மீனம் ராசி – பொதுப்பலன்கள்
இந்த மாத பலன்கள் சாதாரணமாகவே காணப்படும். குறிப்பாக சௌகரியங்களும் அதைப் பெறும் வகைகளும் சாதாரணமாக இருக்கும். சூழ்நிலைகளை புரிந்து கொள்ளும் நம்பிக்கை காணப்பட்டாலும் அதனை வெளிப்படுத்துவதில் பயம் காணப்படும். நீங்கள் உணர்ச்சிவசப்படும் இயல்புடையவராக இருப்பதால் சூழ்நிலைகளை சாதுர்யமாக அணுக முயற்சி செய்யுங்கள். நண்பர்கள் வட்டாரத்தில் மதிப்பு பெருகும். உங்கள் குடும்பத்துடன் சிறு பயணம் அல்லது உல்லாசப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை நீங்கள் வாழ நினைக்கும் முயற்சிகள் பலனளிக்கும். ஆனால் சிறு பதட்டம் காணப்படும். உங்கள் பணியில் உங்களுக்கு திருப்தி காணப்படும். நீங்கள் நீண்ட தூரப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
அனைவரிடத்திலும் வெளிப்படையாக பேசுங்கள். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம் ராசி – காதல் / திருமணம்
இந்த மாதம் உங்கள் துணையுடன் கண்ணியமாக நடந்து கொள்வீர்கள். இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். உங்கள் துணையுடன் நீங்கள் மேற்கொள்ளும் தொடர்பு மூலம் வாழ்வில் முக்கியமான பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளலாம். தம்பதிகள் உறவில் நட்புணர்வு காணப்படும். ஒருவருக்கொருவர் அன்யோன்யத்துடன் இருப்பீர்கள். பல முயற்சிகளுக்குப் பிறகு நீங்கள் உங்கள் பொருத்தமான துணையை தேர்ந்தெடுப்பீர்கள்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் : சந்திரன் பூஜைமீனம் ராசி – நிதிநிலைமை
இந்த மாதம் உங்கள் நிதிநிலை ஒரு சீரான வருமானத்துடன் காணப்படும். என்றாலும் உங்கள் செலவுகளை நீங்கள் கண்காணிக்க வேண்டும். நீண்ட கால முதலீடுகளிலிருந்து பண வரவு பெறுவீர்கள். கொடுத்த கடனை திரும்பப் பெறுவீர்கள். இந்த மாதம் சொத்துக்களை விற்பதன் மூலம் சிறந்த பலன் கிடைக்காது என்பதால் அதனை தவிர்க்கவும்.
நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : குரு பூஜைமீனம் ராசி – வேலை
இந்த மாதம் உங்கள் பணிகளை முடிக்க நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் பொறுப்புகளை சரிவர ஆற்ற வேண்டும். பணிகளை சிறப்பக முடிப்பதன் மூலம் சிறந்த பலன்களைப் பெறலாம்.. உங்கள் அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் நிலையான வெற்றி பெறுவீர்கள். சகபணியாளர்களுடன் தெளிவாக உரையாடவும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : அங்காரக பூஜைமீனம் ராசி – தொழில்
இந்த மாதம் உங்கள் தொழிலுக்கு உகந்த மாதம். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இந்த மாதம் வாடிக்கையாளர்களை விரிவுபடுத்துவதற்கு முக்கியத்துவம் அளியுங்கள். நீங்கள் பொறுப்புடன் பணியாற்றுவதன் காரணமாக நன்மையும் வாடிக்கையாளர்களிடம் நற்பெயரையும் பெற இயலும். பணியில் உங்கள் செயல்திறனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
மீனம் ராசி – தொழில் வல்லுநர்கள்
உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் இந்த மாதம் நீங்கள் பாராட்டும் அங்கீகாரமும் பெறுவீர்கள். இந்த மாதம் உங்கள் தகுதியும் வருமானமும் அதிகரிக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு பதவி உயர்வு பெறுவீர்கள். உங்கள் மன அமைதியை கெடுக்கும் கவலை மற்றும் பயம் உங்களை அண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
மீனம் ராசி – ஆரோக்கியம்
துரித உணவு வகைகள் காரணமாக நீங்கள் வயிறு வலி உபாதைக்கு ஆளாக நேரலாம். வீட்டில் தயாரிக்கும் உணவுகளை உட்கொள்ளவும். உங்களை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உலர் பழ வகை உணவுகளை உட்கொள்ளவும்.
ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜைமீனம் ராசி – மாணவர்கள்
இந்த மாதம் படிப்பில் உங்கள் கவனம் குறைந்து காணப்படும். என்றாலும் உங்கள் மேல் படிப்பில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நிறுவனத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். உங்கள் வெளிப்படையான பேச்சு உங்களின் படிப்பிற்கு வழிகாட்டியாக இருக்கும், பேராசிரியர்களின் இதயத்தை கவரும் விதத்தில் நடந்து கொள்வீர்கள்..
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்சுப தினங்கள்: 1st, 2nd, 3rd, 4th, 8th, 12th, 18th, 19th, 27th and 29th
அசுப தினங்கள்: 7th, 9th, 14th, 16th, 22nd, 23rd, 28th and 30th
Tags: 2018 Meenam Rasi Palan June June Month Meenam Palan 2018 June மீனம் மாத ராசி பலன் 2018 Matha Rasi Palan 2018 Meenam Rasi Palangal 2018 June Month Meenam Palan 2018 2018 Meenam Rasi Palan June Matha Rasi Palan 2018 Meenam Rasi Palangal 2018 June Meenam மீனம் மாத ராசி பலன் 2018
Leave a Reply