தனுசு ராசி பலன் ஏப்ரல் 2022 | April Matha Dhanusu Rasi Palan 2022

தனுசு ராசி ஏப்ரல் 2022 பொதுப்பலன்கள்:
இந்த மாதம் உங்கள் குடும்ப உறவு சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். உங்கள் பொருளாதார நிலை இந்த மாதம் சாதகமாகவும் அனுகூலமாகவும் இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். உங்கள் மேலதிகாரிகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். வெளிநாட்டு தொடர்பான ஏற்றுமதி தொழில் செய்பவர்கள் சிறந்த ஆதாயம் காண்பார்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தனுசு ராசி மாணவர்கள் மனதில் இந்த மாதம் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்
காதல் / குடும்பம்:
இந்த மாதம் காதலர்களுக்கும் காதல் உறவுக்கும் ஏற்ற மாதம் அல்ல. கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிவினை ஏற்பட வாய்ப்புள்ளது. திருமணமான தம்பதியர்கள் கருத்தொருமித்து வாழ்வார்கள். நல்ல புரிந்துணர்வு இருக்கும். அன்னியோன்யம் கூடும். வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கருத்து மோதல்கள் வரலாம். வாக்கில் கவனம் தேவை. தாயாருக்கு உடல் நலக் குறைவு ஏற்படலாம். கவனம் தேவை.
காதலில் வெற்றி உண்டாக லக்ஷ்மி பூஜை
நிதி நிலை:
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இது வரவேற்கத்தக்க மாதமாக இருக்கும். உங்களுக்கு பல விதங்களில் பண வரவு கிட்டும். பங்கு வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கும் லாபங்களை ஈட்டுவதற்கும் இந்த மாதம் அனுகூலமான மாதமாக இருக்கும். புதிய நண்பர்கள் மூலம் உங்களுக்கு தன உதவி கிடைக்கும். தங்களின் பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும்.
பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை
வேலை:
தனுசு ராசி வேலை தேடும். அன்பர்களுக்கு இந்த மாதம் வேலை கிட்டும். அரசுத் துறையில் பணி புரிபவர்கள் ஆக்கப் பூர்வமாகப் பணியாற்றுவார்கள். வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதம் சாதகமாக இருக்கும். அரசாங்கத் துறையில் வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதம் வேலை கிட்டும்.
தொழில்:
தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் தொழில் சிறப்பாக நடக்கும். குறிப்பாக கூட்டுத் தொழில் உங்களுக்கு லாபத்தை அளிக்கும். லாபமும் ஆதாயமும் உங்களை நாடி வரும். தொழில் ஒப்பந்தம் சார்ந்த ஆவணங்களில் கையொப்பமிடுமுன் கவனம் தேவை.ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து செயல்பட வேண்டும். சுய தொழிலில் உங்களுக்கு தன ரீதியான நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தொழில் வல்லுனர்கள்:
வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றி நீங்கள் சாதனைகளைப் புரிவதற்கு வாய்ப்பு உள்ளது. நீங்கள் சிறப்பாகச் செயலாற்றி நல்ல பெயரும் புகழும் அடைவீர்கள். பணியிடச் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். பணிகள் மலை போலக் குவியும். அதிக வேலைச் சுமை காரணமாக உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம் காணப்படும்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் உயர்வு உண்டாக அஷ்ட லக்ஷ்மி பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். சிறுநீரகம் சம்மந்தப்பட்ட உடல் நல பாதிப்பு ஏற்படலாம். போதுமான நீர் உட்கொண்டு இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். தாய் மற்றும் தந்தையின் உடல்நலனில் அக்கறை தேவை.
ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை
மாணவர்கள்:
தனுசு ராசி மாணவர்கள் மனதில் இந்த மாதம் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். ஆராய்ச்சி கல்வி மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெற்று முதல் நிலையை பிடிப்பார்கள்.
கல்வியில் சிறந்து விளங்க புதன் பூஜை
சுப நாட்கள்:
13, 14, 17, 18, 19, 21, 22, 23.
அசுப நாட்கள்:
11, 12, 15, 16, 20.
