மேஷம் ராசி பலன் ஏப்ரல் 2022 | April Month Mesham Rasi Palan 2022

மேஷம் ராசி பலன் ஏப்ரல் 2022 பொதுப்பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தேவையற்ற பேச்சுகள் மற்றும் வாக்கு வாதம் தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் இருக்கும் மேஷ ராசி அன்பர்களுக்கு இது முன்னேற்றம் தரும் காலம் என்று கூறலாம். வேலையில்லாதவர்களுக்கு இந்த மாதம் வேலை கிட்டும். நீங்கள் வெளி நாட்டிற்கு சென்று வேலை செய்ய வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தால் உங்கள் எண்ணங்கள் ஈடேறும். தொழிலில் சிறப்பாக நடக்கும் என்றாலும் நீங்கள் அதிக கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் பொருளாதார நிலையில் இந்த மாதம் ஏற்றம் இருக்கும். அதிக பணவரவு மற்றும் பணப்புழக்கம் இருக்கும். மாணவர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டகரமான மாதமாக இருக்கும். வெளி நாடு சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதலைப் பின்பற்றினால் வெற்றி காண்பார்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்
காதல் / குடும்பம்:
இளம் வயது மேஷ ராசி அன்பர்கள் மனதில் காதல் அரும்பு மலரும். உங்கள் காதல் துணையை மகிழ்விக்க நீங்கள் பணத்தை செலவு செய்வீர்கள். கணவன் மனைவி இடையில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்து போகும். குறிப்பாக பணம் சம்மந்தப்பட்ட விசயமாக கருத்து வேறுபாடு எழும். வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள்.
கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க சுக்கிரன் பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடந்த சென்ற மாதத்தை விட இந்த மாதம் பண வரவு சற்று அதிகமாக இருக்கும். உங்களில் சிலர் தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தில் கடன் வாங்க நேரலாம். பணம் சம்மந்தப்பட்ட உங்கள் கனவுகள் யாவும் நிறைவேறும் மாதமாக இந்த மாதம் இருக்கும். வெளியிடங்களுக்கு செல்வது குறித்து பிரயாணத்திற்காக அதிகம் செலவு செய்ய நேரிடலாம்.
கடன் பிரச்சனை தீர ருண விமோச்சன பூஜை
வேலை:
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்கக் காண்பார்கள். குறிப்பாக படைப்புத் துறை மற்றும் அச்சுத்துறையில் பணி புரிபவர்களுக்கு இது சிறந்த மாதமாக இருக்கும்.
உங்களுக்கு அளிக்கப்படும் பொறுப்புகளை நீங்கள் சரிவர நிறைவேற்றுவீர்கள். அரசு உத்தியோகத்தில் உள்ளவர்கள் கடினமாக உழைப்பதன் மூலமும் சக பணியாளர்களிடம் நல்லுறவு பேணுவதன் மூலமும் பணியிடத்தில் நல்ல பெயரும் புகழும் பெறுவீர்கள். பணியிடத்தில் நீங்கள் உங்கள் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றுவீர்கள்.
தொழில்:
இந்த மாதம் தொழில் சிறப்பாக நடக்கும். ஏற்றுமதி தொழில் செய்பவர்கள் தொழிலில் லாபம் அதிகரிக்கக் காண்பார்கள். தொழில் மூலம் பண வரவு அதிகரிக்கும். நகை சம்மந்தப்பட்ட தொழிலில் சிறிது பதட்ட நிலை இருக்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய ஏற்றுமதி தொழில் செய்பவர்கள் இந்த மாதம் அதிக பண வரவைக் காண்பார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் இந்த மாதம் தங்கள் தொழில் சிறப்பாக நடக்கக் காண்பார்கள். என்றாலும் நீங்கள் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும்.
தொழில் வல்லுனர்கள்:
மேஷ ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் மிகச் சிறப்பாகச் செயல்படுவார்கள். கடின உழைப்பை நீங்கள் மேற்கொள்வீர்கள். தனியார் துறையில் வேலையில் உள்ள தொழில் வல்லுனர்களுக்கு பணியிடத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவார்கள். உங்கள் உழைபிற்கேற்ப நீங்கள் ஆதாயம் காண்பீர்கள். உங்கள் பெயரும் புகழும் அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள். அவர்களுடன் நல்லிணக்க உறவும் நட்பும் மேலோங்கும். வணிகம், ஐடி போன்ற துறைகளில் பணி புரிபவர்கள் பணியில் பதட்டமான நிலை இருக்கக் காண்பார்கள்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண சனி பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். அதனை தக்க வைத்துக் கொள்ள முறையான உடற்பயிற்சியும் சத்தான உணவும் அவசியம். துரித உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். தியானம் மற்றும் நடை பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.
உடல் ஆரோக்கியத்திற்கு புதன் பூஜை
மாணவர்கள்:
மேஷ ராசி மாணவ மாணவியர்கள் இந்த மாதம் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள். விவேகத்துடன் செயல்படுவார்கள். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை நிரூபிக்கும் மாதமாக இந்த மாதம் உங்களுக்கு இருக்கும். பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்கள் தைரியமாகச் செயல்படுவார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று கல்வியில் தேர்ச்சி பெறுவார்கள். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வுகளை எழுதி வெற்றி வாகை சூடுவார்கள்.
மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூட கணேஷா பூஜை
சுப நாட்கள்:
3, 4, 6, 7, 8, 21, 22, 23,
அசுப நாட்கள்:
1, 2, 5, 19, 20, 29, 30.
