Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
AstroVed Menu
AstroVed
search
search

2019 May Month’s Rasi Palan for Dhanusu

March 27, 2019 | Total Views : 3,024
Zoom In Zoom Out Print

தனுசு ராசி - பொதுப்பலன்கள்

தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் பிறர் கண்ணோட்டத்தை புரிந்து கொள்வதன்  மூலம் அவர்களை நன்கு புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். உங்களால் முடிந்த அளவிற்கு உங்களைச் சார்ந்தவர்களுக்கு ஆறுதலாகவும் அவர்களை மகிழ்ச்சி மற்றும் உற்சாகப்படுத்தும் வகையிலும் நீங்கள் நடந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். அவர்களுடன் விருந்து விழா மற்றும் சுற்றுலா சென்று மகிழ நினைப்பீர்கள். சிறிது காலம் வரை நீங்கள் பொறுமையாக இருங்கள். நீங்கள் பிறருடன் பேசிப் பழகி மகிழ உங்களுக்கென்று ஒரு கால நேரம் அமையும். அது வரை சற்று பொறுமை காத்து பிறருடன் அளவாகப் பழகுங்கள்.  உங்கள் கனவுகள் யாவும் நனவாக மாறும்.  உங்கள் உள்ளுணர்வே உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். அதன் படியே நீங்கள் நடந்து கொள்ளுங்கள். பண விஷயங்களில் நீங்கள் கவனமாக செயல்படுங்கள். சேமிப்பு, முதலீடு என பணத்தை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.அது உங்கள் எதிர்காலத்தை வளமாக வைக்க உதவும். உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும்.

தனுசு ராசி - காதல் / திருமணம்

மனம் விட்டுப் பேசுவதன் மூலம் பல உறவுகளை நல்லுறவாக மாற்றிக் கொள்ள இயலும். உங்களுடன் மனம் விட்டுப் பேச காத்திருக்கும் உங்கள் துணையின் மனதைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டிய நேரம் இது. அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய அவர்களுடன் சிறிது நேரம் செலவு செய்யுங்கள். அவர்களின் நம்பிக்கையை பெறுவதன் மூலம் உறவில் இனிமை கூடும். திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் திருமணத்திற்கு தன்னை தயார் படுத்திக் கொள்வார்கள்.  

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: செவ்வாய் பூஜை

தனுசு ராசி - நிதி

தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் பொருளாதார நிலை சாதாரணமாகவே இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்காக மருத்துவச் செலவுகள், வீண் செலவுகள் என செலவுகள் வரிசையாக அணி வகுத்து வந்து உங்கள் கையிருப்பை கரைக்கும்.எனவே உங்கள் சேமிப்பு பணத்தை பத்திரமாக வைத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  

நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: சனி  பூஜை

தனுசு ராசி - வேலை

தனுசு ராசி அன்பர்களே! கடின முயற்சிகள் மூலம் சிறப்பாக பணியாற்றி  பணியிடத்தில் உங்களுக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். கால தாமதம் ஏற்படாமல் கவனம் செலுத்துவீர்கள். பணி சம்பந்தமான பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதன் மூலம் மன திருப்தியும் உண்டாகும். சக பணியாளர்களிடம் உங்கள் அகந்தை உணர்வை தவிர்ப்பது நல்லது.

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்:சூரியன்  பூஜை 

தனுசு ராசி - தொழில்

தொழில் செய்யும் தனுசு ராசி அன்பர்களே! தொழில் அல்லது வியாபாரத்தில் நீங்கள் வகுத்து அளிக்கும் திட்டங்கள் பிறரால் ஏற்றுக் கொள்ளப்படும். அது உங்களுக்கு உற்சாகம் அளிக்கும். உங்களுக்கு கிடைக்கும் உற்சாகம் உங்களை  இன்னும் சிறப்பாக செயல்பட வைக்கும். நீங்கள் வழக்கமாக பணி செய்யும் நேரத்தை விட சற்று கூடுதல் நேரம் ஓதுக்கி ஆர்வமுடன் பணிகளை மேற்கொள்வீர்கள். உங்கள் கூட்டாளிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் மட்டும் நீங்கள் சிறிது கவனமாக செயல்பட வேண்டும்.

தனுசு ராசி - தொழில்வல்லுநர்

தனுசு ராசி தொழில் வல்லுனர்களே! இந்த மாதம் நீங்கள் சுறுசுறுப்பாக செயலாற்றுவீர்கள். பணி விஷயமாக ஒளிவு மறைவின்றி பேசி நட்புணர்வுடன் நடந்து கொள்வீர்கள். உங்கள் சொந்த முன்னேற்றம் என்றில்லாமல் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக நீங்கள் அயராது பாடுபடுவீர்கள். அது உங்கள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும். நீங்கள் சிறப்பு சலுகை பெரும் வாய்ப்பை  ஏற்படுத்தித் தரும். 

தனுசு ராசி - ஆரோக்கியம்

உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். அதை பராமரிக்க நீங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்திற்கு இடம் அளிக்காமல் இருந்தால் ஆரோக்கியத்தைப் பேணி காக்கலாம். சரியான நேரத்தில் உணவு உண்ணுதல், கார உணவு வகைகளை தவிர்த்தல் மூலம் அஜீரணக் கோளாறுகளிலிருந்து தப்பிக்கலாம். 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை

தனுசு ராசி - மாணவர்கள்

தனசு ராசி மாணவர்களே! லட்சியத்தை நோக்கி நடை பயில வேண்டிய காலம் இது. உதவிக்கு உங்கள் ஆசிரியரை நாடுவதன் மூலம் மனதில் தெளிவு பிறக்கும். பெற்றோரின் ஆலோசனையும் உங்களை வழி நடத்தும். கல்வி நிறுவனத்தின் உதவி, வெளி நாட்டில் கல்வி வாய்ப்பு ஆகியவற்றுக்கு முயற்சி செய்வதன் மூலம் நன்மைகள் கிடைக்கும். 

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்

சுப தினங்கள்:  1,2,3,6,7,9,14,15,16,18,20,21,23,24,25,26,29,30,31.
அசுப தினங்கள்:  4,5,8,10,11,12,13,17,19,22,27,28.

banner

Leave a Reply

Submit Comment