கும்பம் ராசி பலன் ஏப்ரல் 2022 | April Matha Kumbam Rasi Palan 2022

கும்பம் ராசி ஏப்ரல் 2022 பொதுப்பலன்கள்:
இந்த மாதம் குடும்பத்தில் குதூகலம் இருக்கும். உறவுகளுக்கு இடையேயான உறவு நிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் அதிக பொறுப்புகளை நிர்வகிக்க வேண்டியிருக்கும். உடன் பிறப்புகள் மற்றும் குழந்தைகளுடனான உறவு வலுப்படும். இந்த மாதம் உங்கள் பொருளாதாரம் நம்பிக்கை தரும் வகையில் இருக்கும். திருமணமான தம்பதிகளுக்கு தாம்பத்யத்தில் நல்லிணக்கம் கூடும்.பொருளாதார ஸ்திரத் தன்மை இருக்கும். கையில் பணம் சரளமாகப் புழங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும். சுய தொழில் சிறப்பாக நடக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிட்டும். சிறிய உடலுபாதைகளை நீங்கள் சந்திக்க நேரும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்பம்:
குடும்பத்தில் குதூகலம் இருக்கும் என்றாலும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் கவனமாகப் பழக வேண்டும். தேவையற்ற பேச்சுகள் மற்றும் வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பண முதலீடு விஷயங்களில் குடும்பத்தாருடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எனவே வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. தாயாருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தாயாரின் உடல் நலனில் அக்கறை தேவை.
குடும்ப உறவுகள் மேம்பட சுக்கிரன் பூஜை
நிதி நிலை:
பொருளாதார நிலையைப் பொறுத்த வரை ஸ்திரமான நிதிநிலை இருக்கும். உங்கள் உத்தியோகம் அல்லது தொழிலில் மேன்மை கண்டு அதன் மூலம் உங்கள் வருமானம் உயரக் கூடும். பண வரவு அதிகமாக இருக்கும். கையில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். உங்கள் அதிகப்படியான செலவுகளுக்கு சேமிப்பு கை கொடுக்கும். பணப்பற்றாக்குறை அல்லது நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பில்லை.
பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை
வேலை:
உத்தியோகத்தைப் பொறுத்தவரை பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பை அளிப்பார்கள். ஆதரவாக இருப்பார்கள். அவர்களுடன் நீங்கள் நல்லிணக்க உறவு மேற்கொள்வீர்கள். தனியார் துறையில் உத்தியோகத்தில் உள்ளவர்கள் மிகவும் சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம்.நீங்கள் அரசு உத்தியோகத்தில் இருப்பவர் என்றால் இந்த மாதம் நீங்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பதவி உயர்வு கிட்டும்.
உத்தியோகம் மற்றும் தொழில் மேன்மைக்கு சிவன் பூஜை
தொழில்:
சுய தொழில் செய்யும் கும்ப ராசி அன்பர்களுக்கு தொழில் மூலம் சிறந்த லாபம் கிட்டும். அதிலும் கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். நீங்கள் வெளிநாட்டில் தொழில் தொடங்கும் எண்ணம் கொண்டிருந்தால் உங்கள் எண்ணங்கள் யாவும் இந்த மாதம் ஈடேறும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நல்ல தன லாபம் கிடைக்கும்.
தொழில் வல்லுனர்கள்:
நீங்கள் அதிக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். அரசு உத்தியோகத்தில் உள்ள தொழில் வல்லுனர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சுயதொழிலில் உள்ள தொழில் வல்லுனர்களுக்கு நல்ல பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மின் உற்பத்தி ஆலைகளில் பணி புரியும் தொழில் வல்லுனர்கள் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம்.
ஆரோக்கியம்:
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உங்கள் ஆரோக்கியம் சீராக இருந்தால் தான் நீங்கள் நன்கு செயல்பட இயலும். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை. வயிற்றுப்புண் மற்றும் அஜீரணக் கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். உண்ணும் உணவில் கவனம் தேவை.
ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை
மாணவர்கள்:
இந்த மாதம் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். கூடுதல் நேரம் எடுத்து படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். ஓய்வும் அவசியம் தேவை என்பதை மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் கிரகிக்கும் திறன் அதிகரிக்கும். ஆராய்ச்சிக் கல்வி பயிலும் மாணவர்கள் ஆராய்ச்சியில் வெற்றி காண்பார்கள்.
கல்வியில் ஏற்றம் உண்டாக துர்கா பூஜை
சுப நாட்கள்:
16, 17, 18, 19, 21.
அசுப நாட்கள்:
20, 23, 24, 29, 30.
