சிம்மம் ராசி பலன் ஏப்ரல் 2022 | April Matha Simmam Rasi Palan 2022

சிம்மம் ராசி பலன் ஏப்ரல் 2022 பொதுப்பலன்கள்:
இந்த மாதம் சுப நிகழ்ச்சிகள் காரணமாக வீடு களை கட்டும். வீட்டில் புது நபர் வரவு மகிழ்ச்சி அளிக்கும். திருமணம், குழந்தை பாக்கியம் என சுப நிகழ்சிகள் உங்களை மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைக்கும். நிதிநிலையைப் பொறுத்தவரை உங்களுக்கு திருப்தி தரும் வகையில் இருக்க வாய்ப்பில்லை. வருமானம் குறைவாக இருக்கும் காரணத்தால் பணப்புழக்கம் குறைவாக இருக்கும். இதனால் பதட்டமான சூழ்நிலை இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாட்டில் உத்தியோகம் தேடும் உங்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டகரமான மாதமாக இருக்கும். வெளிநாடு சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதலைப் பின்பற்றினால் வெற்றி காண்பார்கள். தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்பம்:
நீங்கள் திருமணத்திற்குக் காத்திருப்பவர் என்றால் உங்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணை கிடைக்கப் பெறுவீர்கள். வீட்டில் குழந்தைப் பிறப்பு, திருமணம் போன்ற மகிழ்ச்சி தரும் சுப காரியங்கள் நடக்கும். இந்த மாதம் வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடனான உறவு நிலை சிறப்பாக இருக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க சுக்கிரன் பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் நிதிநிலை சுமாராக இருக்கும். நீங்கள் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படலாம். என்றாலும். இந்த மாதம் புதிய கடன்கள் எதுவும் வாங்குவது கூடாது. பண விஷயங்கள் குறித்த அவசர முடிவுகள் எதையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டாம். ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது/ பயணம் மற்றும் வீட்டு பராமரிப்பு பணிகளுக்கான செலவுகள் ஏற்படும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நன்மையளிக்கும்.
தன நிலையில் ஏற்றம் ஏற்பட லக்ஷ்மி பூஜை
வேலை:
உங்கள் பணியிடச் சூழல் ஏற்றதாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் சிம்ம ராசி அன்பர்கள் இந்த மாதம் வேலை கிடைக்கப் பெறுவார்கள். தனியார் உத்தியோகத்தில் உள்ளவர்கள் உத்தியோகம் நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியது வரும். அரசு உத்தியோகத்தில் உள்ள உங்களின் தகவல் தொடர்புத் திறன் அதிகரிக்கும். உங்கள் பெயரும் புகழும் ஓங்கும்.
தொழில்:
இந்த மாதம் உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். குறிப்பாக கூட்டுத் தொழில் மூலம் நீங்கள் சிறந்த மாற்றங்களைக் காண்பீர்கள். உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். அதிக அளவிலான வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள். நீங்கள் தொழிலை விரிவாக்கம் செய்ய வேண்டி புதிய இடத்திற்கு மாறுவீர்கள். தரகு தொழில் செய்பவர்கள் தொழில் மூலம் அதிக லாபத்தை பெறுவர்.
தொழில் வல்லுனர்கள்:
அரசுத்துறையில் வேலை செய்யும் தொழில் வல்லுனர்கள் மேலதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். நீங்கள் தகவல் தொழில் நுட்பத்துறையில் இருந்தால் நீங்கள் சிறப்பாகச் செயல் படுவீர்கள். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெறுவார்கள். வெளிநாட்டில் தொழில் நடத்தும் உங்கள் எண்ணங்கள் இந்த மாதம் ஈடேறும்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் உயர்பதவி கிடைக்க சூரியன் பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஒற்றைத் தலைவலி மற்றும் தொண்டை வலி போன்ற சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தியானம் மற்றும் உடற்பயிற்சி உங்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு முருகன் பூஜை
மாணவர்கள்:
சிம்ம ராசி மாணவர்கள் தங்கள் கல்வி மற்றும் படிப்பில் சிறப்பாகச் செயல்படுவார்கள். மனதில் தெளிவு இருக்கும். பதட்ட நிலை இருக்க வாய்ப்பில்லை. கல்லூரி முடித்த மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்வார்கள். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் அதில் வெற்றி காண்பார்கள்.
கல்வியில் மேன்மை உண்டாக சரஸ்வதி பூஜை
சுப நாட்கள்:
3, 4, 6, 7, 8, 11, 12, 13, 14, 16.
அசுப நாட்கள்:
1, 2, 5, 9, 10, 15, 17, 28, 29, 30.
