Purify Your Living Space: Invoke the Custodians of Land & Properties - Vastu Purusha & Ashta Dikpalaka Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

2019 May Month’s Rasi Palan for Midhunam

March 29, 2019 | Total Views : 1,776
Zoom In Zoom Out Print

மிதுன ராசி - பொதுப்பலன்கள்

மிதுன ராசி அன்பர்கள் இந்த மாதம் சாதகமான பலன்களைக் காண்பார்கள். வாழ்வில் முன்னேற்றம், தொழிலில் முனேற்றம் கண்டு மகிழக் கூடிய நேரம் இது. அதிர்ஷ்டம் இந்த மாதம் உங்களுக்கு கை கொடுக்கும். உங்கள் வாழ்வில் வளமும் சமூகத்தில் அந்தஸ்தும் அதிகரிக்கும். நன்மையான பலன்கள் கிடைக்கப் பெற்று நீங்கள் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அடைவீர்கள். உங்கள் இலட்சியங்கள் யாவும் நிறைவேறும். அது உங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். பொருளாதார ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். கலை ஆர்வம் உள்ளவர்கள் அந்த துறையில் பிரகாசிப்பீர்கள். கடினமாக உழைத்து கலைத்திறனை வெளிப்படுத்தி விருதுகளைப் பெறும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும். மிதுன ராசிக் காதலர்களுக்கு இந்த மாதம் காதல் கனிந்து வரும் நேரம் ஆகும். உங்கள் மன நிலைக்கேற்றவாறு பழகும் விதத்தை மாற்றிக் கொள்வது நல்லதல்ல.  நீங்கள் உங்கள் மன நிலையை எப்பொழுதும் ஒரே மாதிரி வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை இந்த மாதம் ஆரோக்கியம் உங்களுக்கு சாதரணமாக இருக்கும். நீங்கள் முயற்சி செய்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.

மிதுன ராசி - காதல் / திருமணம்

மிதுன ராசி காதலர்களின் உறவு இந்த மாதம் சிறப்பாக  இருக்கும். இருவருக்கும் இடையே திருப்தியான சுமூகமான உறவு காணப்படும். திருமணமானவர்கள் குடும்ப விஷயங்களில் சிறப்பாக செயலாற்றி தங்கள் நல்லுறவை பராமரிப்பார்கள். திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் தகுந்த வரன் கிடைக்கப் பெற்று தங்கள்  வாழ்க்கைக்கான துணையை நிர்ணயம் செய்வார்கள். 

மண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன் பூஜை

மிதுன ராசி - நிதி 

சீரான பொருளாதார முன்னேற்றம் உங்கள் மனதிற்கு சற்று ஆறுதலாக இருக்கும். கூடுதல்  சந்தோசம் தரும் விதமாக இந்த மாதம்  உங்கள் செலவுகள் குறைவாக இருக்கும். பணம் சம்பந்தமான உங்கள் தேவைகள் யாவற்றையும் நீங்கள் நிறைவேற்றிக் கொள்வீர்கள். வீட்டு உள் கட்டமைப்பு மற்றும் மராமத்துப் பணிகளுக்கு பணம் செலவு செய்யவேண்டியிருக்கும்.   

நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: ராகு  பூஜை

மிதுன ராசி - வேலை

இந்த மாதம் பணியில் சாதனைகள் புரிந்து சந்தோஷம் அடைவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். மேலும் சக பணியாளர்களிடம் நல்லுறவு பராமரிப்பீர்கள். தேவைப்படும் நேரத்தில் ஆறுதல் அளித்து கரம் கொடுத்து தூக்கி விடுபவர் தானே  உண்மையான நண்பர்கள். நீங்கள் நட்பு பாராட்டி நல்லுறவு பராமரிக்கும் உங்கள் சக பணியாளர்கள் உங்களுடன் நட்புறவோடு பழகுவார்கள்.முக்கியான பணிகளை முடித்து அளிப்பதில் அவர்கள் சிறந்த பங்கை ஆற்றுவார்கள். பணியிடத்தில் பணியில் விரைவான முன்னேற்றம் காண நீங்கள் புதுப் புது யோசைகளைக் கூறுவீர்கள். அவற்றின் மூலம் நல்ல பலன்கள் கிட்டும். நிலுவையில் இருக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றை நீங்கள சிறப்பாக முடித்து அளிப்பீர்கள். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: குரு   பூஜை

மிதுன ராசி - தொழில் 

மிதுன ராசி வியாபாரிகள் அல்லது தொழில் செய்பவர்களே! இந்த மாதம் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு தொழிலில் வெற்றி வாகை  சூடுவீர்கள். உங்கள் முன்னேற்றத்தினால் ஈர்க்கப்பட்டு வாடிக்கையாளர்களுள் சிலர் உங்களை நாடி வந்து மேலும் சில பணிகளை உங்களுக்கு வழங்குவார்கள். இது உங்கள் முன்னேற்றத்திற்கு மகுடம் சூட்டியது போல அமைந்து மேலும் பல முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும். உங்கள் பொருளாதார நிலை மேம்படும். நீங்கள் ஸ்திரமான எண்ணங்களை மேற்கொள்வதன் மூலம் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். தொழிலில் பணிகளை நீங்களே தனியாக உங்கள் தோளில் சுமக்காமல் உங்கள் கூட்டாளிகளுக்கும் சில பணிகளை பிரித்து அளிப்பது நல்லது. 

மிதுன ராசி - தொழில்வல்லுநர்

மிதுன ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் அதிகாரிகளின் மூலம் ஆதாயங்களைப் பெறுவார்கள். உங்களுக்கு கிடைக்கும் பண ஆதாயங்களை நீங்கள் இழக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டும். ஊக முதலீடுகளில் கவனம் செலுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும். அதிக வளர்ச்சி தரும் தொழிலுக்கு நீங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  

மிதுன ராசி - ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியமாக இருக்க உள்ளம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்த மாதம் வெற்றி காரணமாக உங்கள் மனம் மகிழ்ச்சியில் திளைக்கும்.  எனவே உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் நீங்கள் உடல் வலிமை மற்றும்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும். ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க இயலும். 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : புதன் பூஜை

மிதுன ராசி - மாணவர்கள் 

மிதுன ராசி மாணவர்களே! இந்த மாதம் நீங்கள் கல்வியில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று சிறப்பாக தேர்ச்சி பெறுவீர்கள். வெளியிடங்களுக்குச் சென்று மேல் படிப்பு படிக்க வேண்டும் என்ற உங்களின் நெடுநாள் ஆசைகள் நிறைவேறும். சிறந்த கல்வி நிறுவனத்தில் மேல் படிப்பிற்கான சேர்க்கை கிடைக்கப் பெறுவதற்கு உங்கள் உரையாடல் திறன் உதவி புரியும்.

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்

சுப தினங்கள்:    1,2,6,7,9,10,11,14,15,16,18,20,21,23,29,30,31.
அசுப தினங்கள்:   3,4,5,8,12,13,17,19,22,24,25,26,27,28.

Leave a Reply

Submit Comment