சிம்ம ராசி - பொதுப் பலன்கள்
சிம்ம ராசி அன்பர்கள் இந்த மாதம் சிறந்த பலன்களை எதிர் பார்க்க முடியாது. என்றாலும் நீங்கள் உங்கள் அனைத்துக் காரியங்களையும் புத்திசாலித்தனமாக செய்ய முற்படுவீர்கள். உங்கள் மீது குறைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வீர்கள். அதையும் தாண்டி உங்கள் மீது யாராவது குற்றம் சுமத்தினால் அதனைக் களைந்து விடும் திறனும் உங்களிடம் காணப்படும். உங்களின் இந்த தகுதி காரணமாக நீங்கள் பிறரின் மதிப்பையும் மரியாதையையும் பெறுவீர்கள். பண விஷயங்களில் நீங்கள் கண்டிப்பாக கவனமாக செயல்பட வேண்டிய மாதம் இது. இந்த மாதம் நீங்கள் சொத்துக்களை வாங்குதல் அல்லது விற்றல் விஷயங்களில் முனைப்புடன் செயல்படுவீர்கள். வேகம் விவேகத்திற்கு அழகல்ல. இதனை நீங்கள் வாகனம் ஓட்டும் போது கவனத்தில் கொள்ள வேண்டும். பணி நிமித்தமாக நீங்கள் பயணங்களை மேற்கொள்வீர்கள். நீங்கள் முறையாக கவனம் செலுத்தி உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும்.
சிம்ம ராசி - காதல் / திருமணம்
சிறந்த உறவை பராமரித்தால் குடும்பம் சீராக இயங்கும் என்பதை உணர்ந்து நீங்கள் உங்கள் குடும்பத்தாருடன் கலந்து உறவாடி நல்லுறவு பராமரிப்பீர்கள். குறிப்பாக உங்கள் துணையுடனான உறவை மேம்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்துவீர்கள். வெளிவட்டாரங்களிலும் நீங்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு நல்லுறவு பராமரிப்பீர்கள்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை
சிம்ம ராசி - பொருளாதாரம்
சிம்ம ராசி அன்பர்கள் இந்த மாதம் பண வரவு சிறப்பாக இருக்கக் காண்பார்கள். எந்த வகையிலாவது பண வரவு கிடைக்கப் பெற்று கையில் பணம் புழங்கக் காண்பார்கள். முதலீடுகளின் மூலமும் ஆதாயம் காண்பதற்கான வாய்ப்பு உள்ளது. கொடுத்த கடனை வசூல் செய்து அதன் மூலமும் பண வரவு இருக்கும். பணப்புழக்கம் அதிகம் இருப்பதன் காரணமாக வங்கியிருப்பு உயரும். வழக்கமான செலவுகளே காணப்படும் மற்றும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: புதன் பூஜை
சிம்ம ராசி - வேலை
பணியிடத்தில் உங்கள் பேச்சாற்றல் மூலம் நீங்கள் காரியங்களை சிறப்பாக மேற்கொண்டு சாதனை புரிவீர்கள். ஊக்கமும் உற்சாகமும் உங்கள் மனதில் கரை புரண்டு ஓடக் காண்பீர்கள். மனதில் சுறுசுறுப்பு பிறக்கும். அதன் மூலம் பணிகளை நேரா நேரத்தில் முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். எல்லா வகையிலும் இந்த மாதம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. அதனால் சிறந்த பலன்களைக் காண்பீர்கள். உங்கள் சிறந்த பணிக்கான பாராட்டை மேலதிகாரிகளிடமிருந்து பெறுவீர்கள். வேலை மாற்றம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு அதற்கான நேரமும் வந்து விட்டது. இந்த மாதம் உங்களுக்கு கிடைக்கும் வேலை மாற்றம் நீடித்த பலன் அளிக்கும் வகையில் இருக்கும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி பூஜை
சிம்ம ராசி - தொழில்
வெற்றி உங்களைத் தேடி வரும் மாதமாக இந்த மாதம் அமையும். உங்கள் பொறுப்புணர்வு மற்றும் சாமார்த்தியம் காரணமாக நீங்கள் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். பொறுப்புடன் செயல்பட்டாலும் அனைத்து வேலைகளையும் நீங்களே இழுத்துப் போட்டு செய்வதன் மூலம் நன்மை குறையும். எனவே பணிகளை கூட்டாளிகளுடன் பகிர்ந்து கூட்டாக மேற்கொள்வதன் மூலம் வெற்றிக் கோட்டையை பிடிக்கலாம்.
சிம்ம ராசி - தொழில் வல்லுனர்கள்
தொழிலில் உங்கள் பேச்சாற்றலை பயன்படுத்தி வெற்றி காண்பீர்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத உங்கள் குணம் காரணமாக நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் முன்னேற்றம் காண்பதற்கு ஏதுவான மாதமாக இந்த மாதம் இருக்கக் காண்பீர்கள். உங்கள் பொறுப்புணர்ச்சி பணியில் வெளிப்படும்.
சிம்ம ராசி - ஆரோக்கியம்
ஆரோக்கியத்தை விட சிறந்த செல்வம் வேறெதுவும் இல்லை என்பதை கருத்தில் கொண்டு நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள். தேக ஆரோக்கியம் காக்க சிறந்த உணவு முறை மற்றும் ஓய்வு அவசியம். எனவே சிறந்த உணவு முறையை மேற்கொள்ளுங்கள். பதட்டங்களை குறைத்துக் கொண்டு மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். பச்சைக் காய்கறிகள் உட்கொண்டு உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை
சிம்ம ராசி - மாணவர்கள்
முயற்சி திருவினையாக்கும் என்பது இந்த மாதம் உங்களுக்கு நிதர்சனமான உண்மையாக இருக்கும். நீங்கள் எந்த அளவிற்கு உறுதியான முயற்சி எடுக்கிறீர்களோ அந்த அளவிற்கு சிறந்த பலன்களைக் காண்பீர்கள். எல்லா வகையிலும் இந்த மாதம் நீங்கள் அனுகூலமான பலன்களையே காண்பீர்கள். நீங்கள் சிறப்பாக படிக்கும் திறமை வாய்ந்தவர் என்றாலும் அனுபவ ரீதியாக உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள சிறிது காலம் ஆகும். எனவே நீங்களாகவே சுயமாக எந்தவொரு முடிவையும் எடுப்பது அவ்வளவு உசிதமல்ல. அதனால் பாதகமான விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் ஆலோசனைகளை கேட்டு அவர்கள் கூறுவதை தட்டாமல் பின்பற்றுங்கள். உங்களில் சிலர் மேற்கல்வி பெற தொண்டு நிறுவனங்கள் மூலம் நிதி உதவி பெறலாம்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்
சுப தினங்கள்: 1,5,6,8,9,12,13,14,15,17,19,20,22,23,28,29,30.
அசுப தினங்கள்: 2,3,4,7,10,11,16,18,21,24,25,26,27.

Leave a Reply