துலாம் ராசி – பொதுப்பலன்கள்
இந்த மாதம் சாதாரணமாக காணப்படும். தகவல் தொடர்புகளில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதத்தின் இடைப் பகுதியில் நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செல்வீர்கள். அந்தப் பயணங்கள் உங்களுக்கு பலன் தருவதாக அமையும். பணத்தை செலவு செய்வதற்கு முன் நீங்கள் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்ய வேண்டும். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும். உங்கள் நண்பர்களுடன் சுமூக உறவு கொள்ளுங்கள். அது உங்கள் எதிர்காலத்திற்கு உதவும். விருந்து மற்றும் விழாக்களில் நீங்கள் முக்கியத்துவம் வகிப்பீர்கள். படிப்பில் நீங்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் நிறுவனத்தில் நல்ல அங்கீகாரம் பெறுவீர்கள். சோர்வு காரணமாக உங்கள் உடல் நிலை பாதிக்கப்படலாம். அதனால் மருத்துவச் செலவுகள் கூடும்.
துலாம் ராசி – காதல் / திருமணம்
இந்த மாதம் நீங்கள் பதட்டத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் உங்கள் தனிப்பட்ட வாழ்வில் அது பிரச்சினையை உண்டாக்கும். உங்கள் துணையிடம் அகந்தைப் போக்கை கட்டுப்படுத்த இயலாமல் போகலாம். உங்கள் பொறுமையை இழக்க நேரலாம். இந்தக் காலக் கட்டங்களில் நீங்கள் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கும். மிகுந்த முயற்சியுடன் உங்கள் துணையுடனான பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வீர்கள். திருமணத்திற்கு ஆர்வம் காட்டமாட்டீர்கள்.
திருமண நல்லிணக்கம் காண பரிகாரம் : குரு பூஜைதுலாம் ராசி – நிதிநிலைமை
நிதி நிலைமையில் மிதமான அநுகூலமே காணப்படும். முதலீடு மற்றும் பங்கு வர்தகங்களிலிருந்து சற்று விலகி இருங்கள். கட்டுப்படுத்த இயலாத செலவுகள் உங்களுக்கு கவலை அளிக்கும். பண விஷயத்தில் வாக்குறுதி அளிப்பதை தவிர்த்திடுங்கள். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்பாராத செலவினங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வேலை மற்றும் தொழில் வளர்ச்சிக்கு பரிகாரம் : அங்காரக பூஜைதுலாம் ராசி – வேலை
இந்த மாதம் உங்கள் அலுவலக வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். குறைந்த முயற்சியில் பெரிய வெற்றியை எதிர்பார்க்காதீர்கள். சூழ்நிலையை திறமையாகக் கையாள உங்கள் தன்னம்பிக்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மாதம் நீங்கள் பணிகளை நிதானமாக ஒழுங்குமுறையுடன் மேற்கொள்ள வேண்டும். வாக்குவாதம் செய்வதை தவிர்த்து சாதுரியமாக நடந்து கொள்ள வேண்டும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : சந்திரன் பூஜைதுலாம் ராசி – தொழில்
தொழில் நடவடிக்கைகளுக்கு இந்த மாதம் சாதாரண அநுகூலமே காணப்படும். உங்கள் தகவல் தொடர்பில் கவனமாக இருக்கவும். தொலை தூரப் பயணங்கள் மற்றும் புதிய மனிதர்களுடன் கூட்டுச் சேர்க்கை பலனுள்ளதாக இருக்கும். அதிகாரம் மற்றும் செல்வாக்கு பெறுவீர்கள். இந்த மாதம் நீங்கள் ஆடம்பரமாக செலவு செய்ய நேரலாம் என்பதால் உங்கள் செலவுகளை கண்காணிக்கவும்.
துலாம் ராசி – தொழில் வல்லுநர்கள்
தொழில் வல்லுநர்களுக்கு இது ஒரு சோதனைக் காலம் ஆகும். சிலரிடமிருந்து ஏமாற்றத்தை எதிர்கொள்ள நேரும். தொழிலில் எதிர்பார்த்த திருப்தி கிடைக்காது. உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கவனமாக இருக்க வேண்டும். சிறிய வாக்குவாதம் முற்றி அது உங்களுக்கு பாதகமாக அமையலாம். எனவே சூழ்நிலையை அனுசரித்து அமைதியாக இருப்பது நல்லது.
துலாம் ராசி – ஆரோக்கியம்
இந்த மாதம் நீங்கள் எலும்பு சம்பந்தமான பிரச்சினையால் பாதிக்கப்படலாம். எனவே முறையான மருத்துவ கவனிப்பு தேவை. அந்தந்த பருவத்து பழங்கள் மற்றும் இரும்பு சத்து நிறைந்த உணவு வகைகள் உட்கொள்வது நல்லது. தேவையற்ற பிரச்சினைகளைப் பற்றி சிந்திப்பதை தவிர்த்து எப்பொழுதும் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். தியானம் மேற்கொள்வதன் மூலம் உங்கள் கவன சக்தி அதிகரிக்கும்.
ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜைதுலாம் ராசி – மாணவர்கள்
உங்கள் செயல்களை வெளிப்படையாக ஆற்றுங்கள். உங்கள் கல்வி சிறு பதட்டத்துடன் தொடரும். எளிதில் கோபமடையும் உங்கள் குணம் காரணமாக நண்பர்களுடன் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். சாதுர்யமாக நீங்கள் படிக்கும் விதத்தினால் நிறுவனத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்சுப தினங்கள: 8th, 9th, 11th, 16th, 17th, 18th, 19th, 22nd 23rd, 27th and 29th
அசுப தினங்கள்: 5th, 7th, 12th, 15th, 21st, 26th and 30th
Tags: 2018 Thulam Rasi Palan June June Month Thulam Palan 2018 Matha Rasi Palan 2018 Thulam Rasi Palangal 2018 June Thulam துலாம் மாத ராசி பலன் 2018 June Month Thulam Palan 2018 2018 Thulam Rasi Palan June Matha Rasi Palan 2018 Thulam Rasi Palangal 2018 June Thulam துலாம் மாத ராசி பலன் 2018
Leave a Reply