விருச்சிகம் ராசி – பொதுப்பலன்கள்
இந்த மாதம் உங்களுக்கு பலன்கள் கலந்து காணப்படும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகளை அதிகரிக்கச் செய்யும் உங்கள் மனநிலையைக் கட்டுப்படுத்த வேண்டும். உறவினர்களுடனான உங்கள் உறவு பதட்டத்தை உண்டாக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களோடு வாதாடுவார்கள். நீங்கள் ஒரு சில சமரசங்களைச் செய்ய வேண்டி இருக்கும். காலம் கடந்து செல்லும் வரை அமைதியோடு இருங்கள். முக்கியமான வேலைகளில் சில தேவையில்லாத தாமதங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சூழ்நிலைகள் உங்களுக்குச் சாதகமானதாக இருக்காது. உங்கள் வேலையை முடிக்க நீங்கள் சிறப்பாக முயற்சி செய்வீர்கள். ஆனால் குறித்தநேரத்தில் உங்களால் முடிக்க இயலாது. மன உளைச்சலிலிருந்து விலகி நிற்க வேலையில் ஈடுபாட்டுடன் இருங்கள். உங்கள் உடல்நிலை சராசரியாக காணப்படுகின்றது. சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
விருச்சிகம் ராசி – காதல் / திருமணம்
இந்த மாதம் சிறிது பதட்ட நிலையும் உறவில் சில குழப்பங்களும் காணப்படும். உறவுகளின் தொந்தரவுகளால் இந்த மாதம் கொஞ்சம் மன அழுத்தத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் துணையோடு சிறிய விஷயங்களுக்கு விவாதம் செய்து உங்களுடைய நன் மதிப்பை குறைத்தக் கொள்ள நேரிடும். நேர்மறையாக இருங்கள். உங்கள் துணையின் கருத்துக்களுக்குப் பதில் அளிக்காதீர்கள். உங்கள் தவறுகளை ஒத்துக்கொள்வது உங்களுடைய மரியாதையைக் காப்பாற்றும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜைவிருச்சிகம் ராசி – நிதி நிலைமை
இந்த மாதத்தில் நிதிநிலைமையில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும். அவசரக் காலங்களில் வைப்பு நிதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கும். உங்கள் செலவுகளைக் குறையுங்கள். ஆடம்பரத் தேவைகளை தள்ளிப்போடுங்கள். உங்கள் நண்பர்கள் உங்கள் நிலையைப் புரிந்து கொண்டு நிதி உதவி செய்வார்கள்.
நிதிநிலைமை மேம்பட பரிகாரம்: புதன் பூஜைவிருச்சிகம் ராசி – வேலை
இது உங்கள் செயல்கள் மற்றும் பொறுப்புகளில் தெளிவு பெறுவதற்கான ஒரு மாதமாகும். உங்கள் வேலையில் ஒரு குற்றச்சாட்டை சந்திக்க நேரலாம். இதனால் உங்களுடைய மேலதிகாரிகளுடன் தவறான புரிந்துணர்வு உருவாகலாம். நீங்கள் குறுகிய காலத்திற்கு ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் பணி செய்ய நேரலாம். இருப்பினும் கடுமையான சூழ்நிலைகளிலும் கூட உங்கள் தன்னம்பிக்கையை இழக்காதீர்கள். வேலையில் கவனத்தோடு இருக்க வேண்டும். உங்கள் வேலையில் சிறப்பாக செயல்பட வேண்டும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சூரியன் பூஜைவிருச்சிகம் ராசி – தொழில்
இந்த மாதம் உங்கள் தற்போதைய திட்டங்களில் இருந்து உண்மையான முடிவுகளைப் பெற கடினமாக முயற்சி செய்ய வேண்டும். உங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்வதில் வெளிப்படைத்தன்மையைக் பராமரியுங்கள். இது எல்லாவிதமான பிரச்சினைகளிலிருந்தும் வெளியே வர உதவியாக இருக்கும். உங்கள் வழக்கமான தொடர்பாடல் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை அளிப்பதோடு, அவர்களின் பணிகளை சரியான நேரத்தில் நிறைவு செய்து தருவீர்கள் என்ற அபிப்பிராயத்தை உருவாக்கும்.
விருச்சிகம் ராசி – தொழில் வல்லுநர்
இந்தக் காலம் உங்கள் தொழிலை பொறுத்தமட்டில் அனுகூலமாக இருக்காது. அதனால் எச்சரிக்கையுடன் இருங்கள். சில தவறான தகவல் தொடர்புகளை கடுமையாக முயற்சி செய்து நீக்குவீர்கள். உங்கள் பணிகளில் முழு நேர்மையுடன் தொடர்ந்து ஈடுபடுங்கள். இந்த மாதத்தில் பயணம் செய்வதற்குத் தயாராகுங்கள்.
விருச்சிகம் ராசி – ஆரோக்கியம்
உங்கள் உடல்நிலை இந்த மாதத்தில் சராசரியாக இருக்கும். நீங்கள் கண் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் எரிச்சலுட்டும் தொந்தரவுகளால் அமைதியற்ற மனநிலையில் இருக்க நேரிடும். அமைதியாக இருக்கவும் வேலையில் கவனத்தை அதிகரிக்கவும் தியானப் பயிற்சி மேற்கொள்வது நல்லது.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜைவிருச்சிகம் ராசி – மாணவர்கள்
இந்த மாதம் உங்களுக்கு நன்மை தரும் காலம் ஆகும். ஆனால் சிறிது பதட்டம் காணப்படும். நன்மைகளைப் பெற சிறிது கால தாமதம் ஆகலாம். மேற்படிப்பில் நல்ல முடிவுகளை அடைவதற்கு இந்த மாதம் மிகச் சரியான மாதமாக இருக்கும்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்சுப தினங்கள்: 4, 7, 8, 13, 14, 15, 16, 24, 25 மற்றும் 31 வது
அசுப தினங்கள்: 6, 17, 19, 22, 29, 30 மற்றும் 30 வது
Tags: 2018 Viruchigam Rasi Palan August August Month Viruchigam Palan 2018 Matha Rasi Palan 2018 Viruchigam Rasi Palangal 2018 August Viruchigam August Month Viruchigam Palan 2018 2018 Viruchigam Rasi Palan August Matha Rasi Palan 2018 Viruchigam Rasi Palangal 2018 August Viruchigam விருச்சிகம் மாத ராசி பலன் 2018
Leave a Reply