மீன ராசி - பொதுப் பலன்கள்
உங்கள் வாழ்வில் வெற்றிக் கொடியை நாட்ட இந்த மாதம் உங்களை வரவேற்கின்றது. பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை எல்லாம் எளிதாக சமாளித்து வெற்றி நடை போடுவீர்கள். உங்கள் சமூக அந்தஸ்தும் செல்வாக்கும் உயரக் காண்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கக் காண்பீர்கள். எடுத்த காரியங்கள் யாவற்றையும் சிறப்பாகவும் விரைவாகவும் செய்து முடிப்பீர்கள். உங்கள் பொருளாதாரம் சீராகவும் ஸ்திரமாகவும் இருக்கும். குடும்பத்திற்காக திட்டங்களை தீட்டிச் செயல்படுவீர்கள். பணியிடத்திலும் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டு மேலதிகாரிகளின் ஆதரவையும் பாராட்டையும் பெறுவீர்கள். குடும்பத்தாருடன், குறிப்பாக வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள். வெளியிடத்திலும் புதிய நட்பு வட்டாரங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். புதிய மனிதர்களின் தொடர்பு உங்களுக்கு நன்மை பெற்றுத் தரும். தொலை தூர பிரயாணங்களை நீங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீன ராசி - காதல் / திருமணம்
காதலில் இருந்த கடந்த கால கசப்புணர்வுகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். நெருக்கமும் அன்பும் அதிகரிக்கும். சிலர் தங்கள் வாழ்வில் புதிய காதல் அரும்புவதைக் காண்பார்கள். திருமணமான தம்பதியர்கள் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வதால் பிரச்சினைகள் இருந்தாலும் அவைகள் யாவும் தீரும். திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு கெட்டி மேள சத்தம் விரைவில் கேட்கும் காலம் வந்து விட்டது.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: புதன் பூஜை
மீன ராசி - பொருளாதாரம்
உங்கள் நிதிநிலை வளர்ச்சி இந்த மாதம் பரவாயில்லை என்று சொல்லுமளவிற்கு காணப்படும். கையில் இருக்கும் பணத்தை சேமிக்க நீங்கள் நீண்ட கால முதலீட்டு திட்டங்களில் பங்கு கொள்வீர்கள். இதன் மூலம் உங்கள் சேமிப்பு உயரும் வாய்ப்பு உள்ளது. வீட்டிற்கு தேவையான பொருட்கள், புதிய வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: குரு பூஜை
மீன ராசி - வேலை
பணிகளை சிறப்பாக ஆற்றுவதன் மூலம் நீங்கள் தனிப்பட்ட முறையில் முன்னேறுவது மட்டுமன்றி நிர்வாகத்தின் முன்னேற்றத்திலும் பங்கு கொள்வீர்கள். நீங்கள் எதிர் பார்த்த பலன்களை அடைந்து மகிழ்வீர்கள். புதிய வாய்புகள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். அதனை சிறப்பாக செய்து முடித்து நிவாகத்தின் பாராட்டைப் பெறுவீர்கள்.
நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: அங்காரக பூஜை
மீன ராசி - தொழில்
வியாபாரிகள் தங்கள் தொழிலில் ஒரு ஸ்திரமான முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். உறுதியான எண்ணங்கள் உங்கள் தொழில் சிறப்பாக நடக்க உறுதுணையாக இருக்கும். தொழில் துறையில் புதிய நட்புகளின் மூலம் புதிய பணி வாய்புகள் கிடைக்கும். அதிக பணிகள் செய்ய வேண்டியிருப்பதால் அதற்கேற்ப வேலை செய்வதற்கு ஆட்களையும் அதிகப்படுத்துவதன் மூலம் பணிகள் சிறப்பாக நடைபெறும். . தொழிலில் உங்கள் பங்குதாரர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.
மீன ராசி - தொழில் வல்லுனர்கள்
தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். அமைதியாக செயல்பட்டு பிரச்சினைகளை திறமையுடன் தீர்த்து சிறப்பாக செயல்படுவீர்கள். அதற்கான பாராட்டையும் பெறுவீர்கள். பிறரை காயப்படுத்தாமலும் அதனால் நீங்கள் காயப்படாமலும் இருக்க உங்கள் வார்த்தைகளை நீங்கள் கவனமாக உபயோகிக்க வேண்டும். அவ்வாறு செயல்படுவதன் மூலம், உங்கள் உடன் பணி புரிபவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.
மீன ராசி - ஆரோக்கியம்
ஆரோக்கியம் என்பதே சிறந்த செல்வம் என்று உணர்ந்து அதை நீங்கள் முறையாக பராமரிப்பீர்கள். உங்கள் செயல்பாட்டில் சுறுசுறுப்பு காணப்படும். தொலை தூர பயணங்களை தவிர்ப்பது உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள உதவும். உலர் திராட்சை, பாதாம் முந்திரி போன்றவைகளை உட்கொள்வதன் மூலம் ஆற்றலைப் பெறலாம்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை
மீன ராசி - மாணவர்கள்
புதியதோர் உலகம் படைக்கும் வகையில் நீங்கள் புதுமையான எண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள். அதையே உங்கள் முன்னேற்றத்தின் அடிக்கல்லாக மாற்றிக் கொள்வீர்கள். கல்வியை சிறந்த முறையில் கற்று முன்னேற்றப் பாதையை நோக்கி செல்வீர்கள். ஆனால் எந்த செயலை செய்தாலும் ஒன்றிற்கு இரண்டு முறை ஆராய்ந்து அதன் பிறகு அவற்றை மேற்கொள்வது நல்லது. அதன் மூலம் பாதகமான விளைவுகளை தடுக்கலாம்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்
சுப தினங்கள்: 1,5,6,8,9,17,19,20,22,23,24,27,28,29,30.
அசுப தினங்கள்:: 2,3,4,7,10,11,12,13,14,15,16,18,21,25,26.

Leave a Reply