Dattatreya Jayanthi 2023: Power Day to Invoke Dattatreya to Remedy Problems in Life, Regain Prosperity & Attain Material Fulfillment Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

2018 June Month’s Rasi Palan for Viruchigam

April 16, 2018 | Total Views : 2,107
Zoom In Zoom Out Print

விருச்சிகம் ராசி - பொதுப்பலன்கள் இந்த மாதம் உங்களுக்கு மிகவும் அனுகூலமான மாதம். நீங்கள் சிறு சிறு பிரச்சினைகளை சந்தித்தாலும் உங்களால் அவைகளை சமாளிக்க இயலும். உங்கள் கவனத்திறன் அதிகரிக்கும். அதனால் எந்த விஷயத்தையும் ஆழமாக அறிந்து கொள்வீர்கள். உங்கள் பரந்த மனப்பான்மை மூலம் தனிப்பட்ட வாழ்விலும், தொழிலிலும் நீங்கள் கடினமான சூழ்நிலைகளையும் சிறப்பாக கையாள்வீர்கள். உங்கள் தகவல் தொடர்பு திறமை மூலம் உங்கள் நிலுவைப் பணிகளை முடிப்பீர்கள். உங்கள் தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள். உங்கள் மேலதிகாரிகள் மற்றும் கீழ்பணிபுரிபவர்களிடம் நல்லுறவைப் பராமரிப்பீர்கள். மகிழ்ச்சியான மனிதர்களிடம் நட்புறவு கொள்வீர்கள். சமூகத்தில் நன்மதிப்பு பெறுவீர்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். விருச்சிகம் ராசி - காதல் / திருமணம் இந்த மாதம் உங்கள் காதல் வாழ்க்கை சாதரணமாக இருக்கும். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். நீங்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். உங்கள் துணை எரிச்சலடையும் வகையில் நடந்து கொள்ளுதல் கூடாது. அமைதியின்மை காணப்பட வாய்ப்புள்ளது. திருமண வாழ்வில் நல்லிணக்கம் மேம்பட பரிகாரம் : குரு பூஜை June Monthly Viruchigam Rasi Palangal 2018 Tamil விருச்சிகம் ராசி - நிதி நிலைமை இந்த மாதம் நீங்கள் நீங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். பண விஷயத்தில் வாக்குறுதி கொடுக்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு திட்டமிடலாம். இந்த மாதம் நீங்கள் கடன்களை அடைக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் நிதிநிலைமை மேம்பட பரிகாரம் ; புதன் பூஜை விருச்சிகம் ராசி - வேலை பணியில் மந்த நிலை காணப்படும். சில சமயங்களில் அவை தவறான திசையில் செல்லக்கூடும். நீங்கள் விழிப்புடன், கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். பணி நிமித்தமான பயணங்கள் நல்ல பலனளிக்கும். பணி சம்பந்தமான உங்கள் செயல்களில் நன்மை தீமை ஆராய்ந்து புரிந்து கொள்ள முயலுங்கள். எந்த வேலையும் தொடங்குமுன் உங்கள் மேலதிகாரிகளிடம் ஆலோசனை கேளுங்கள். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : சூரிய பூஜை விருச்சிகம் ராசி - தொழில் நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை வெற்றிகரமாக முடித்து அதற்குண்டான மரியாதை பெறுவீர்கள். வாடிக்கையாளர்களுடன் உல்லாசப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். உங்கள் இலக்குகளை அடைய கடினமாக முயற்சி செய்வீர்கள். தொழிலை சிறப்பாக செய்வீர்கள். உங்கள் வருமானம் கணிசமாக உயரும். உங்கள் நல்ல நடத்தை மற்றும் தாராள மனப்பான்மை காரணமாக நீங்கள் புகழடைவீர்கள். விருச்சிகம் ராசி - தொழில் வல்லுநர்கள் உங்கள் தொழில் சம்பந்தமாக நீங்கள் தொலை தூர பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் நன்மை பெறுவீர்கள். உங்கள் கீழ் பணி புரிபவர்களிடம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள். அதனால் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களிடம் குறைவாகப் பழகுங்கள். உங்கள் நல்ல நடத்தை மற்றும் தாராள மனப்பான்மை காரணமாக நீங்கள் புகழடைவீர்கள். உங்கள் திறமை மூலம் உயர்ந்த நிலை அடைவீர்கள். விருச்சிகம் ராசி - ஆரோக்கியம் உங்கள் ஆரோக்கியத்தில் சிறிய சீர்கேடு காணப்படும். உங்களிடம் கவலைகள் காணப்படும். உங்கள் துணை மற்றும் குழந்தைகளுக்கு மருத்தவ பரிசோதனை தேவைப்படலாம். இந்த மாதம் முழுவதும் சந்திப்புகள் மற்றும் பயணங்கள் காணப்படுவதால் ஓய்விற்கு முன்னுரிமை அளியுங்கள். ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை விருச்சிகம் ராசி - மாணவர்கள் மாணவர்களுக்கு இந்த மாதம் சாதரணமாக காணப்படும். சந்தேகம் இருந்தால் ஆசிரியர்கள் மூலம் அதனை தீர்த்துக் கொண்டு முடிக்காத பாடங்களை படித்து முடிக்க வேண்டும். நீங்கள் குழுவாக இனைந்து படிப்பதன் மூலம் உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள இயலும். ஆசிரியரின் பாராட்டு உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். உங்கள் அறிவை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இந்த மாதத்தில் வளர்ச்சி காண கூடுதல் கவனம் தேவை கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 2nd, 3rd, 4th, 11th, 12th, 18th, 19th, 25th, 26th and 30th அசுப தினங்கள்: 5th, 7th, 8th, 15th, 16th, 22nd, 27th and 29th

Leave a Reply

Submit Comment
  • Abe
    Onnum nalathu nadaka matinguthu only kavalai
    May 30, 2018