சிம்மம் ராசி பொதுப்பலன்கள் :
இந்த மாதத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்யத்தில் கவனம் செலுத்தவும். பயணம் மேற்கொள்ளும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். தொழில் சம்பந்தப்பட்ட எல்லா நடவடிக்கைகளும் சிறப்பாக அமையும். வெளியூர் பயணங்கள் இந்த மாதம் தள்ளிபோடுவது நல்லது. தொலைதூரத் தொடர்புகள் புதிய நட்புகளை உருவாக்கக் கூடும். இவை வருங்காலத்தில் உங்களுக்கு நல்ல ஆதரவை அளிக்கும். தொழில் ரீதியாக, நன்மை பயக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். சூழ்நிலைகள், சில சமயங்களில், உங்கள் பொறுமையை சோதிக்கலாம். ஆயினும், எளிதில் நம்பிக்கை இழக்காதீர்கள். கடினமாக உழைத்து, அதிக உற்பத்தித் திறனை அடையும் காலம் இது. குடும்ப விஷயங்களில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
சிம்மம் ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை :
இது உங்கள் காதலுக்கு ஒரு முற்போக்கான மாதம். திருமணமாகதவர்களுக்கு புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வர திருமணம் நடக்கும். உங்கள் காதலும், உறவும் உண்மையானதாக இருக்கும் அன்பானவர்களுடன் நேரத்தைச் செலவிட்டு மகிழ்வீர்கள்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
சிம்மம் ராசி நிதி :
இந்த மாதம் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். உங்களுடைய நிதி சம்பந்தமான விஷயங்களில் படிப்படியான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். செய்தொழிலில் லாபங்கள் நிறைய கிடைக்க வாய்ப்பு உண்டு. அதனால் உங்கள் சேமிப்பைப் பெருக்குவதற்கு இது சரியான நேரம்.
சிம்மம் ராசி வேலை :
இந்த மாதம் வேலை செய்வோருக்கு சம பலன் தரும் மாதமாகும். கீழே பணிபுரிபவர்களிடம் நட்புடன் பழக வேண்டும். முடிந்தவரை உங்கள் அனைத்துப் பணிகளையும், நிலுவையில் வைக்காமல், விரைவாக முடிக்க வேண்டும். உடன் பணியாற்றும் ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள்.
சிம்மம் ராசி தொழில் :
இந்த மாதம் உங்கள் தொழில் முன்னேற்றம் சிறப்பாக அமையும். உங்கள் தைரியமான அணுகுமுறையும் சுதந்திரமான இயல்பும் உங்களுடைய தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். நீங்கள் எந்த வகையான வேலையை எடுத்துச் செய்தாலும் அதில் சிறப்பாக செயல்படுவீர்கள்.
சிம்மம் ராசி தொழில் வல்லுநர்கள் :
இந்த மாதம் சில தாமதங்கள் ஏற்பட்டாலும், தொழில் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு வாய்ப்புகள் அல்லது புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்களுடைய செயல்திறன் மூலம் உங்களுக்கு நன்மையான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் தனிப்பட்ட திறமைகளை வெளிக்காட்டும் வகையில் நீங்கள் செயல்படுவீர்கள்.
சிம்மம் ராசி ஆரோக்கியம் :
இந்த மாதம் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடலில் சிறு பிரச்சினை என்றாலும் அதை உடனே கவனித்து விடுங்கள். உங்கள் உடலில் சக்தி குறைபாடு காரணமாக மந்தமாகக் காணப்படுவீர்கள். கபம் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படும். பச்சை காய்கறிகள். உட்கொள்வது, உங்களுக்கு ஆற்றலும், சுறுசுறுப்பும் அளிக்கும்.
சிம்மம் ராசி மாணவர்கள் :
மாணவர்களைப் பொறுத்தவரையில், இது ஒரு சாதாரண காலமாக இருக்கும். நண்பர்களுடன் நல்லுறவை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்தக் காலகட்டத்தில் உங்கள் படிப்பு சீரான போக்கில் இருக்கும். நண்பர்களுடன் மோதல்கள் ஏற்படக்கூடிய காலம் ஆதலால் உங்கள் மன நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள்.உங்களின் ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம், ராசிரத்தினம் தேடலுக்கு எங்களை அணுகவும்.
சுப நாட்கள் : 1,2,13,14,15,23,24,25,28,29
அசுப நாட்கள் : 3,4,16,17,21,22,30

Leave a Reply