்கும்.  

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க புதன் பூஜை

சுப நாட்கள்: 

2, 8, 9, 13, 19, 29, 31.

அசுப நாட்கள்:

3, 4, 22, 26, 27, 28.


banner

Leave a Reply