மகர ராசி - பொதுப்பலன்கள்
மகர ராசி அன்பர்களே! கவனமாக இருந்தால் கலகலப்பாக இருக்கும் மாதம் இது. இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும் என்ற போதும் நீங்கள் மேலும் நற்பலன்களைக் காண வேண்டுமெனில் நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். உங்கள் செயல் சிந்தனை அனைத்திலும் நேர்மறை போக்கை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள். தெளிவான சிந்தனை இருந்தால் சிறந்த முடிவுகளை உங்களால் எடுக்க இயலும். பிறருடன் பழகும் போது அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. அண்டை அயலார், உறவினர்கள் என அனைவரிடமும் கவனமாக நடந்து கொள்ள வேண்டிய நேரம் இது. அவர்களுள் சிலர் உங்களுக்கு எதிராக செயல்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. நீங்கள் புனித யாத்திரை அல்லது குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. அது உங்களுக்கு மட்டுமன்றி உங்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதலாக இருக்கும். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். உடல் எடை அதிகரிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள்.
மகர ராசி - காதல் / திருமணம்
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் மாதம் இதுவென்று கூறினால் மிகை ஆகாது. நீங்கள் குடும்பத்தாருடன் குறிப்பாக உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள். குடும்பத் தேவைகளை ஆர்வமுடனும் அனுசரணையுடனும் மேற்கொள்வீர்கள். திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு தக்க வாழ்க்கைத் துணை அமையும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன் பூஜை
மகர ராசி - பொருளாதாரம்
குறைவான முயற்சியில் நிறைவான லாபம் காணும் மாதம் இது.பொருளாதார முன்னேற்றம் மிகச் சிறந்த முறையில் காணப்படும் மாதம் இது. நீங்கள் முன்பு செய்திருந்த முதலீடுகள் மூலம் பண வரவு கிடைக்கப் பெற்று மகிழ்வீர்கள். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகம் காணப்படும் காரணத்தால் அதற்காக பணம் செலவு செய்வீர்கள். நண்பர்களுக்கு பணம் செலவு செய்யும் பொழுது சிக்கனம் கடைபிடிப்பது நன்மை சேர்க்கும். .
நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: குரு பூஜை
மகர ராசி - வேலை
பணியைப் பொறுத்த மட்டிலும் நீங்கள் உங்கள் பணிகளை திறமையுடன் முடிப்பீர்கள். பணியிலேயே உங்கள் கவனம் முழுவதும் இருக்கும் காரணத்தால் சிறந்த முறையில் பணியாற்றி நீங்கள் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். சக பணியாளர்களுடன் நீங்கள் பழகும் விதம் பணியிடத்தில் நல்ல சூழ்நிலையை உருவாக்கும். உங்களுக்கு ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைப்பதற்கான சிறந்த வாய்ப்பு காத்திருக்கின்றது.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்:செவ்வாய் பூஜை
மகர ராசி - தொழில்
வியாபார முயற்சிகளில் ஏற்படும் நல்ல பலன்களும் முன்னேற்றமும் மகிழ்ச்சியை அளிக்கும். தொழிலில் உங்களின் அனுபவம் மூலம் உங்கள் திறனை கூட்டிக் கொள்வீர்கள். உங்களுக்கான முன்னேற்றப் பாதையில் இந்த அனுபவங்கள் வழிகாட்டிகளாக அமையும். சில சவால்களை சந்தித்து வெற்றி காண்பதன் மூலம் நீங்கள் மேலும் பல புதிய பணிகளைப் பெறலாம். இந்த மாதம் நீங்கள் தொழிலில் பலருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் நீங்கள் சிறந்த பலன்களைக் காணலாம். .
மகர ராசி - தொழில் வல்லுனர்கள்
இந்த மாதம் உங்களுக்கு சிறிது சிக்கலான நேரமாக இருக்கும். நீங்கள் என்ன தான் கஷ்டப்பட்டு பணிகளை மேற்கொண்டாலும். திருப்திகரமான சூழ்நிலை அமைவதில் கடினம் இருக்கும். சிலர் உங்களை ஏமாற்றுவது, உங்கள் மன வருத்தத்தை அதிகரிக்கும். அமைதியை கடைபிடிப்பதன் மூலமும், அனுசரித்து நடந்து கொள்வதன் மூலமும் சூழ்நிலையை சிறிது கட்டுக்குள் வைக்க உதவும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று பணியாற்றுவது சிறந்தது.
மகர ராசி - ஆரோக்கியம்
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் சில சிறிய பிரச்சினைகள் காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதில் முக்கிய பங்கு வகிப்பது உணவு. உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக எண்ணெய் கலந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை பேணிக் காக்க உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை
மகர ராசி - மாணவர்கள்
இந்த மாதம் நீங்கள் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டும். ஆக்கமும் ஊக்கமும் கொண்டு படிப்பது நல்லது. உங்கள் மீது அக்கறை கொண்டு ஆலோசனை கூறுபவர்களின் வார்த்தைகளை அலட்சியப்படுத்தாமல் சிரத்தையுடன் அதனை பின் பற்றுவதன் மூலம் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அனுபவங்கள் கற்றுத் தரும் பாடம் உங்களை வழி நடத்திச் செல்ல அனுமதியுங்கள். சக மாணவர்களுடன் பேசும் போது அறிவுப் பூர்வமாக நடந்து கொள்ளுங்கள்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்
சுப தினங்கள்: 1,5,8,12,13,14,15,17,19,20,22,23,24,27,28,29,30.
அசுப தினங்கள்: 2,3,4,7,9,10,11,16,18,21,25,26.

Leave a Reply