மிதுனம் ராசி பலன் ஏப்ரல் 2022 | April Month Mithunam Rasi Palan 2022
மிதுனம் ராசி பலன் ஏப்ரல் 2022 பொதுப்பலன்கள்:
இந்த மாதம் குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். என்றாலும் உங்கள் பேச்சில் கவனம் தேவை. தேவையற்ற வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் கணவன் மனைவி உறவில் நெருக்கம் அதிகரிக்கும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு தக்க துணை கிடைக்க உகந்த மாதம் ஆகும். உங்கள் மனதில் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நீங்கள் இந்த மாதம் ஆன்மீக தலங்களுக்கு சுற்றுலா செல்ல நேரலாம். நீங்கள் உத்தியோகத்தில் இருப்பவர் என்றால் நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். உங்கள் பணியாற்றும் திறம் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும். உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம்:
கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். புரிந்துணர்வு காரணமாக இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமாக இருக்கும். குடும்பத்துடன் ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களின் ஆலோசனை கேட்டு அதன் படி நடப்பது நன்மை பயக்கும்.
குடும்ப உறவுகள் மேம்பட குரு பூஜை
நிதி நிலை:
பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். கையில் பணம் தாராளமாகப் புழங்கும். பங்கு வர்த்தகம் இந்த மாதம் லாபம் அளிக்காது. நஷ்டம் ஏற்படலாம் என்பதால் அதில் கவனம் செலுத்தாதீர்கள் உங்கள் கடந்த கால பங்கு வர்த்தக முதலீடுகளின் மூலம் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்க பெறுவீர்கள்.
நிதி நிலையில் ஏற்றம் காண கேது பூஜை
வேலை:
உங்கள் உத்தியோகம் இந்த மாதம் சீரான நிலையில் இருக்கும். நீங்கள் இரும்பு தொழிற்சாலையில் பணிபுரிபவர் என்றால் உத்தியோகத்தில் உயர்வு உண்டு. நீங்கள் அரசுத் துறை சார்ந்து பணி புரிபவர் என்றால் கவனமாகச் செயல்பட வேண்டும். அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். தங்களின் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வாக்குவாத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும்.
தொழில்:
உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். குறிப்பாக கூட்டுத்தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இது சிறந்த மாதமாக இருக்கும். பலசரக்கு வியாபாரத்தில் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நிறுவனங்கள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்.
தொழில் வல்லுனர்கள்:
தொழில் வல்லுனர்களுக்கு இது சிறந்த மாதமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் அங்கீகாரத்தை எளிதாகப் பெறுவீர்கள். ஊடகத் துறை மற்றும் பொழுதுபோக்குத் துறையில் இருக்கும் தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தங்கள் தொழிலில் பிரகாசிப்பார்கள். பணியிடத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவார்கள். வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் உங்களை நாடி வரும். அதன் மூலம் நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் உயர்வு கிடைக்க சனி பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும் என்றாலும் மனதில் சிறிது பதட்ட நிலை இருக்கும். பதட்டத்தை தவிர்க்க தியானம் மற்றும் நடைபயிற்சியை மேற்கொள்வது நல்லது. உணவு பழக்க வழக்க முறையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள்:
பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்கள் பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு இது சிறந்த மாதமாக இருக்கும். மாணவர்கள் கவனமுடன் படிப்பார்கள். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.
மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற சரஸ்வதி பூஜை
சுப நாட்கள்:
16, 19, 21, 22, 23, 25, 26. 27, 28.
அசுப நாட்கள்:
5, 17, 18, 20, 24, 29, 30.











