AstroVed Menu
AstroVed
search
search

கடகம் ராசி பலன் ஏப்ரல் 2022 | April Matha Kadagam Rasi Palan 2022

dateMarch 11, 2022

கடகம் ராசி பலன் ஏப்ரல் 2022 பொதுப்பலன்கள்:

இந்த மாதம் குடும்பத்தில் குதூகலம் இருக்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். அன்னியோன்யம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக  உழைக்க வேண்டியிருக்கும். தங்களின் உத்தியோகத்தில் சாதனைகளைப் புரிவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் நீங்கள் நல்ல பெயர் பெறுவீர்கள். கூட்டுத் தொழிலில்  நீங்கள் சாதகமான விஷயங்களை எதிர்பார்க்கலாம். நல்ல லாபம் கிடைக்கும்.உங்கள் பொருளாதார நிலை ஏற்றம் காணும் வகையில் கிரக நிலைகள் உள்ளன. உங்கள் ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை. மாணவர்கள் விடா முயற்சியுடன் படித்து முன்னேறுவார்கள்.  தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம்:

இளம் வயது காதலர்களுக்கு இந்த மாதம் இனிய மாதமாக இருக்கும். இது வரை இருந்து வந்த கருத்து  வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை நிலவும். திருமணமான தம்பதியர் மனமொத்து வாழ்வார்கள்.  இருவருக்கும் இடையே அன்னியோன்யம் பெருகும். திருமணத்திற்குக்  காத்திருப்பவர்கள் இந்த மாதம் தக்க துணை கிடைக்கப் பெறுவார்கள். 

நிதி நிலை:

நிதிநிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் எதிர் பார்ர்க்கும் அளவில் சிறப்பாக இருக்க வாய்ப்பில்லை. பொருளாதார நிலை சுமாராக இருக்கும். இந்த மாதம் இறக்குமதி தொழில் மூலம் ஒரு சில கடக ராசி அன்பர்கள்  அதிகமான லாபம்  கிடைக்கப் பெறுவார்கள்.  

வேலை:

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்கும்.  சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். அவர்களுடன் நல்லுறவு காணப்படும். உங்கள் முன்னேற்றத்திற்கு அவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அரசுத் துறையில் பணியில்  இருப்பவர்கள் தாங்கள் எதிர்பார்க்கும் நல்ல பலன்களைப் பெற இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.  சிறிது  கடினமாக உழைக்க  வேண்டியிருக்கும். அதிக உழைப்பை கொடுப்பதன் மூலம் உத்தியோகத்தில் மேல் அதிகரிகளின் பாராட்டுதலை பெறலாம். 

தொழில்:

கணினி சார்ந்த அல்லது பிற மின்னணு பொருட்கள் சார்ந்த, மென்பொருள் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் இந்த மாதம் தங்கள் தொழில் மூலம் கணிசமான லாபத்தை ஈட்டுவார்கள். ஆர்கானிக் என்று கூறப்படும்.  இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட காய்கறி வியாபாரம் செய்பவர்கள் பெரிய அளவில் லாபம் எதுவும் எதிர்பார்க்க முடியாது.

தொழில் வல்லுனர்கள்:

நீங்கள் கலைத் துறை சார்ந்த தொழில் புரிபவர் என்றால் இந்த மாதம் நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டு சிறந்த வளர்ச்சி காண்பீர்கள். யூக வணிகங்களான பங்கு மற்றும் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் தொழில் வல்லுனர்கள் அதிக லாபங்களை எதிர்பார்க்கலாம்.

ஆரோக்கியம்:

உடல் மனம் இரண்டும் ஆரோக்கியமாக இருந்தால் தான் சிறந்த ஆரோக்கியமாகக் கருதப்படும். உங்கள் மனதில் ஏற்படும் சோர்வு காரணமாக உங்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட நேரலாம். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சி மற்றும் தியானம் மூலம் உடல் நலம் மற்றும் மனநலம் புத்துணச்சி அடையும். உண்ணும் உணவிலும் கவனம் செலுத்துவதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள இயலும். 

மாணவர்கள்:

வெற்றி வேண்டும் கடக ராசி மாணவர்கள் இந்த மாதம் ஆசிரியர் கூறும் கருத்துகளை ஏற்று விடா முயற்சியுடன் செயல் பட வேண்டும். உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் கவனச் சிதறலுக்கு ஆட்படுவார்கள். படிப்பில் கவனம் தேவை. ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்கள் படிப்பில் கவனமுடன் செயல்பட்டு வெற்றி காண்பார்கள்.

சுப நாட்கள்: 

16, 18, 19, 21, 22, 23, 25, 26, 27, 28,

அசுப நாட்கள்:

8, 9, 10, 15, 20, 29, 30.


banner

Leave a Reply