மீனம் டிசம்பர் மாத ராசி பலன் 2021 | December Matha Meenam Rasi Palan 2021
டிசம்பர் மீனம் 2021பொதுப்பலன்கள்:
மீன ராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்ப உறவுகளுக்கு இடையேயான உறவு நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் குடும்பத்தில் இருக்கும் வயதில் மூத்தவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் உங்களுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்கள் நிதிநிலையில் ஏற்றம் காணப்படும். குழந்தைகளுடனான உறவு வலுப்படும். தொழில் மூலம் வருமானம் கூடும் புதிய தொழிலை தொடங்குவதற்கு இது ஏற்ற மாதம் ஆகும். உங்களில் சிலர் உத்தியோகம் காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
மீன ராசி காதலர்கள் இந்த மாதம் தங்கள் உறவில் கவனமாகச் செயல்பட வேண்டும். கருத்து வேறுபாடுகள் காரணமாக உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சில் கவனம் தேவை. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே நல்லிணக்கம் கூடும். அன்னியோன்யம் கூடும். தாம்பத்திய வாழ்வு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். நண்பர்களிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள்.
குடும்ப உறவில் மகிழ்ச்சி அதிகரிக்க செவ்வாய் பூஜை
நிதி நிலை:
மீன ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் பொருளாதாரம் வரவேற்கத்தக்க நிலையில் இருக்கும். உங்கள் நிதிநிலை மேம்படும். முன்னேற்றம் இருக்கும். நிலுவையில் இருக்கும் கடன் தொகைகளை திருப்பிச் செலுத்த இது ஏற்ற மாதமாகும். இந்த மாதம் வீடு பராமரித்தல் போன்ற வகையில் செலவுகள் ஏற்படும்.
தன நிலையில் ஏற்றம் ஏற்பட லக்ஷ்மி பூஜை
வேலை:
நீங்கள் தனியார் துறையில் பணிபுரிபவர் என்றால் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் வாக்குவாதங்களை மேற்கொள்ளுதல் கூடாது. நீங்கள் அரசுத் துறையில் பணிபுரிபவர் என்றால் சக பணியாளர்களின் ஆலோசனை உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
தொழில்:
இந்த மாதத்தில் தொழில் சிறப்பாக இருக்கும். குறிப்பாக கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். உங்கள் தொழில் மூலம் கணிசமான வருமானம் அதிகரிக்கும். லாபம் பெருகும். புதிய தொழில் வாய்ப்புகள் உங்களை நாடி வரும். கூட்டுத்தொழில் மூலம் அதிக லாபங்களை எதிற்பார்க்கலாம். வெளிநாட்டுத் தொழில் செய்பவர்கள் சிறந்த லாபம் காண்பார்கள். நீங்கள் போட்டியாளர்களை சிறந்த முறையில் வெற்றி காண்பீர்கள்.
தொழில் வல்லுனர்கள்:
இந்த மாதம் மீன ராசி தொழில் வல்லுனர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள். உங்கள் திறமைக்கான அங்கீகாரம் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களின் மத்தியில் நல்ல பெயரும் புகழும் பெறுவர்கள். என்றாலும் உங்கள் வார்த்தை மற்றும் செயல்களில் கவனம் தேவை.
உத்தியோகம் மற்றும் தொழிலில் உயர்வு கிடைக்க சனி பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பக இருக்கும். பெரிய அளவிலான ஆரோக்கிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. சிறு சிறு உபாதைகள் வந்தாலும் எளிதில் குணமாகி விடும். உங்கள் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும்.
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வைத்தியநாத பூஜை
மாணவர்கள்:
பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி படிப்பார்கள். கவனிப்புத் திறன் அதிகரிக்கும். தேர்வெழுதும் மாணவர்கள் சிறப்பாகத் தேர்வுகளை எழுதி வெற்றி காண்பார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் அதிக முயற்சியுடனும் கவனமுடனும் படிக்க வேண்டும். ஞாபகத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அறிவியல் மற்றும் கணித துறை சார்ந்த மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயின்று கல்வியில் வெற்றி காண்பார்கள்.
மாணவர்களின் கிரகிக்கும் தன்மை அதிகரிக்க புதன் பூஜை
சுப நாட்கள்:
2, 8, 9, 13, 19, 29, 31.
அசுப நாட்கள்:
1, 2, 3, 4, 22, 23.











