விருச்சிக ராசி - பொதுப்பலன்கள்
இரட்டை சிந்தனைக்கு இடம் அளிக்காமல் இருந்தால் நீங்கள் இந்த மாதம் மகிழ்ச்சியுடன் இருக்க இயலும். ஒரே மனிதன் இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய இயலாது.எனவே உங்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள். சூழ்நிலைக்குத் தக்கவாறு நடந்து கொள்ள முயற்சி செய்வதன் மூலம் நீங்கள் வெற்றி காணலாம். பண விஷயத்தில் தெளிவாக இருங்கள். ஆழம் தெரியாமல் காலை விட்டு விடாதீர்கள். எந்த ஒரு ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசனை செய்வது நல்லது. பங்கு விஷயங்களில் இந்த மாதம் மூக்கை நுழைக்காதீர்கள். தொழிலைப் பொறுத்தவரை உங்கள் நிலை இந்த மாதம் சிறப்பாக இருக்கக் காண்பீர்கள். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரக் காண்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறு சிறு பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரும்.
விருச்சிக ராசி - காதல் / திருமணம்
ஒரு நல்ல குடும்பம் ஒரு சிறந்த பல்கலைக் கழகம் ஆகும். உங்கள் குடும்பத்தை சிறந்த பல்கலைக்கழகமாக ஆக்கிக் கொள்ள நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு ஆதரவாக நடந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து உறவாடி அவர்களுடனான உறவை மேம்படுத்திக் கொள்வீர்கள். ஏதாவது விஷயத்தில் முடிவுகளை எடுக்க வேண்டும் என்றால் அவர்களுடன் ஆலோசனை செய்த பிறகே எடுப்பீர்கள். எல்லா விதத்திலும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு, முக்கியமாக உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஆதரவாக இருப்பீர்கள். அவர்களுடன் விருந்து விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்து அவர்களையும் மகிழ்விப்பீர்கள். திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு தக்க துணை அமையும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை
விருச்சிக ராசி - பொருளாதாரம்
இந்த மாதம் நீங்கள் அதிக பணவரவு பெறும் வாய்ப்பு உள்ளது. பொருளாதார நிலை சிறப்பாகவும் உங்கள் மனதிற்கு ஆறுதல் தரும் வகையிலும் இருக்கும். கையிலிருக்கும் பணத்தில் செலவு போக மீதியை சேமிப்பதை வழக்கமாகக் கொள்வீர்கள். அதனால் உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும். கூடுதலாக நீங்கள் உங்கள் முதலீடுகளின் மூலமும் ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்பினைப் பெறுவீர்கள்.
நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: புதன் பூஜை
விருச்சிக ராசி - வேலை
இந்த மாதம் பணி என்பது நீங்கள் சுமக்கும் சுமையாகக் கருதாமல் மிக்க மகிழ்ச்சியுடன் மேற்கொள்ளும் வகையில் இருக்கும். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உங்களின் இந்த அணுகுமுறை காரணமாக நீங்கள் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள் என்பது உங்கள் மனதிற்கு ஆறுதல் மற்றும் திருப்தி அளிக்கும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்:சூரியன் பூஜை
விருச்சிக ராசி - தொழில்
தொழிலைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு மிகவும் சாதகமான நேரமாக அமையும். நீங்கள் கொள்கை பிடிப்புடன் காணப்படுவீர்கள்.எனவே உங்கள் தொழில் நோக்கம் லாபம் காண்பதாக மட்டும் இன்றி நீங்கள் உங்களுக்கென வகுத்த கொள்கையை பின்பற்றி அதனை நிலை நாட்டுவதிலும் ஆர்வம் இருக்கும். இதுவே உங்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் கருவியாகவும் அமைவது உங்களுக்கு அதிர்ஷ்டகரமான விஷயம் ஆகும். .
விருச்சிக ராசி - தொழில் வல்லுநர்கள்
வாய்ப்புகள் உங்கள் வாசல் தேடி வரும் போது அதனை கைப்பற்றிக் கொள்வதே உங்களது திறமை ஆகும். தொழிலில் உங்கள் திறமைகளை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொழிலில் ஏற்படும் முன்னேற்றம் மனதிற்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். உங்கள் தொழில் வளர்ச்சி சீராக காணப்படும். உங்கள் நிதிநிலையிலும் முன்னேற்றம் கண்டு மகிழ்வீர்கள். நீங்கள் புதிய நபர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துறவாடி அவர்களின் நட்பைப் பெறுவீர்கள்.
விருச்சிக ராசி - ஆரோக்கியம்
ஆரோக்கியமாக இருக்கும் போது தான் நம்மால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நீங்கள் கருத்திலும் கவனத்திலும் கொள்ள வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க நீங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் இந்த மாதம் உங்களுக்கு கால்சியம் சத்து குறைபாடு காரணமாக மூட்டு வலி ஏற்படும் வாய்ப்புள்ளது. நீங்கள் அஜீரணக் கோளாறுகளால் அவதிப்படவும் நேரலாம். சிறு தூர பயணங்கள் சென்றாலும் உங்களுக்கு உடல் அசதி மற்றும் அசௌகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அதனை நீங்கள் தவிர்க்க வேண்டியது அவசியம்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை
விருச்சிக ராசி - மாணவர்கள்
இந்த மாதம் நீங்கள் தேனியைப் போல சுறுசுறுப்புடன் செயல்பட்டு உங்கள் இலட்சியத்திற்காக பாடுபடுவீர்கள். பாடங்களைப் படிப்பதில் ஆர்வமும் துடிதுடிப்பும் காணப்படும். அதே வேகத்தில் நீங்கள் சிறப்பாக படித்து முடித்து விடுவீர்கள். அதே சமயத்தில் சக மானவர்களுடன் சேர்ந்து வெளியிடங்களில் சுற்றுவதில் உங்கள் மனம் ஈடுபடலாம். கவனம் சிதறினால் படிப்பில் பின் தங்க வேண்டிய நிலை இருக்கும். எனவே படிப்பிற்கு நீங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்
சுப தினங்கள்: 1,8,9,12,13,14,15,17,19,20,22,23,24,27,28,29,30.
அசுப தினங்கள்: 2,3,4,5,6,7,10,11,16,18,21,25,26.

Leave a Reply