தனுசு ராசி – பொதுப்பலன்கள்
இந்த மாதம் உங்களுக்கு முழுமையான வகையில் அனுகூலமாக இருக்காது. உங்கள் கடின உழைப்பின் மூலமே வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கையற்ற காரணத்தால் உங்கள் செயல்திறன் பாதிக்கப்படும். பதட்டமற்ற அமைதியான மன நிலையைப் பெற தியானப் பயிற்சி உங்களுக்கு உதவியாக இருக்கும். குடும்ப வாழ்க்கை அவ்வளவாக அமைதியாக இருக்காது. உங்களது குடும்ப உறுப்பினர்கள் சகிப்புத்தன்மையற்ற வகையில் நடந்து கொள்ளலாம்.மெதுவான நிலையான வெற்றியை எதிர்பார்க்கலாம். இந்த மாதத்தில் வேலை ரீதியான பயணம் இருக்கலாம். சமூக வட்டத்தில் உயர்தர மக்களைச் சந்திக்க நேரிடும். புதிய சொத்துகள் வாங்க வாய்ப்பு உண்டு அல்லது உங்கள் சொந்த முயற்சிகளால் பணத்தைச் சேர்த்து வைப்பீர்கள். உங்கள் ஆரோக்கிய நிலை கவலை அளிக்கக்கூடியதாக இருக்கலாம்.
தனுசு ராசி – காதல் / திருமணம்
நீங்கள் உணர்ச்சிப் பூர்வமாக நடந்து கொள்வீர்கள். அதனால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படலாம். ஒரு குடும்ப பயணம் உங்களுக்கு மிகுந்த திருப்தியை அளிக்கும். உங்கள் துணையிடம் கவனக்குறைவாய் இருப்பதை தவிருங்கள். உறவு நிலையாக இருப்பதற்கு கண்ணியத்தை கடைப்பிடியுங்கள். உங்கள் துணைக்கு அளிக்கும் வாக்குறுதிகளை ஒன்றிற்கு இரண்டு முறை சரிபார்த்து அதனை விரைவில் நிறைவேற்றுங்கள்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: செவ்வாய் பூஜைதனுசு ராசி – நிதி நிலைமை
இந்த மாதத்தில் நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கவனக்குறைவால் எதிர்பாராத இழப்புகள் இருக்கலாம். அவசரமான கொள்முதல் மற்றும் அபாயகரமான முதலீடுகளைத் தவிர்க்கவும். இது லாபத்தைத் தாரமல் போகலாம். உங்கள் வருவாய் அதிகரிக்கும், ஆனால் உங்கள் ஆடம்பரச் செலவால் நிதியில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்.
நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: சனி பூஜைதனுசு ராசி – வேலை
இந்த மாதம் உங்கள் பணியில் முன்னேற்றம் மெதுவாக காணப்படும். பணிகளில் தாமதங்கள் ஏற்படும். உங்கள் சகஊழியர்களுடன் வாதங்களைத் தவிர்க்க வேண்டும். சிறு பிரச்சினைகளில் விவாதம் செய்யாதீர்கள். வேண்டாம். உங்கள் வேலையில் உற்பத்தித் திறனோடு இருங்கள். சரியான நேரத்தில் பணிகளை முடிப்பதால் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சூரியன் பூஜைதனுசு ராசி – தொழில்
இந்த மாதம் உங்கள் திட்டங்கள் திறமையாகச் செயல்படும். நீங்கள் குறுகிய பயணங்களுக்குச் செல்ல நேரிடலாம். அங்கு நீங்கள் புதியவர்களை சந்திக்கலாம். பணிகளை நிறைவு செய்து அதனால் கிடைக்கும் பணத்தின் மூலம் நீங்கள் திருப்தி அடைவீர்கள். உங்கள் கூட்டாளிகளுக்கு சில சிறப்புச் சலுகைகள் அளியுங்கள். லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை உங்களுடைய கூட்டாளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தனுசு ராசி – தொழில் வல்லுநர்
தொழிலில், வேலை அழுத்தம் அதிகரிக்கும். பொறுமையுடன் இருங்கள். எதிர்காலத்தில் சிக்கல்களை தீர்க்கச் சிறந்த தீர்வாக இது இருக்கும். உங்களுடைய மேலதிகாரிகளால் உங்களுக்குப் பிரச்சினைகள் இருக்கலாம் மற்றும் சில ஏமாற்றங்கள் இருக்கலாம். அறிவார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள், இது உங்களுடைய தனிப்பட்ட திறமைகளை அதிகரிக்கச் செய்யும்.
தனுசு ராசி – ஆரோக்கியம்
இந்த மாதம், உங்கள் உடல்நிலை சாதாரணமாக இருக்கும். உணவு மற்றும் ஓய்வு குறித்த உங்கள் அலட்சியம் திடீர் சிக்கல்களை உருவாக்கக்கூடும். முறையான கட்டுப்பாட்டு உணவைப் பராமரிக்கவும், வீட்டில் செய்த உணவைத் தேர்ந்தெடுங்கள். அன்றாடம் உடற்பயிற்சி செய்வதால் உங்களை வலுவாக வைத்துக்கொள்ள முடியும்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜைதனுசு ராசி – மாணவர்கள்
இது உங்களுக்கு ஒரு பிரகாசமான மாதம். நீங்கள் அறிவுக் கூர்மையுடன் விரைந்து கற்பீர்கள். உங்கள் அறிவார்ந்த தன்மையுடன் விரைவாக உங்கள் படிப்பை முடிப்பீர்கள். உங்கள் பரந்த மனப்பான்மை விஷயங்களை திறம்பட புரிந்துகொள்ள உதவும். உங்கள் பேராசிரியர்களின் ஆதரவுடன் நீங்கள் இன்னும் அதிகமான அறிவைப் பெற முடியும்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்சுப தினங்கள்: 1, 7, 8, 14, 15, 16, 17, 18, 21, 22, 26, 27 மற்றும் 28 வது
அசுப தினங்கள்: 4, 6 , 11, 19 , 24 , 29 மற்றும் 30 வது
Tags: 2018 Dhanusu Rasi Palan August August Month Dhanusu Palan 2018 Matha Rasi Palan 2018 Dhanusu Rasi Palangal 2018 August Dhanusu August Month Dhanusu Palan 2018 2018 Dhanusu Rasi Palan August Matha Rasi Palan 2018 Dhanusu Rasi Palangal 2018 August Dhanusu தனுசு மாத ராசி பலன் 2018
Leave a Reply