AstroVed Menu
AstroVed
search
search

2018 June Month’s Rasi Palan for Dhanusu

dateSeptember 19, 2018
தனுசு ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் நீங்கள் உங்கள் லட்சியங்களை தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள். தகுதியுள்ள நபர்களிடம் நீடித்து இருக்கக் கூடிய நட்புறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். சமீப முன்னேற்றங்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதில் நீங்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். உங்களின் குணம் உங்களின் பொறுப்புகளை நிறைவேற்றவும் உங்கள் இலட்சியத்தை அடையவும் உதவிகரமாக இருக்கும். உங்கள் வீட்டு புனர்நிர்மானம் மற்றும் மராமத்திற்காக நீங்கள் பணம் செலவு செய்வீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களைப் பற்றி பெருமையாக நினைப்பார்கள். நீங்கள் விவேகத்துடன் முதலீடு செய்வீர்கள். அதன் மூலம் லாபம் காண்பீர்கள். உங்கள் அஜாக்கிரதை காரணமாக நீங்கள் சிறு ஆரோக்கிய பாதிப்பிற்கு ஆளாவீர்கள். தனுசு ராசி – காதல் / திருமணம் உங்கள் துணையின் தேவைகளை பூர்த்தி செய்ய நீங்கள் சிறிது அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் மனோதிடத்தை பலப்படுத்தி உங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். திருமண வாழ்வில் உறவுமுறை சிறப்பாக இருக்கும். உங்கள் குடும்பத் தேவைகளுக்கு நீங்கள் சிறப்பு கவனம்செலுத்த வேண்டும். திருமணம் நிச்சயம் ஆவதற்கான வாய்ப்பு உண்டு. திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் : அங்காரக பூஜை 2018-june-months-rasi-palan-dhanusu தனுசு ராசி – நிதிநிலைமை இந்த மாதம் உங்கள் நிதிநிலைமை சாதகமாக உள்ளது. நீங்கள் நீண்ட கால முதலீடுகளில் பங்கு கொள்வீர்கள். அசையும் சொத்துக்களை வாங்குவீர்கள். உங்கள் இலட்சியங்கள் நிறைவேறும். பண வரவின் காரணமாக உங்கள் நிதிநிலை திருப்திகரமாக இருக்கும். உங்கள் செலவுகளை கவனமாக கண்காணிக்க வேண்டும். நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : சனி பூஜை தனுசு ராசி – வேலை இந்த மாதம் உங்கள் பணி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பணியில் உங்கள் ஸ்திரத்தன்மை காரணமாக நீங்கள் விரும்பும் பலனை அடைவீர்கள். உங்கள் இலட்சியத்தை அடைவதற்கும் நீங்கள் உங்கள் வாழ்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் கவனமாகப் பணியாற்ற வேண்டும். உங்கள் வருமானம் அதகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம் : சூரியன் பூஜை தனுசு ராசி – தொழில் இந்த மாதம் தொழில் வளர்ச்சி மந்தமாக காணப்படும். அதனால் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உங்களின் நேர்மையான முயற்சி மூலம் நீங்கள் விரும்பும் பலன்களை அடையலாம். உங்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல அபிப்ராயம் பெற உங்கள் செயல்களை நீங்கள் தாமதமின்றி ஆற்ற வேண்டும். உங்கள் பணிகளை முடித்துக் கொடுக்க நீங்கள் ஆட்களை நிய மித்துக் கொள்வீர்கள். உங்கள் தொழில் பங்குதாரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தனுசு ராசி – தொழில் வல்லுனர்கள் உங்களின் ஒவ்வொரு செயலிலும் கடின உழைப்பு தேவைப்படும். நீங்கள் தொழிலில் தொடர்ந்து தடைகளை சந்திப்பீர்கள். இதனால் உங்கள் ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கையை இழப்பீர்கள். உங்கள் வார்த்தைகளில் கவனம் வேண்டும். உங்கள் கருத்துக்களை உங்கள் மேலதிகாரிகள் புரிந்து கொள்ளமாட்டார்கள். எனவே வாக்குவாதங்களை தவிர்க்கவும். தனுசு ராசி – ஆரோக்கியம் இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் சீர்கேடு காணப்படும். உடல் வலி, முட்டி வலி மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவைகளின் பாதிப்பு காணப்படும் எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை தனுசு ராசி – மாணவர்கள் இந்த மாதம் உங்கள் அதீத நம்பிக்கை காரணமாக நீங்கள் மேல்படிப்பை முடிக்க கடினமாக முயற்சிப்பீர்கள். உங்கள் சிரத்தையும் நேர்மையும் உங்கள் இலக்குகளில் நீங்கள் வெற்றி பெற உதவியாக இருக்கும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை பெருகும். நீங்கள் சமூக வட்டாரத்தில் நல்ல மதிப்பு பெறுவீர்கள். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 1st, 5th, 12th, 15th, 22nd, 23rd, 27th and 29th அசுப தினங்கள்: 7th, 11th, 25th, 29th and 30th

banner

Leave a Reply