மகரம் ராசி பலன் ஏப்ரல் 2022 | April Matha Magaram Rasi Palan 2022

மகரம் ராசி ஏப்ரல் 2022 பொதுப்பலன்கள்:
மகர ராசி அன்பர்களே! குடும்ப உறுப்பினர்களுக்கிடையே நல்லுறவு நீடிக்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை நிலைக்க உங்கள் பேச்சில் கவனம் தேவை. திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் திருமணம் நடை பெற வாய்ப்பு உள்ளது. புதிய நண்பர்களிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை. தந்தை வழி சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். புதிய தொழில் முதலீடுகள் மூலம் நல்ல லாபங்களை எதிர்பார்க்கலாம். தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்
காதல் / குடும்பம்:
மகர ராசி காதலர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலக் கட்டமாக இந்த மாதம் இருக்கும். உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். கடுமையான வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும். திருமணத்திற்குக் காத்திருக்கும் உங்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணை கிடைக்கப் பெறுவீர்கள். தாய், தந்தை மற்றும் குழந்தைகள் உடனான உறவு நிலை மேம்படும்.
திருமணமான தம்பதிகளுகிடையே வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்பட சுக்கிரன் பூஜை
நிதி நிலை:
நிதிநிலை சிறப்பாக இருக்கும். யூக வணிகமான போரெக்ஸ் டிரேடிங் முதலீடுகள் மூலம் நல்ல லாபங்களை எதிர்பார்க்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் சம்மந்தப்பட்ட முதலீடுகள் மூலமாக தன வருவாய் அதிகரிக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்கும் வகைகளில் செலவீனங்கள் ஏற்படலாம்.
நிதிநிலையில் ஏற்றம் உண்டாக ஸ்ரீம் ப்ரிஸீ லக்ஷ்மி பூஜை
வேலை:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும். தனியார் துறையில் பணியில் உள்ளவர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். அரசு மற்றும் அரசு சார்ந்த உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ளுவீர்கள். பணியிடத்தில் சுமூகமான நிலை காணப்படும்.
தொழில்:
அரசுத் துறை சார்ந்து நீங்கள் பணிகளைச் செய்பவர் என்றால் இந்த மாதம் சிறந்த முன்னேற்றம் காண்பீர்கள். கூட்டு தொழில் மற்றும் தரகு வியாபாத்தில் ஈடுபட்டிருக்கும் அன்பர்கள் தாங்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த வங்கிக் கடன்கள் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் நீங்கள் தொழிலை விஸ்தீரணம் அல்லது விரிவாக்கம் செய்வீர்கள்.
தொழில் வல்லுனர்கள்:
தொழில் புரியும் இடத்தில் தேவையற்ற பேச்சுக்கள் மற்றும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ளுங்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். அதன் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் உண்டாக குரு பூஜை
ஆரோக்கியம்:
ஆரோக்கியமான மனமே ஆரோக்கியமான உடலுக்கு ஆதாரமாக விளங்கும். இந்த மாதம் மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரலாம். தியானம் மற்றும் நடைப் பயிற்சி நன்மை பயக்கும். வயதான ஆண்களுக்கு கழுத்து நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் பெற சந்திரன் பூஜை
மாணவர்கள்:
மாணவர்களுக்கு ஆசிரியர் மற்றும் பெற்றோரின் வழ்காட்டுதல்கள் கிடைக்கும். அவர்களின் அறிவுரை மற்றும் ஆலோசனை உங்களை வழிநடத்தும். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் கூடுதல் நேரம் கல்வி பயில, படிக்க வேண்டியிருக்கும். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் வெற்றி காண்பார்கள்.
கல்வியில் வெற்றி கிடைக்க கேது பூஜை
சுப நாட்கள்:
7, 8, 18, 19, 25, 26, 27, 28
அசுப நாட்கள்:
5, 10, 13, 14, 15, 29, 30.
