துலாம் ராசி - பொதுப் பலன்கள்
யானைக்கு பலம் தும்பிக்கையில் என்றால் இந்த மாதம் உங்களின் பலம் நம்பிக்கையில் தான். எனவே நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல் பட வேண்டிய காலக் கட்டம் இது ஆகும். அது உங்களிடம் நிரம்பவே காணப்படும். நீங்கள் தெளிவாக சில முடிவுகளை எடுக்க உங்கள் தன்னம்பிக்கை உங்களுக்கு துணை புரியும். உங்கள் தன்னம்பிக்கைக்கு தோள் கொடுக்கும் விதமாக மற்றவர்களும் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். அவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் உங்களுக்கு கிட்டும். நண்பர்கள், உறவினர்கள் என அனைவரிடமும் நல்லுறவு பராமரிப்பீர்கள். குடும்ப வாழ்க்கையும் சீராக செல்வதன் காரணமாக மனதில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கும். பிறருக்கு உதவி செய்யும் பரோபகாரத் தன்மை உங்களிடம் காணப்படும். ஆன்மீக நாட்டமும் அதிகரிக்கும் என்பதால் நீங்கள் ஆன்மீக ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்வதன் மூலம் மன ஆறுதல் பெறுவீர்கள். உங்கள் தேக ஆரோக்கியத்தை நீங்கள் சிறப்பாக பராமரிப்பீர்கள்.
துலாம் ராசி - காதல் / திருமணம்
காதல் அரும்பு மலரும் அருமையான காலம் இது. புதிய நட்பும் புதிய காதல் உறவும் இந்த காலக் கட்டத்தில் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி பெறுவீர்கள். திருமணமான தம்பதிகள் தங்கள் குடும்பத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து மற்றவரை சந்தோஷப்படுத்துவார்கள். திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் விரைவில் கெட்டி மேளம் சத்தம் கேட்கும் வாய்ப்பு உள்ளது.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை
துலாம் ராசி - பொருளாதாரம்
இந்த மாதம் உங்கள் பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வதற்கு உகந்த மாதம் ஆகும். உங்கள் செலவுகள் யாவும் கட்டுக்குள் அமைந்து உங்களுக்கு மகிழ்ச்சி கிட்டும். நீங்கள் ஆன்மீக காரியங்களுக்கு செலவுகளை செய்து அதன் மூலம் ஆத்ம திருப்தி காண விழைவீர்கள். பிறருக்கு கடனாக அளித்த தொகையை வசூல் செய்வதற்கு இந்த மாதம் ஏற்ற தருணம் ஆகும்.
நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: செவ்வாய் பூஜை
துலாம் ராசி - வேலை
வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும் காலம் என்றாலும் நீங்கள் அனுசரித்து நடந்து கொள்வதில் தான் உங்கள் வெற்றி அடங்கியுள்ளது. பணியிடத்தில் நீங்கள் உங்கள் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படாத வகையில் நடந்து கொள்வதன் மூலம் வளர்ச்சி காணலாம். உங்கள் வெற்றி பிடிக்காத சிலர் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் கவனமாக செயல்பட வேண்டிய காலம் இது. உங்கள் கவனம் பணியில் சிதறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சந்திரன் பூஜை
துலாம் ராசி - தொழில்
வியாபாரம் முன்னேற வாடிக்கையாளர்களின் ஆதரவு வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நீங்கள் உங்கள் வாடிக்கையாளரை திருப்தி செய்ய முயல்வீர்கள். மேலும் புதிய வாடிக்கையாளர்களைக் கவர விரும்புவீர்கள். நீங்கள் அதிகம் முயன்றால் கண்டிப்பாக உங்கள் முயற்சி கை கூடும். பணிகள் அதிகமாக இருந்தாலும் கூடுமானவரை எந்த பணியையும் பாதியில் விடாதவாறு செயல்படுங்கள்.
துலாம் ராசி - தொழில் வல்லுனர்கள்
தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் உடன் பணிபுரிபவர்கள் மூலம் சில சங்கடங்களை சந்திக்க நேரும். உங்கள் முன்னேற்றத்திற்கு அவர்களே தடைக் கல்லாக இருப்பார்கள். நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய மாதம் ஆகும். தடைக் கற்களை படிக் கற்களாக்க முயன்றால் நீங்கள் வெற்றிப் பாதையை நோக்கி முன்னேறுவீர்கள். பணிகள் அதிகம் காணப்படுவதால் உங்களுக்கு ஒய்வு கிடைப்பதை கடினமாக உணர்வீர்கள். உங்கள் பணிகளை பிறருக்கும் பகிர்ந்து அளிப்பதன் மூலம் ஓரளவு பணிச் சுமை குறைய வாய்ப்பு உள்ளது.
துலாம் ராசி - ஆரோக்கியம்
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய இயலும். அது போல நல்ல ஆரோக்கியம் இருந்தால் தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்த மாதம் உங்கள் தேக ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். வயிற்று வலி, அல்லது வேறு எதாவது பிரச்சினைகளின் பாதிப்பு இருக்கும். உண்ணும் உணவில் கவனம் வேண்டும். குறிப்பாக எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்க வேண்டியது அவசியம். உடல் ஆரோக்கியத்தைப் பேணவும் பெரிய பாதிப்புகள் வராமல் இருக்கவும் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை
துலாம் ராசி - மாணவர்கள்
மாணவர்களுக்கு இது மிகவும் சிறப்பான மாதம் ஆகும். படிப்பில் திறமை, பழகும் நண்பர்கள் என அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நட்புணர்வை வளர்த்துக் கொண்டு நண்பர்களை மகிழ்விப்பீர்கள். உங்களில் சிலர் மேற்படிப்பிற்க வெளி நாடு செல்லும் வாய்ப்பும் உள்ளது. கடும் முயற்சிகளை மேற்கொண்டு உங்கள் லட்சியத்தை நோக்கி முன்னேறுங்கள்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்
சுப தினங்கள்: 1,5,6,8,9,12,13,14,15,17,19,20,22,23,24,27,28,29,30.
அசுப தினங்கள்:: 2,3,4,7,10,11,16,18,21,25,26.

Leave a Reply