Rahu Ketu Transit 2023 – 2025 : 18-Month Period to Remedy Snake Planet Afflictions & Boost Success, Self-Growth & Balance Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

2018 June Month’s Rasi Palan for Kumbam

April 13, 2018 | Total Views : 1,815
Zoom In Zoom Out Print

கும்ப ராசி - பொதுப்பலன்கள் இந்த மாதம் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். விஷயங்களை அமைதியாக விவேகத்துடன் கையாள வேண்டும். சமூக பொறுப்புகள் காரணமாக நீங்கள் பிஸியாக இருப்பீர்கள். உங்கள் திட்டங்களில் படிப்படியாக வெற்றி பெறுவீர்கள்.நீங்கள் மேற்கொள்ளும் நிதி சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் நல்ல பலன் காண்பீர்கள். தேவையற்ற பயணங்களுக்காக பணம் செலவு செய்வீர்கள். கூடுதல் பணிகளை முடிக்க கூடுதல் நேரம் தேவைப்படும். நீங்கள் திறமை வாயந்தவராக விளங்குவீர்கள். பிரச்சினைகளை தீர்க்கும் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் பெறுவீர்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும். புதிய பணிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் புகழ் மேம்படும். நீங்கள் நன்மை அளிக்கும் பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்கள் ஆரோக்கியம் சாதரணமாக இருக்கும். நீங்கள் உணவு முறையில் செலுத்தும் கவனம் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கும்ப ராசி - காதல் / திருமணம் இந்த மாதம் உங்கள் காதல் வாழ்வு சிறிது மந்தமாக இருக்கும். அற்ப விஷயங்களுக்கெல்லாம் உங்கள் துனையிடத்தில் பதட்டம் கொள்ளாதீர்கள். உங்கள் துணையிடம் உங்கள் காதலைக் கூற இது உகந்த நேரம் அல்ல. தம்பதிகள் சுமூகமாக செயல்பட வேண்டும். குடும்பப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும். காதல் வாய்ப்புகளை பரிசீலித்து தகுந்த துணையை தேர்ந்தெடுக்க வேண்டும். திருமண வாழ்வில் நல்லிணக்கம் மேம்பட பரிகாரம் : புதன் பூஜை 2018-june-months-rasi-palan-for-kumbam கும்ப ராசி - நிதிநிலைமை ஒன்று மாற்றி ஒன்று என ஏதாவது ஒரு காரணம் காட்டி உங்கள் குடும்பத் தேவைகளுக்காக நீங்கள் அதிக பணம் செலவு செய்வீர்கள்.உங்கள் நிதிநிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். அதிகரிக்கும் செலவுகளை உங்களால் கட்டுபடுத்த இயலாது. உங்கள் அசையா சொத்தின் பராமரிப்பிற்காக நீங்கள் பணம் செலவு செய்ய நேரும். சிறிய பயணம் காரணமாக உங்கள் செலவுகள் கூடும். நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : கேது பூஜை கும்ப ராசி - வேலை இந்த மாதம் உங்கள் பணியில் நன்மை தரும் மாற்றங்கள் காணப்படும். அதன் மூலம் பண வரவும் அங்கீகாரமும் கிடைக்கும். இந்த மாதம் நீங்கள் அதிகாரப் பூர்வமான முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு பெறுவீர்கள். பணியிடத்தில் நற்பெயர் பெறுவீர்கள் . வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : சனி பூஜை கும்ப ராசி - தொழில் உங்களின் புதிய செயலாக்கங்கள் மூலம் இந்த மாதம் தொழிலில் முன்னேற்றங்கள் காண்பீர்கள். உங்கள் செயல்களை கவனமாக திட்டமிடவும். உங்கள் தன்னம்பிக்கை மற்றும் உங்கள் நிதி வளர்ச்சி மூலம் உங்கள் இலக்கில் வெற்றி பெறுவீர்கள். தேவைப்படும் சமயத்தில் உங்கள் கூட்டாளி மற்றும் சமூக அங்கத்தினர்கள் மூலம் பலன் பெறுவீர்கள். கும்ப ராசி - தொழில் வல்லுநர்கள் இந்த மாதம் சிறிய அளவில் பலன் காண்பதற்குக் கூட நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். பணி மாற்றம் அல்லது இட மாற்றம் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். சக பணியாளர்களுடனான தவறான புரிந்துணர்வு உங்களுக்கு கவலை அளிக்கும். தொழில் தொடர்புகளில் பாதிப்பு காணப்படும்.உங்களால் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது. கும்ப ராசி - ஆரோக்கியம் காலந்தவறிய உணவு முறை காரணமாக உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஓய்விற்கு முக்கியத்துவம் அளியுங்கள். அது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். நீங்கள் உங்கள் பணிகளை ஆற்றலுடன் செய்வீர்கள். மன அமைதிக்கு தியானம் மேற்கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை கும்ப ராசி - மாணவர்கள் இந்த மாதம் மாணவர்களுக்கு சாதாரண மாதமாக இருக்கும். உங்கள் இலக்குகளை முடிக்க நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். உங்கள் முயற்சி மற்றும் உங்கள் செயல்கள் உங்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தித் தரும். நம்பிக்கையுடன் செயல்படுங்கள். எந்த தயக்கமுமின்றி உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள். நிறுவனத்தில் நட்பான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 1st, 5th, 11th, 16th, 17th, 18th, 19th, 25th, 26th, 27th and 29th அசுப தினங்கள்: 3rd, 7th, 14th, 20th 22nd, 24th 28th and 30th

Leave a Reply

Submit Comment