Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

2019 May Month’s Rasi Palan for Mesham

March 29, 2019 | Total Views : 2,750
Zoom In Zoom Out Print

மேஷ ராசி - பொதுப்பலன்கள்

மேஷ ராசி அன்பர்களே!  வாழ்வில் மேன்மை கண்டு மேலும் ஒரு படி உயர இந்த மாதம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கக் காண்பீர்கள். என்றாலும் உங்கள் காரியங்களை நீங்கள் கண்ணும் கருத்துமாக கவனமாக செய்ய வேண்டியது அவசியம் என்பதனை கருத்தில் கொள்ளுங்கள். அவசரம் அவசரமாக ஏதாவது முடிவை எடுத்தீர்கள் என்றால் பிறகு அதற்காக நீங்கள் பிறகு வருத்தப்பட வேண்டியிருக்கும். எனவே நிறுத்தி நிதானமாக யோசித்து முடிவெடுங்கள். இந்த மாதம் நீங்கள் சொத்துக்களை வாங்குவதன்  மூலம் உங்கள் அந்தஸ்தை உயர்த்திக் கொள்வீர்கள். உங்களைச் சுற்றி உள்ளவர்களுடன் நல்ல முறையில் பழக வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு பழகுங்கள். அதன் மூலம் நீங்கள் நற்பெயரும் நல்ல அங்கீகாரமும் பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோசத்திற்கு குறைவில்லை. என்றாலும் உங்களுக்கு அதிக பணிகள் இருக்கும். வேலை விஷயமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பைக் கூட நீங்கள் எதிர்ப்பார்க்கலாம்.   அதிக நேரம் உழைப்பதால் உங்கள் உடல் சோர்வடையக் காண்பீர்கள். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தால் தான் வாழ்க்கையும் நன்றாக இருக்கும். எனவே உழைப்புக்கு நடுவில் ஓய்விற்கும் முக்கியத்துவம் அளியுங்கள். 

மேஷ ராசி - காதல்/திருமணம்

இல்லறம் நல்லறமாக இருக்க முதலில் பராமரிக்க வேண்டியது நல்லுறவு என்பதை புரிந்து கொண்ட நீங்கள் உங்கள் துணையுடன் நட்புறவு பராமரிப்பீர்கள். அனுசரித்து நடந்து கொள்வது பல வகையில் நன்மை அளிக்கும் என்பதை உணர்ந்த நீங்கள் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். குடும்பத்தில் மட்டுமன்றி சமூகத்திலும் சிறந்த முறையில்  உறவாடி நல்ல நம்பகமான நண்பர்களைப் பெறுவீர்கள். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன் பூஜை

மேஷ ராசி - நிதி 

இருப்பதைக் கொண்டு திருப்தி கொள் என்ற எண்ணத்தில் நீங்கள் உங்கள் கையிருப்பு பணத்திற்குள் உங்கள் தேவைகளை சுருக்கிக் கொள்வீர்கள். சிக்கனமாய் இருந்து பணத்தை சேமிக்கவும் வழி வகையும் மேற்கொள்வீர்கள். என்றாலும் அவசியமாய் தேவைப்படும் செலவினங்களை செய்வதற்கு நீங்கள் தயங்க மாட்டீர்கள். உங்களுக்கான செலவு, ஆன்மீக காரியங்களுக்கான செலவு, நண்பர்களுக்கான செலவு என்று தர வாரியாக செலவுகளை நீங்கள் மேற்கொள்ளத்தான் செய்வீர்கள். செலவு செய்ய வேண்டியது அவசியமா என நன்கு யோசித்து செலவு செய்வது நல்லது. 

நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: புதன்  பூஜை

மேஷ ராசி - வேலை

வேலை பார்க்கும் மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் சாதகமான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் நீங்கள் பிரச்சினைகளை தீர்க்கும் ஆலோசகராக விளங்குவீர்கள். பிரச்சினைகளை தீர்த்து முடித்தே பெரிய ஆளாகி விடுவீர்கள். எல்லா விதத்திலும் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் நீங்கள் பணியிடத்தில் சிறந்த வாய்ப்புகளைப் பெறலாம். நீங்கள் விரும்பியதையும் பெறலாம். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்:கணேச  பூஜை

மேஷ ராசி - தொழில்

தொழில் அல்லது வியாபாரம் செய்யும் மேஷ ராசி அன்பர்கள்,  தொழிலைப் பொறுத்த வரை இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கக் காண்பீர்கள். இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் திறமையாக செயலாற்றுவீர்கள்.. வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள். பேச்சை விட செயலில் அதிக கவனம் செலுத்துங்கள். எல்லா வேலையையும் நீங்களே செய்யாமல் உங்கள் கூட்டாளிகளுக்கும் பகிர்ந்து அளித்து அவர்களையும் பணியில் இணைத்துக் கொள்வதன் மூலம் அவர்கள் மூலம் நீங்கள் ஆதாயம் காணலாம். வெளியிடங்களில் இருந்து வரும் பணிகளை மேற்கொள்ள நீங்கள் பயணம் செல்ல நேரிடும். 

மேஷ ராசி - தொழில் வல்லுநர்

எல்லாவற்றையும் தானே இழுத்துப் போட்டுக் கொண்டு வேலை செய்யாமல் உங்கள் பணிகளில் சிலவற்றை நீங்கள் உங்கள் சக பணியாளர்களிடம் ஒப்படைப்பீர்கள். இதன் மூலம் மகிழ்ச்சி அடைந்து அவர்களும் தமக்கு இட்ட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள். இதனால் உங்கள் வேலை பளு குறைந்து நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் அனைத்தையும் முறையாக சரியான நேரத்தில் முடித்து அளிப்பீர்கள். வேலை முடித்த திருப்தி இருக்கும். அதன் காரணமாக மன அமைதி நிலவும். வேலை தொடர்பான பயணம் ஒன்றையும் நீங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். 

மேஷ ராசி - ஆரோக்கியம்

வேலை வேலை என்று இந்த மாதம் உங்கள் நேரம் வேலை செய்வதிலேயே கழியும் என்பதால் நீங்கள் ஓய்வெடுக்கக் கூட நேரமின்றி உழைப்பீர்கள்.  இதனால் உடல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் அசதி காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறையும். வயிற்று வலி மற்றும் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது.   எனவே பயணங்களின் போது உண்ணும்  உணவில் கவனம் வேண்டும். ஒவ்வாத உணவுகளை  உண்பது கூடாது. எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்க வேண்டியது அவசியம்.

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை

மேஷ ராசி - மாணவர்கள்

திட்டங்களை தீட்டி அதன்படி நடக்கவும் உங்கள் கல்வி குறித்த எதிர்கால இலட்சியங்களை அமைத்துக் கொள்வதற்கும் இது சிறந்த மாதம் ஆகும். திட்டமிட்ட செயலில் வெற்றி காண்பது மிகவும் எளிது. நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செய்வதன் மூலம் வெற்றியும் காணலாம். அது உங்கள் எதிர்காலத்திற்கு உதவியாகவும் இருக்கும். மேலும் வெற்றிக்கான பாராட்டை நீங்கள் உங்கள் ஆசிரியர்களிடமிருந்து பெறவும் உதவும். 

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்

சுப தினங்கள்:    1,2,6,7,9,10,11,14,15,16,21,23,24,25,26,29,30,31.
அசுப தினங்கள்:    3,4,5,8,12,13,17,18,19,20,22,27,28.

banner

Leave a Reply

Submit Comment