தனுசு ராசி - பொதுப்பலன்கள்
தனுசு ராசி அன்பர்கள் இந்த மாதம் சிறந்த பலன்களைக் கண்டு மகிழ்ச்சி காணும் நேரம். நீங்கள் எந்த விஷயத்திலும் ஆழ்ந்து யோசித்து செயல்படுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பிரச்சினைகளை சந்தித்தாலும் அதனை சமாளிக்கும் யுக்தியையும் நீங்கள் உணர்ந்து செயல்படுவீர்கள். பெருந்தன்மையுடன் செயல்படுவது உங்களுக்கு கூடுதல் வெற்றியை அளிக்கும். உங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள இந்த மாதத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.பணியில் நீங்கள் சந்திக்கும் கடினமான சூழ்நிலைகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். இதன் மூலம் உங்கள் தரத்தையும் உயர்த்திக் கொள்ளும் அரிய வாய்ப்பினைப் பெறுவீர்கள். சக பணியாளர்களின் நல்லுறவும் மேலதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாக இருக்கும். நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடனும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவீர்கள்.
தனுசு ராசி - காதல் / திருமணம்
இந்த மாதம் உங்கள் குடும்பத்தில் இன்பம் நிலவக் காண்பீர்கள். நேர்மறையான செயல்களே நிறைந்து காணப்படும். குடும்பத்தில் மற்றவர்களின் உணர்வுகளை நீங்கள் புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். அவர்களுடன் கலந்து உறவாடி மகிழ நேரம் ஒதுக்குவீர்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரணையாக நடந்து கொள்வீர்கள். குடும்பத்தில் காணப்படும் மகிழ்ச்சி காரணமாக உங்கள் மன நிலையும் மகிழ்ச்சியாக இருக்கும். வெளி வட்டாரத்திலும் பிறருக்கு உதவி செய்து, அதாவது பொது நலத் தொண்டு செய்து மகிழ்வீர்கள்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: அங்காரகன் பூஜை
தனுசு ராசி - பொருளாதாரம்
இந்த மாதம் பணம் என்பது உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்காது. உங்கள் தேவைகளை நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு உங்கள் கையில் பணம் புழங்கும். மேலும் உற்ற நண்பர்களுக்கு உதவும் வள்ளலாகவும் நீங்கள் இருப்பீர்கள். அதாவது உங்கள் நண்பர்களுக்கு அவர்களின் தேவை அறிந்து பண உதவி செய்வீர்கள். நீங்கள் ஏற்கனவே செய்த முதலீடுகளின் மூலமும் பண ஆதாயம் பெறுவீர்கள். அதன் மூலம் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: சனி பூஜை
தனுசு ராசி - வேலை
இந்த மாதம் நீங்கள் வழக்கமாக செய்யும் பணியை விட சற்று கூடுதல் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் என்னவென்றால், சக பணியாளர்கள் உங்களுக்கு பணிகளில் முழு மனதுடன் ஒத்துழைப்பு அளிப்பார்கள். கூடுதல் பணிகளை செய்து கூடுதல் வருமானமும் ஈட்டுவீர்கள். பணியிடத்தில் அனைவரிடமும் நல்லுறவு பராமரிப்பீர்கள்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சூரியன் பூஜை
தனுசு ராசி - தொழில்
இந்த மாதம் நீங்கள் எறும்பைப் போல சுறுசுறுப்பாக ஓய்வின்றி பணியாற்ற வேண்டிய சூழ்நிலை காணப்படும். அதிகப் பணிகள் காரணமாக உங்களுக்கு அசதி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வியாபார வாய்ப்புகளும் அதிகம் கிட்டும். அது உங்களுக்கு ஆதரவாகவும் இருக்கும். அதிலும் நீங்கள் சிறப்பாக செயலாற்றி பேரும் புகழும் பெறுவீர்கள். உங்கள் மதிப்பு மற்றும் மரியாதை உயரக் காண்பீர்கள்.
தனுசு ராசி - தொழில் வல்லுனர்கள்
தனுசு ராசி தொழில் வல்லுனர்கள் தங்கள் தொழிலில் சாதகமான சூழ்நிலையைக் கண்டு மகிழ்ச்சி காண்பார்கள். அனைத்து விஷயங்களிலும் நேர்மறை பலன்களே கிடைக்கப் பெறும். நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படும் மாதம் இது. பாதியில் முடிக்காமல் விட்ட பணிகளை இப்பொழுது எடுத்து செய்து முடித்து விடுவீர்கள்.
தனுசு ராசி - ஆரோக்கியம்
அதிகமான பணிகள், ஓய்வெடுக்க நேரமின்மை காரணமாக உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மனதில் இனம் புரியாத பதட்ட நிலை இருக்கும். எனவே நீங்கள் அதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாக இருக்கும். முறையான உணவு மற்றும் சரியான ஒய்வு மூலம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ளலாம். ஆரோக்கியத்தை மேம்படுத்த திராட்சை முந்தரி, பாதாம் போன்றவற்றை உண்ணுங்கள் பானங்களை அருந்துங்கள்
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை
தனுசு ராசி - மாணவர்கள்
இந்த மாதம் நீங்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கான நேரமாக அமையும். நீங்கள் சிலந்தியைப் போல விடா முயற்சியுடன் செயல்பட்டு அதில் வெற்றி காண்பீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் ஆறுதல் அளிக்கும். மேற்கொண்டு படிப்பதற்கும் இது துணை புரியும். உங்கள் திறமைகள் யாவும் பளிச்சிடும் நேரம் இது. அதற்காக நீங்கள் ஆசிரியரின் பாராட்டையும் பெறுவீர்கள். உங்களின் தேவை உணர்ந்து அவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்
சுப தினங்கள்:: 1,5,9,12,13,14,15,17,19,20,22,23,24,27,28,29,30.
அசுப தினங்கள்: 2,3,4,6,7,8,10,11,16,18,21,25,26.

Leave a Reply