May Monthly Meenam Rasi Palangal 2019 Tamil, May month Meenam Rasi Palan 2019 Tamil

Rama Navami 2023: Invoke Rama through our 110 Birthday Powertime Rituals for Victory, Protection, Prosperity & Goal Achievement Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

2019 May Month’s Rasi Palan for Meenam

March 27, 2019 | Total Views : 2,369
Zoom In Zoom Out Print

மீன ராசி - பொதுப்பலன்கள்

மீன ராசி அன்பர்களே! பொறுமை கடலினும் பெரிது; பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டிய மாதம்  இது. ஏனென்றால் நீங்கள் மேற்கொள்ளும் காரியங்கள் யாவும் சிறிது தாமதத்திற்குப் பிறகு தான் முடியும். உங்கள் பேச்சில் எந்த விதமான ஒளிவு மறைவும் இருக்காது.  இது தான் உங்களை தனிப்படுத்திக் காட்டும். உங்களுக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தித் தரும். பல்வேறு வழிகளிலிருந்தும் உங்களுக்கு பண வரவு உண்டாகும். இதனால் கையில் பணப் புழக்கம் தாராளமாக  இருக்கும். இதன் மூலம் உங்கள் மனமும் புத்துணர்ச்சி அடைவதால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக முன்னேறும். அது உங்களுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபரணங்களை வாங்குவீர்கள். ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தியானம் மற்றும் ஜெபம் போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். 

மீன ராசி - காதல் / திருமணம்

காதல் உறவும் திருமண உறவும் தங்கு தடையின்றி செல்லும். இதனால் உறவில் நல்லிணக்கமும் நல்லுறவும் காணப்படும். மன நிறைவான சூழ்நிலை ஏற்படும். உங்களின் இந்த சந்தோஷமான மனநிலை காரணமாக நீங்கள் பொது நிகழ்சிகளில் ஆர்வமுடன் பங்கு கொள்வீர்கள். பல புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சந்திரன் பூஜை

மீன ராசி - நிதி

மீன ராசி அன்பர்கள் இந்த மாதம் பொருளாதார விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணம் இருக்கிறது என்று ஆடம்பர செலவுகளை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். நல்ல சேமிப்பு திட்டங்களில் நீங்கள் பணத்தை சேமிக்க முயற்சி எடுப்பதும் திட்டமிடுவதும் நன்மை அளிக்கும். அதன் மூலம் எதிர்காலத்தில் நீங்கள் லாபம் பெறலாம். 

நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்:செவ்வாய்  பூஜை

மீன ராசி - வேலை

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பதை புரிந்து கொண்டு நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். முயற்சியுடன் பொறுமையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். பணியிடத்தில் சமயோசிதமாக புத்தியை செயல்படுத்தி பணிகளை செய்வதன் மூலம் சிறந்த பலன்கள் உங்களை நாடி வரும். கவனமாக பணியாற்ற வேண்டிய காலமாக இருப்பதால் உங்கள் கவனத்திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அதற்கு தியானம் மேற்கொள்ளுங்கள். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: குரு  பூஜை

மீன ராசி - தொழில்

அதிக வேலை, அதிக உழைப்பு என்று நீங்கள் பணியில் மூழ்கி இருக்கும் மாதம் இது. உங்களின் இந்த அர்ப்பணிப்பு உங்களை முன்னேற்றும். உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். புதிய பணிகள் மற்றும் ஒப்பந்தங்கள் உங்களை நாடி வரும் நேரம் இது. பணிகளை கூட்டாளிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு பிரித்து அளித்து, அவர்கள் முடித்து அளித்தவுடன் பாராட்டவும் செய்தால் அவர்களின் ஆதரவு உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும். வெற்றியும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டு இருக்கும். உங்கள் வெற்றிப் பாதையை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள இயலும். 

மீன ராசி - தொழில் வல்லுநர்

இந்த மாதம் நீங்கள் சிறப்பாக  செயல்களை ஆற்றுவீர்கள்.  உங்கள்  நிதி நிலைமை கணிசமாக அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் உங்களுக்கு மன மகிழ்ச்சியை அளிக்கலாம். தற்போதைய வேலைகளோடு மேலும் சில பொறுப்புகள் வந்து சேரலாம். அவற்றை நேர்மையாக முடியுங்கள். உங்கள் கீழ்ப்பணிபுரிபவர்கள் உங்களுடைய உறுதியான கொள்கைகளை பின்பற்றுபவர்களாக இருப்பார்கள். தொழிலில் ஒரு நிலையான முன்னேற்றத்தை  காண்பீர்கள். 

மீன ராசி - ஆரோக்கியம்

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் சிறிய  பிரச்சினைகள் காணப்பட்டாலும் முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுங்கள். உடல் அசௌகரியம் காரணமாக நீங்கள் மந்தமாக உணர நேரலாம். எனவே சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளுங்கள். உடல் சுறுசுறுப்புக்கு பழரசம் மற்றும் உலர்பழ வகைகளை உட்கொள்ளுங்கள். 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை

மீன ராசி - மாணவர்கள்

மாணவர்கள் மனதில் இந்த துறையில் படிப்பதா அந்த துறையில் படிப்பதா என்ற  குழப்பம் இருக்கும். உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு எந்த துறை பொருந்தி வரும் என்று நினைக்கிறீர்களோ அந்த துறையை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நேரம். மேலும் நீங்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை ஏற்றுக் கொள்வதன் மூலம் சரியான முடிவுகளை எடுக்க இயலும்.

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்

சுப தினங்கள்:  1,2,3,6,7,9,10,11,14,15,20,21,23,24,25,26,29,30,31.
அசுப தினங்கள்:  4,5,8,12,13,16,17,18,19,22,27,28.

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos