Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW
Search

போகர் சித்தர் வரலாறு | Bogar Siddhar History In Tamil

July 17, 2021 | Total Views : 2,640
Zoom In Zoom Out Print

போகர் சித்தர் வரலாறு | Bogar Siddhar History In Tamil:

பதினெண் சித்தர்களுள் சிறப்பு வாய்ந்தவர் போகர் சித்தர் ஆவார்.  இவர் நவசித்தர்களுள் ஒருவரான காளங்கி நாதர் என்பவரின் சீடராவார். புகழ் பெற்ற புலிப்பாணி என்னும் சித்தருக்கு இவர் குருவாக விளங்கியவர். போகர் இயற்றிய நூல்களில் இருந்து அவரது காலம் கி.மு. 500 மற்றும் கி.மு. 100 க்கு இடைப்பட்ட காலம் என அறிய முடிகிறது. பிற வரலாற்றுப் பதிவுகளும் அவ்வாறே கூறுகின்றன. இவர் சித்த மருத்துவத்திலும், யோகக் கலைகளிலும், இரசவாதம் செய்வதிலும், தத்துவ விஷயங்களிலும், சிறந்து விளங்கியவர். அது மட்டுமின்றி இவர் சிறந்த எழுத்தாளராகவும் இருந்தார் என்பது இவரின் சிறப்பு. காயகற்பம் மற்றும் யோகாசனத்தில் இவர் சிறந்து விளங்கியவர். இவர் தமிழிலும் சீன மொழியிலும் பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் பல ஆன்மீக கதைகள், ஜோதிட (Tamil Astrology) தகவல்கள் மற்றும் கோவில்கள் பற்றி அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள் 

சீனாவில் போகர் சித்தர்:

போகர் சித்தர் சீனாவில் ஒரு உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்  என்றும் அவரது பெயர்  "போயாங் வேய்" என்றும் வரலாற்றில் இருந்து நம்மால் அறிய முடிகிறது. சீன அரச குடும்பத்துடன் இவர் குடும்பத்திற்கு தொடர்பு  இருந்தது என்றும் அறிய முடிகிறது. இவர் பின்பற்றிய கோட்பாடு தாவோயிசம் என்று அறியப்படுகின்றது.  சீனாவில் வாழ்ந்த போது "போயாங் வேய்" என்னும் போகர் சித்தர் இறவா நிலை அடைய வேண்டும் என்று ஒரு சில சீடர்கள் மற்றும் நாயுடன் மலை உச்சியில் இரவு பகல் பாராமால் ஆராய்ச்சி செய்து அமிர்தம் ஒன்றை கண்டுபிடித்தார் என்று வரலாறு கூறுகிறது. அந்த ஆராய்ச்சியின்  விளைவு : முதலில் அதனை நாய்க்கு கொடுத்து சோதனை செய்ய அந்த நாய் மயங்கி விழுந்தது. தமது கண்டுபிடிப்பு தோல்வி அடைந்தது என்று கருதாமல்  "போயாங் வேய்" என்னும் போகர் தாமும் அதனைப் பருகினார். அதனைக் கண்ட அவரது சீடருள் இருவர் குருவின் வழியே தமது வழி என்று தாமும் பருகி மயங்கினர். போகரை நம்பாத சீடர்கள் விலகினர். சிறிது நேரத்தில் விழித்தெழுந்த "போயாங் வேய்" மீதமுள்ள அமுதத்தை மயங்கிக் கிடந்த நாய்க்கும் சீடருக்கும் புகட்ட அவர்கள் விழித்து எழுந்தனர். பண்டைய சீன ஓவியம் ஒன்றில்  போகர் அவருடைய சீடருடன் மலை உச்சியில் நுட்பமான அமுதம் ஒன்றினை தயாரிப்பதாய் உள்ள ஓவியம் மேலே சொன்ன கதைக்கு சான்றாக விளங்குகிறது என்பதையும் நாம் வரலாறு மூலம் அறிகிறோம். தாவோயிசம் எனப்படும் தத்துவ கோட்பாட்டை கிழக்கு ஆசிய நாடுகள் முழுமைக்கும் அக்காலத்தில் வேரூன்ற செய்த ஒரு முக்கிய நபராகவும், இரசவாதத்தின் தந்தை எனவும் அவர் இன்றளவும் கிழக்காசிய மக்களால் அழைக்கப்படுகிறார்.

நவநாயகராக போகர் :

அண்டை நாடான சீன தேசமும், நமது பாரத தேசமும், புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால், மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது. அங்கே, ‘போ யாங்’ என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள், கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து, சீனராகவே வாழ்ந்தார் என்றும் ஒரு கதை உண்டு.

சீனர்கள், இந்தியர்களில் இருந்து உணவுப் பழக்க வழக்கங்களில் பெரிதும் வேறுபட்டவர்கள். இந்திய உணவில் அறுசுவை உண்டு. சாத்வீகமான உணவு வகைகள் உண்டு இந்திய உணவு சமச்சீர் உணவு ஆகும்.  சீனர்களிடம் அப்படி இல்லை. அவர்களது உணவுமுறை ரஜோ குணத்தை தூண்டுவதாகவும்; எலும்பு, நரம்பு இவைகளை வலுவாக வைத்துக்கொள்ளத் தக்கதாகவும் இருந்தமையால், அவர்களிடம் பல வித்யாசமான பயிற்சி முறைகள் இருந்தன.அதில் ‘ரஜோலி’ என்னும் யோக முறையும் ஒன்று. போகர் அதை ஆர்வத்துடன் பழகிடும்போது தலையில் அடிபட்டு அவருக்குள் அவர் பற்றிய அவ்வளவு எண்ணங்களும் மறைந்துபோன. பின்னர், அவரைத் தேடிக்கொண்டு வந்த போகரின் மாணாக்கர்களில் ஒருவரான புலிப்பாணி, போகரின் நிலை கண்டு கலங்கி, அவரைத் தன் முதுகில் சுமந்துகொண்டு இந்தியா திரும்பினார் என்றும் சொல்வர்.

அதன்பின் குருவுக்கே அவரிடம் கற்றதை உபதேசித்து, அவருக்குள் மீண்டும் பழைய எண்ணங்களை தோற்றுவித்தார். ஒரு சீடன், குருவுக்கு உபதேசிப்பது என்பது காரியப் பிழையில் முடிந்து, முடிவில் அவனையே சாபத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதால்,புலிப்பாணி, போகரின் தண்டத்திற்கு உபதேசிப்பது போல போகருக்கு உபதேசித்து போகரை மீண்டும் நிலை நிறுத்தினார். அதன்பின், போகர் ஒரு புத்துயிர்ப்போடு எழுந்தார்.பலவித அனுபவங்களால் பழுத்த ஞானியாகிவிட்ட அவர், இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் பழனி. அங்கேயே முக்தியும் அவருக்குக் கிட்டியது. மொத்தத்தில் போகர் என்றால் ‘நவநாயகர்’ என்றும் கூறலாம்.

தமிழகத்தில் போகர் சித்தர்:

வைகாசி மாதத்து பரணி நட்சத்திரத்தில் பிறந்த போகரின் பிறப்பு மூலம் பற்றி விரிவான விஷயங்கள் இதுவரை யாருக்கும் கிடைக்கப் பெற்றதில்லை. நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதர் இவரின் குருவாக விளங்கியவர்  என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒரு செய்தி.அதை இவரது, அரிய நூல்களுள் ஒன்றான ‘போகர் ஏழாயிரம்’ எனும் நூலின் வழி அறியலாம்.

முருக பக்தராக போகர் சித்தர்:

சித்தம் போக்கு சிவம் போக்கு என்பார்கள். சித்தர்கள் யாவரும் சிவபெருமானின் பக்தர்கள். அவனின் தொண்டர்கள். பொதுவாக சித்தர்கள் சித்த மயம் சிவ மயம் என்று தங்களுக்குள் இறைவனைக் கண்டு  இன்பம் கொள்ளுவார்கள். இவர்கள் ஆன்மீகத்தில் நாட்டக் கொள்ள மாட்டார்கள். பக்தர்கள் பின்பற்றும் ஆலய வழிபாடு, விக்கிரக வழிபாடு, வழிபாட்டு நியமங்கள், ஆசார அனுஷ்டானங்கள்  இவற்றையெல்லாம் பின்பற்ற மாட்டார்கள்.  ஆனால் போகர் சித்தர் இவர்களில் இருந்து வேறுபட்டுத் தெரிகிறார். உமையொரு பாகமாய் விளங்கும் சிவனை வணங்கிய போகர் சித்தர் அன்னையின் அருளையும் பெறும் பேற்றைப் பெற்றவர். அன்னையின் வழிகாட்டுதலின் படி பழனி மலை முருகனை வணங்கி முருக பக்தர் ஆனவர். முருகனை தரிசனம் செய்ய பழனி மலையில் தவம் இருந்தவர். முருகனை தண்டாயுதபாணியாக தரிசனம் செய்தவர். 

உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக, தான் தரிசித்த தண்டாயுபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர்.கௌரிப் பாஷாணம், கெந்தகப் பாஷாணம், சீலைப் பாஷாணம், வீரப் பாஷாணம்,  கச்சாலப் பாஷாணம், வெள்ளைப் பாஷாணம்,  தொட்டிப் பாஷாணம், சூதப் பாஷாணம்,  சங்குப் பாஷாணம் என்னும் நவ பாஷானங்களை பல செய்முறைகளுக்கு உட்படுத்தி அவற்றை சுத்திகரித்து பழனி தண்டாயுதபாணி விக்கிரகம் வடிவமைக்கப்பட்டதாக போகர் தமது பாடலில் கூறியிருக்கிறார். இவரின் இந்தப் படைப்பு இன்றைய நவீன விஞ்ஞானத்திற்கே சவாலாகத் தான் உள்ளது என்பதில் இருந்து இவரின் மகிமையை நாம் அறியலாம்.இச்சிலைகான வழிபாடு, திருமுழுக்கு விதிமுறைகள் புலிப்பாணி சித்தர் மறைப்பொருளாக இயற்றி வைத்திருக்கும் ஒருசில குறிப்புகளின் வாயிலாக நமக்கு கிடைக்கப் பெற்றாலும் இச்சிலை தற்போது சேதமடைந்து விட்டது. எனவே இச்சிலைக்கு அபிடேகம் நடைபெறுவதி‌ல்லை.

மனிதனின் வாழ்க்கை அவரவர் கர்ம வினைகளின் படிதான் நிர்ணயிக்கப்படுகின்றது. அந்தக் கர்ம வினைகளை நிர்ணயிக்கும் காரணிகளாக கோள்கள் விளங்குகின்றன. மனிதப் பிறப்பானது கோள்களால் நிர்வகிக்கப்படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வுசெய்து அதிலிருந்து தண்டாயுத பாணியை செய்து, கோள்களை ஓர் உருவுக்குள் அடக்கிப் பூட்டியவர் போகர் என்றும் கூறுவர்.தண்டாயுத பாணியை எவர் வந்து தரிசித்து வணங்கினாலும் நவ கோள்களையும் ஒருசேர வணங்கிய ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு உண்டாவது, இதனுள் அடங்கிக் கிடக்கும் இன்னொரு நுட்பம்.

சிறந்த எழுத்தாளராக போகர் சித்தர்:

போகர் தமிழில் இயற்றியுள்ள  பல படைப்புகளில் ஒரு சிலவே அறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போகர் தமிழில் இயற்றியதாக சுமார் 64 நூல்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இவர் எழுதியதாக சுமார் 26,307 பாடல்கள் கிடைக்கப்பெறுகின்றன. இதுவரை 23 நூல்கள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன. இதன் மூலம் 11,000 பாடல்கள் வெளிவந்தமை தெளிவாகிறது. அவர் சீன மொழியில் இயற்றிய கான்டொங் குய் என்னும்நூலைப் படைத்துள்ளார்.

போகரின் சிந்தனை முழுவதும் மனித பிறப்பு, மனித சமுதாய நலம் என்பதில் தான் இருந்தது என்றால் மிகை ஆகாது. மனிதப் பிறப்பின் ரகசியம், ஜனன மரண சுழற்சி, ஏழை, பணக்காரன் என்ற பிறப்பு வித்தியாசம்  போன்ற அவருள் எழுந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தேடித் தேடி மனித சமுதாய நலனுக்கு தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார். மனித சமுதாயத்தை நோயின்றி வாழ வைக்க வேண்டும் என்ற எண்ண வெளிப்பாடுகளாக அவரின் நூல்கள் அமைந்தன. அவ்வாறு அவர் எழுதிய நூல்கள் 

போகர், சப்த காண்டம்; கற்ப சூத்திரம் 54;வைத்திய சூத்திரம் 77;முப்பு சூத்திரம் 51;ஞான சூத்திரம் 37;அட்டாங்க யோகம் 24;பூசா விதி 20; இரணவாகமம் 100;ஞானசாராம்சம் 100;ஜெனன சாகரம் 550; நிகண்டு 1700; வைத்தியம் 1000;சரக்குவைப்பு 800;கற்பம் 360;உபதேசம் 150;

இவர் தம் சுவடிகள் பெரும்பாலும் சென்னை சுவடி நூலகம், தஞ்சை சரஸ்வதி மகால், சென்னை சித்தமருத்துவ மேம்பாட்டு குழு, புதுச்சேரி பிரெஞ்சு கழகம், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, கேரள பல்கலைக்கழக சுவடி மையம், முதலிய இடங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

banner

Leave a Reply

Submit Comment