2018 June Month’s Rasi Palan for Mesham

மேஷ ராசி – பொதுப்பலன்கள்
இந்த மாதம் சராசரியான பலன்களே கிடைக்கும். நீங்கள் உங்கள் உறவு முறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் கடமைகளை பொறுப்புடன் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் நம்பிக்கைக்குரியவர்களே உங்களுக்கு துரோகம் செய்ய வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விஷயங்களை திறமையுடன் கையாள வேண்டும். நீங்கள் யதார்த்தமான கண்ணோட்டத்துடன் துடிப்புடன் செயல்படுவீர்கள். இதனால் பல பிரச்சினை களிலிருந்து தப்பிப்பீர்கள். சக பணியாளர்கள் ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு இன்னல்கள் தருவார்கள். இந்த மாதம் உங்கள் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அவைகளை நீங்கள் கண்காணிக்க வேண்டும். குடும்பப் பிரச்சினைகளை பொறுமையுடன் கையாள வேண்டும். உங்கள் ஆரோக்கியம் சாதரணமாக இருக்கும். உங்கள் கவன சக்தி அதிகரிக்க தியானம் மேற்கொள்ளுங்கள்.
மேஷ ராசி – காதல் / திருமணம்
நீங்கள் உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்படுவீர்கள். காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்துவதில் உற்சாகமாக இருப்பார்கள். உங்கள் துணையை நீங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதன் மூலம் சிறந்த வாழ்க்கை அமையும். தம்பதிகள் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். திருமணத்திற்கு வரன் பார்த்து நிச்சயிக்குமுன் கவனமுடன் பரிசீலிக்கவும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் : சுக்கிரன் பூஜை
மேஷ ராசி – நிதிநிலைமை
இந்த மாதம் நிதிநிலைமை சுமாராக இருக்கும். நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு ஏதாவது வாங்குவதை தவிர்க்க வேண்டும். உரிய நேரத்தில் பணம் கிடைக்காது. பண விஷயங்களில் கவனமாக திட்டமிடவும். நீங்கள் ஆடம்பர பொருட்கள் மற்றும் குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க செலவு செய்வீர்கள்.
நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : புதன் பூஜை
மேஷ ராசி – வேலை
இந்த மாதம் உங்கள் பணிகளை நீங்கள் கவனமாகச் செய்ய வேண்டும். சிறிய விஷயங்களில் சக பணியாளர்களுடன் தவறான புரிந்துணர்வு காணப்படும். எந்த காரணமும் இன்றி பணியில் தாமதம் காணப்படும். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் காணப்படும். பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க வேண்டும் என்ற பதட்டம் உங்களிடம் காணப்படும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : கணபதி பூஜை
மேஷ ராசி – தொழில்
தொழிலில் உங்கள் பணிகள் தள்ளிப் போவது உங்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தும். தற்போது இருக்கும் தொழில் யுக்திகளை மேம்படுத்துவதன் மூலம் உங்கள் தொழில் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். இந்த மாதம் நிர்வாகம் சம்பந்தமான செலவுகள் அதிகரிக்கும். எனவே அந்தச் செலவுகளை கண்காணிக்க வேண்டும்.
மேஷ ராசி – தொழில் வல்லுனர்கள்
தொழில் வல்லுநர்களுக்கு இது ஒரு சவாலான மாதமாக இருக்கும். நீங்கள் கடினமான பணிகளை குறைந்த நேரத்தில் முடிக்க வேண்டியிருக்கும். உங்களுக்குள் இருக்கும் திறமைகள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உங்களிடம் குழுவில் தலைமை பொறுப்பு வகிக்கும் திறன் காணப்படும். ஆனால் பய உணர்வு உங்களை சிறப்புடன் செயலாற்ற விடாமல் தடுக்கும்.
மேஷ ராசி – ஆரோக்கியம்
இந்த மாதம் உள்ளிருந்து கவனிக்கப்படாத பிரச்சினைகள் உங்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தும். எரிச்சலூட்டும் எண்ணங்கள் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கும். தோல் சம்பந்தமான தொற்றுக்கள் ஏற்படும். நல்ல ஆரோக்கியத்திற்கு பருவ நிலைக்கேற்ற பழங்களை உட்கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை
மேஷ ராசி – மாணவர்கள்
இந்த மாதம் உங்களுக்கு புதிய சூழ்நிலை காணப்படும். அது உங்களுக்கு மகிழ்சிகரமாக இருக்கும். உங்கள் நிறுவனத்தில் புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். உங்கள் நிறுவனத்தால் நடத்தப்படும் விளையாட்டு நிகழ்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்
சுப தினங்கள்: 2nd, 3rd, 4th 5th, 15th, 22nd, 23rd and 30th
அசுப தினங்கள்.: 6th, 11th, 18th, 21st, 28th and 29th

