AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

2018 June Month’s Rasi Palan for Kadagam

dateSeptember 19, 2018
கடக ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் உங்கள் பணிகளை முடிக்க நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். விரைந்து முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டும். உறவினர்களிடம் பேசும் போது தெளிவாகப் பேச வேண்டும். விரைந்து முடிவெடுப்பதன் மூலம் சமூகத்தில் உங்கள் நன்மதிப்பு பாதிக்கப்படும். உங்கள் திறமை மற்றும் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் பெறுவீர்கள். பொது மற்றும் கலை நிகழ்சிகளில் நீங்கள் பங்கு பெறலாம். உறவு முறையில் கவனமாக இருக்கவும். பொறுப்புகளை சரிவர ஆற்றவும். நண்பர்களுடன் உல்லாசப்பயணம் செல்வீர்கள். இந்த மாதம் உங்களுக்கு ஆரோக்கியப் பிரச்சினைகள் காணப்படும். கடக ராசி – காதல் / திருமணம் உங்கள் துணையுடன் உணர்ச்சிப் பூர்வமான போராட்டங்கள் காணப்படும். அதனை சுமூகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் துணையுடன் சுமூகமான உறவை பராமரிக்க வேண்டும். உங்கள் தொடர்பாடல் சிறந்த முறையில் இருக்க வேண்டும். உங்கள் துணையின் தேவைகளை அறிந்து நடந்து கொள்ள வேண்டும். இப்பொழுது நேரம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் திருமண வரன் விஷயத்தில் முடிவெடுக்க நல்ல நேரம். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் : சனி பூஜை 2018-june-months-rasi-palan-for-kadagam கடக ராசி – நிதிநிலைமை இந்த மாதம் உங்கள் நிதிநிலைமை சாதரணமாக இருக்கும். பணப்புழக்கதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. உங்கள் முதலீடுகளிலிருந்து பண வரவு பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். ஆடம்பரப் பொருட்கள் மீதான செலவை கட்டுப்படுத்த வேண்டும். வேலை மற்றும் தொழிலில் சிறந்து விளங்க பரிகாரம் : சுக்கிரன் பூஜை கடக ராசி – வேலை இந்த மாதம் அதிகாரிகளுடன் மோதல்களை தவிர்த்தால் பணியில் நல்ல வளர்ச்சி பெறலாம். உங்கள் சக பணியாளர்களில் சிலர் உங்களை சரித் துவிட முயற்சி செய்வார்கள். உங்கள் மன ஆற்றலை மேம்படுத்தி, முயற்சிகள் செய்து இந்தப் பிரச்சினைகளை நீங்கள் சமாளிப்பீர்கள். வேலை மற்றும் பணியில் வளர்ச்சி பெற பரிகாரம் : அங்காரக பூஜை கடக ராசி – தொழில் இந்த மாதம் நீங்கள் சமூகத்தில் உங்கள் தகவல் தொடர்பாடலை வளர்த்துக் கொள்வீர்கள். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த வருமானம் கண்டு முன்னேறுவீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு தேவையான யந்திரங்களை வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. விரும்பிய பலன்களை அடைய பொறுமையுடன் இருக்கவும். கடக ராசி – தொழில் வல்லுநர்கள் தொழில் வல்லுநர்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சிகரமான மாதம். உங்கள் பணிகளை முடிக்க நீங்கள் உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். நீங்கள் குறைந்த முயற்சியில் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். தொழிலில் உயர் நிலையை நீங்கள் எதிர்பார்க்கலாம். பணியிடத்தில் சக பணியாளர்களிடம் பொறுமையாக இருக்க வேண்டும். கடக ராசி – ஆரோக்கியம் நீங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மூட்டு வலி அல்லது அஜீரணக் கோளாறுகளால் நீங்கள் அவதிப்பட நேரலாம். உடலில் சுண்ணாம்புச் சத்துக் குறைபாடு காணப்படும்.நல்ல ஆரோக்கியம் பராமரிக்க பழ வகைகள் உட்கொள்ளலாம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்திய நாத பூஜை கடக ராசி – மாணவர்கள் இந்த மாதம் மாணவர்களுக்கு சிறந்த மாதம். நீங்கள் உங்கள் செயல்களை ஆற்றலுடன் செய்வீர்கள். ஆசிரியர்களின் பாராட்டு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். பள்ளிகளில் நடக்கும் போட்டிகளில் நீங்கள் பங்கு கொள்வீர்கள். உங்கள் பதட்டத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த மாதம் கல்வியில் கவனம் கூடும். உங்கள் அறிவு மேம்படும். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 1st, 2nd, 3rd, 4th, 11th, 12th, 16th, 17th, 27th and 30th அசுப தினங்கள்: 5th, 6th, 8th, 14th, 15th, 25th and 29th

banner

Leave a Reply

  • Kumaran


    Perfect Prediction

    May 31, 2018