கடக ராசி - பொதுப்பலன்கள்
கடக ராசி அன்பர்களே! இந்த மாதம் பொதுவாக மிகச் சிறந்த பலன்களை நீங்கள் எதிர்பார்க்க இயலாது. முயற்சி திருவினையாக்கும் என்பதற்கேற்ப நீங்கள் உங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்படுவீர்கள். பொறுப்புணர்வு இருந்தால் தானே இலட்சியத்தை எளிதாக அடைய இயலும். நீங்கள் பொறுப்புடன் செயல்படுவீர்கள். பிறரை ஈர்க்கும் சக்தி உங்களிடம் காணப்படும். பலரும் கூடியிருக்கும் இடத்தில் நீங்கள் தான் முக்கியத்துவம் வாய்ந்த நபராக இருப்பீர்கள். அனைவரின் கவனத்தையும் நீங்கள் கவர்வீர்கள். இந்தச் சூழ்நிலை உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில் எள்ளளவும் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம். மனதில் மகிழ்ச்சி இருந்தால் உறவுகள் எல்லாம் இனிமையாகத் தான் தெரியும். உறவினர்கள் மற்றும் பிறருடன் நல்லுறவை வளர்த்து நன்மை பல பெறுவீர்கள். உங்கள் மகிழ்ச்சியை கூட்டும் வகையில் உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கக் காண்பீர்கள். உங்கள் கவனமான அணுகுமுறை காரணமாக சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.
கடக ராசி - காதல் / திருமணம்
உறவைப் பொறுத்தவரை இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். நீங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருடனும் சிறந்த முறையில் உறவைப் பராமரிப்பீர்கள். குறிப்பாக உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் உங்களின் தரமான நேரத்தை பகிர்ந்து பரஸ்பரம் கருத்துக்களை பகிர்வதன் மூலம் அவர்களின் மரியாதை மற்றும் ஆதரவு கிடைக்கப் பெற்று மகிழ்வீர்கள். விருந்து மற்றும் விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் காரியங்கள் அனைத்தும் நல்ல பலன்களை அளிக்கும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சனி பூஜை
கடக ராசி - பொருளாதாரம்
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு சுமாரான பலன்கள் கிடைக்கும் என்று கூறலாம். என்றாலும் உங்கள் பொருளாதார நிலை சீராக இருக்கும். செலவுகளைப் பொறுத்தமட்டிலும் நீங்கள் குடும்பத்தில் நிகழவிருக்கும் சுப நிகழ்சிகள் மற்றும் பயணங்கள் போன்றவற்றிற்கு செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும். உங்கள் முதலீடுகள் மூலம் நீங்கள் லாபம் பெற்று மகிழ்வீர்கள்.
நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: சுக்கிரன் பூஜை
கடக ராசி - வேலை
மாதம் நல்ல மாதம் என்று நீங்கள் மகிழ்ச்சி கொள்ளும் அளவில் இந்த மாதம் உங்களுக்கு நன்மைகள் நிகழும் வாய்ப்பு உள்ளது. பணியில் நீங்கள் தொட்ட காரியங்கள் யாவும் துலங்கும். கருத்துகளை பரிமாறும் கலையைக் கையில் எடுத்துக் கொண்டு நீங்கள் பிறருடன் உங்கள் கருத்துகளை வெளிப்படையாகப் பேசி அவர்களுடன் ஒத்துழைப்பீர்கள். அதனால் பாராட்டும் பெறுவீர்கள். பணியைப் பொறுத்த மட்டில் இந்த மாதம் நீங்கள் கூடுதல் பணிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மகிழ்ச்சி தரும் விஷயமாக உங்களுக்கு வெளி நாடு செல்வதற்கான வாய்ப்பும் கிட்டும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்:செவ்வாய் பூஜை
கடக ராசி - தொழில்
தொழிலைப் பொறுத்தவரை, நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஏற்ப உங்களுக்கு பலன்கள் அதிக அளவில் கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் நீங்கள் ஏமாந்து தான் போவீர்கள். அதற்காக வருத்தப்படாதீர்கள். உங்கள் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். வேகத்தை விட விவேகம் தான் சிறந்தது என்ற எண்ணத்துடன் நீங்கள் செயல்பட வேண்டிய தருணம் இது. உங்கள் செயல் மூலம் உங்களுக்கு திருப்தி கிடைக்கும் என்றாலும் நீங்கள் வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் உங்களுக்கு பிரச்சினயை ஏற்படுத்தும். பிறரிடம் பணிகளை ஒப்படைத்தால் அவர்கள் முடித்து அளிக்கும் வரை காத்திராமல் அவ்வப்போது நீங்களும் கண்காணிக்க வேண்டும்.
கடக ராசி - தொழில் வல்லுனர்கள்
தொழில் வல்லுனர்கள், இந்த மாதம் சிறிது பதட்டமான சூழ்நிலையைக் கையாள வேண்டியிருக்கும். மன அமைதியின்மை காரணமாக மேலதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். இந்த சூழ்நிலையை சமாளிக்கவும் தொழிலில் முன்னேறவும், நீங்கள் உணர்வுப் பூர்வமாக செயல்படாமல் அறிவுபூர்வமாக செயல்பட வேண்டும்..
கடக ராசி - ஆரோக்கியம்
சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் உங்கள் காரியங்களை சிறப்பாக மேற்கொள்ள முடியும். எனவே நீங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கால்சியம் சத்து குறைபாடு காரணமாக நீங்கள் மூட்டுக்களில் வலிகளை உணர்வீர்கள். அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். உங்கள் ஆரோக்கியத்தை சீர் குலைக்கும் எண்ணெய் மற்றும் துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் அசதியை தவிர்க்க பயணங்களை தவிருங்கள்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை
கடக ராசி - மாணவர்கள்
மாணவர்கள் இந்த மாதம் முறையாக பாடங்களை படித்து முடிப்பதற்கான சூழ்நிலை காணப்படும். ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும், துடிப்புடனும் செயல்பட்டு வெற்றிக் கோட்டையை கைப்பற்ற முயல்வீர்கள். சிறப்பாக கல்வி கற்பதன் மூலம் உங்கள் மனதிற்குள் திருப்தி காணப்படும். உடன் பயிலும் மாணவர்களுடன் நல்லுறவைப் பராமரிப்பீர்கள். நீங்கள் மேற்கல்வி பயில்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்
சுப தினங்கள்: 1,5,6,8,9,12,13,14,15,17,19,20,27,28,29,30.
அசுப தினங்கள்: 2,3,4,7,10,11,16,18,21,22,23,24,25,26.

Leave a Reply