ரிஷபம் ராசி பலன் ஏப்ரல் 2022 | April Month Rishabam Rasi Palan 2022

ரிஷபம் ராசி பலன் ஏப்ரல் 2022 பொதுப்பலன்கள்:
ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இணக்கம் கூடும். குடும்பச் சூழல் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். இளம் வயதினர்கள் மனதில் காதல் அரும்பு மலரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த மாதம் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். அவர்களுடன் நல்லுறவைப் பேணுவீர்கள். தொழில் சிறப்பாக நடக்கும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள். இந்த மாதம் மாணவர்களுக்கு நம்பிக்கை தரும் மாதமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும் என்பதால் கவனம் தேவை. தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்
காதல் / குடும்பம்:
இளம் வயது ரிஷப ராசியினரின் மனதில் காதல் அரும்பு மலரும். உங்கள் காதலை, உங்கள் துணை எளிதில் ஏற்றுக் கொள்வார். காதலர்கள் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வார்கள். திருமணமான தம்பதிகள் உறவில் ஒற்றுமை அதிகரிக்கும். தாம்பத்திய உறவில் நல்லிணக்கம் கூடும். குடும்ப உறுப்பினர்களுடன் பெரியவர்கள், குழந்தைகள் அக்கம் பக்கத்தினர் மற்றும் நண்பர்களிடம் நல்லுறவு காணப்படும்.
நிதி நிலை:
இந்த மாதம் உங்கள் நிதிநிலை ஏற்றமுடன் காணப்படும். உபரி வருமானம் கிட்டும். அதன் காரணமாக பணப் புழக்கம் சரளமாக இருக்கும். நிலம் அல்லது வண்டி வாங்கும் யோகம் உள்ளது. நீண்ட நாட்களாக நிலம் வாங்கவேண்டும் என்று இருந்த உங்கள் கனவுகள் நிறைவேறும் மாதமாக இந்த மாதம் அமைகிறது. பங்கு வர்த்தக முதலீடு மூலம் அதிக லாபம் மற்றும் ஆதாயங்களைக் காண்பீர்கள்.
வேலை:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடச் சூழல் அனுகூலமாக இருந்தாலும் பொறுப்புகள அதிகம் நிர்வகிக்க வேண்டியிருக்கும். இதனால் வேலையின் சுமை அதிகமாக இருக்கும். மலை போல பணிகள் வந்து குவியும். புதிதாக அரசு வேலைக்கு சேர்ந்திருப்பவர்களுக்கு சிறிது பதட்டநிலை காணப்படும். பொதுப்பணி துறையை சார்ந்தவர்கள் வெளியூர் சென்று வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.
தொழில்:
இந்த மாதத்தில் கூட்டுத் தொழில் நன்றாக இருக்கும். கூட்டுத் தொழிலில் அதிக லாபத்தை எதிர்பாக்கலாம். இந்த மாதம் பழ வியாபாரத்தில் அதிக லாபங்களை எதிர்பார்க்க முடியாது. விவசாய தொழில் செய்பவர்கள் நல்ல லாபங்களை ஈட்டுவார்கள்.
தொழில் வல்லுனர்கள்:
உத்தியோகத்தில் உள்ள தொழில் வல்லுனர்கள் மேலதிகாரிகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வார்கள். பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்கும். என்றாலும் உங்கள் பணியிடத்தில் தலைமைப் பொறுப்பு உங்களை வந்து சேர வாய்ப்பு உள்ளது. பொறுப்பை ஏற்றுக் கொள்வீர்கள். வெளிநாட்டில் வேலை தேடும் தொழில் வல்லுனர்களுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். அரசு துறையில் வேலையில் இருக்கும் தொழில் வல்லுனர்களுக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும்.
ஆரோக்கியம்:
உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்றாலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும். அஜீரணக் கோளாறு மற்றும் குடல் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் வரலாம். எனவே உண்ணும் உணவில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மாணவர்கள்:
பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். என்ற போதிலும் சில தடைகளை சந்திக்க நேரிடும். இந்த மாத கடைசி பகுதியில் படிப்பில் ஏற்றம் காண்பார்கள். வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் தங்கள் எண்ணங்கள் ஈடேறக் காண்பார்கள். வெளிநாட்டில் உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
சுப நாட்கள்:
12, 13, 14, 16, 18, 19.
அசுப நாட்கள்:
1, 2, 9, 15, 17.
