மிதுன ராசி - பொதுப் பலன்கள்
இந்த மாதம் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதைக் காண்பீர்கள். உலக இன்பங்களில் உங்கள் நாட்டம் காணப்படும். அதை அனுபவிக்கும் சூழ்நிலையும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதே சமயத்தில் தீய பழக்க வழக்கங்கள் உங்களை அண்ட விடாமல் நீங்கள் உங்களை காத்துக் கொள்ள வேண்டும். உறுதியான மனம் இருந்தால் எந்த சூழ்நிலையையும் சமாளித்து வெற்றி பெற இயலும். சமூக வட்டத்தில் உங்கள் உறவுகளை மேம்படுத்திக் கொள்ள விரும்புவீர்கள். வெளி நாட்டுத் தொடர்புகளுக்கும் முயற்சி செய்வீர்கள். இதனால் சமூகத்தில் உங்கள் புகழ் பரவும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். பிறருடன் பழகும் போது குழப்பங்கள் ஏதும் ஏற்படாத வகையில் தெளிவாக சிந்தித்து பேசுவது நல்லது. பொருளாதார நிலைமை சாதாரணமாக இருக்கும். பண விஷயங்களைப் பொறுத்த வரை நீங்கள் கவனமாக இருக்க வேண்டியிருக்கும். யோசிக்காமல் எடுக்கும் முடிவுகள் காரணமாக பல பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், யோசித்து செயலாற்றுவது நல்லது. எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து முடிவு எடுக்கவும். தேவையில்லாத பொருட்களை அதிக பணம் கொடுத்து வாங்குவதை தவிர்க்க வேண்டியது அவசியம். பணத்தை முதலீடு செய்யும் போது ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவதன் மூலம் நீங்கள் லாபம் பெறலாம். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
மிதுன ராசி - காதல் / திருமணம்
நீங்கள் உங்கள் குடும்பத்துடன் குதூகலிக்கும் காலம் இது. குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள். உங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க விருந்து மற்றும் விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சி காண்பீர்கள். திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் தங்களுக்கான துணையை தேர்ந்தெடுப்பார்கள்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன் பூஜை
மிதுன ராசி - நிதி
மிதுன ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பது சந்தோஷமான விஷயம் ஆகும். உங்கள் தேவைகளை தாராளமாக பூர்த்தி செய்து கொள்வீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் நோக்கத்துடன் உங்கள் பணத்தை தான தர்மங்களுக்கு செலவு செய்து ஆத்ம திருப்தி பெறுவீர்கள். செலவுகள் யாவும் குறையும் என்பது உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருக்கும். செலவுகள் குறைந்தால் அதுவே சேமிப்பு அல்லவா? சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற ஆவல் உங்கள் மனதில் ஏற்படும். தெளிவான மனதுடன் அதற்கான முயற்சியில் ஈடுபட்டால் நீங்கள் நிச்சயம் வெற்றி காண்பீர்கள்.
நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: ராகு பூஜை
மிதுன ராசி - வேலை
பணியிடத்தில் உங்கள் திறமையை நிரூபிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் மாதம் இதுவாக இருக்கும். உங்களுக்கு மிகவும் சாதகமான மாதமாக அமையும். பல பணிகளை ஒரே சமயத்தில் செய்து முடிக்கும் ஆற்றல் உங்களிடம் அதிக அளவில் இருக்கும். நீங்கள் நினைத்தை அடைந்து முடிப்பீர்கள். பணியிடத்தில் பிரச்சினைகளை தீர்க்கும் சிறந்த ஆலோசகராக நீங்கள் செயல்படுவீர்கள். நீங்கள் உங்களின் சில பணிகளை சக பணியாளர்களுக்கு பகிர்ந்து அளிப்பீர்கள். அவர்களும் உங்கள் சார்பாக அவற்றை முடித்து தருவார்கள்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்:குரு பூஜை
மிதுன ராசி - தொழில்
மிதுன ராசி வியாபாரிகள் அல்லது தொழில் புரிவோர்கள் நல்ல பெயரும் புகழும் அடையும் காலக் கட்டமாக இந்த மாதம் அமையும். நினைத்தது கிட்டும். தொட்டது துலங்கும் மாதம் இது. மனதில் எழும் தேவையற்ற எண்ணங்களை விலக்கி ஆக்கப் பூர்வமாக நீங்கள் செயல்பட வேண்டும். உங்களின் கடின உழைப்பு மூலம் நீங்கள் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
மிதுன ராசி - தொழில் வல்லுனர்கள்
“சவாலே சமாளி” என்ற வாசகத்தை செயல் வடிவில் காட்ட வேண்டிய மாதம் இதுவாக இருக்கும். கடினமாகவும் நேர்மையாகவும் உழைப்பதன் மூலம் நீங்கள் எந்த சவாலையும் எதிர்கொண்டு எளிதில் ஜெயித்து வெற்றி பெறலாம். தடைக் கற்களை படிக்கல்லாக்கி முன்னேற்றப் பாதையில் நீங்கள் நடை போட முயற்சி எடுக்க வேண்டும். உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ள நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
மிதுன ராசி - ஆரோக்கியம்
சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொண்டால் தான் சிறப்பாக செயலாற்ற முடியும். அதிகப் படியான பணிகள் காரணமாக நீங்கள் சோர்வாக உணர நேரும். உணவும் ஓய்வும் உங்களுக்கு அவசியம் தேவை என்பதை கருத்தில் கொள்வது நல்லது. முறையான உணவு முறைக்கும் தேவையான ஓய்விற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : புதன் பூஜை
மிதுன ராசி - மாணவர்கள்
மிதுன ராசி மாணவர்களின் கல்வி இந்த மாதம் சிறப்பாக இருக்கும். பாடங்களை உன்னிப்பாக கவனித்து கிரகித்துக் கொள்ளும் தன்மை காரணமாக நீங்கள் ஆசிரியர்களின் சிறந்த பாராட்டைப் பெற்று மகிழ்ச்சி காண்பீர்கள். சக மாணவர்களுடன் சிறந்த முறையில் நட்பு கொண்டு உறவாடுவீர்கள். உங்களிடம் தலைமைத்துவ குணம் மேலோங்கி இருக்கும்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்
சுப தினங்கள்: 1,5,6,8,9,12,13,14,15,17,19,23,24,27,28,29,30.
அசுப தினங்கள்: 2,3,4,7,10,11,16,18,20,21,22,25,26.

Leave a Reply